அற்புத உணவுகள் ஒரு தடவையாவது சாப்பிட்டு பாருங்க!

ஞாபக சக்தி என்பது ஒரு அற்புதமான வரப்பிரசாதம் மனிதனுக்கு இது மட்டும் இல்லை என்றால் மனிதனுக்கு ஐயோ என்ற வார்த்தையை மட்டும் தான் சொல்ல முடியும் அவன் வாழ்நாளில் அவன் வாழ்வதே வீண் இந்த ஞாபக சக்தி நமக்கு அதிகப்படுத்திக் கொள்வது மிகவும் சிறப்பு ஆதிகாலத்தில் மனிதர்கள் கவனகர் களாக இருந்தார்கள் இப்போது அப்படிப்பட்ட மனிதர்கள் பிறப்பதும் இல்லை உருவாக்குவதும் இல்லை உருவாக்கப்படுவதும் இல்லை காரணம் இந்த பிரபஞ்சத்திற்கு தான் தெரியும் ஆனால் நாம் சத்துள்ள உணவுகளை உட்கொள்ளவேண்டும் அதிக விழிப்புணர்வு அதிக கவனத்தோடு தியானம் போன்ற சில விஷயங்களை நம் வாழ்க்கையில் செய்வோமானால் அதிக ஞாபக சக்தி திறனோடு மனிதனாக வாழ முடியும் அதாவது கவனகராக வாழ முடியும் ஆதலால் இந்த சத்துள்ள உணவுகளை எடுத்துக்கொள்வோம் கவனகர்களாக முடியுமா முடியாதா ஞாபக சக்தி திறனோடு மனிதனாக வாழலாமே முயற்சி செய்து பாருங்கள் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உண்ணுங்கள் ஆரோக்கியமாக வாழுங்கள்

ஊட்டச்சத்து உணவுகள் 

1. வால்நட் (அக்ரூட்) பருப்புடன் அத்திப்பழத்தைச் சேர்த்துச் சாப்பிடவும்.

2. நெல்லிக்காய் மூளைக்குச் சக்தியூட்டுகின்றது. (அ) நெல்லிக்காய்த் தூள் நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும். ஒரு டீஸ்பூன் தூளில் – உடல் பருமனாக உள்ளவர்கள் தேன் கலந்து 2 வேளைகள் சாப்பிட்ட பின்பு சாப்பிடவும்.

(ஆ) உடல் மெலிந்துள்ளவர்கள். ஒரு டீஸ்பூன் தூளில்

1 டீஸ்பூன் நெய்விட்டு அரை டீஸ்பூன் தேன் கலந்து

சாப்பிடவும் 2 வேளைகள்.

3.கோரைக் கிழங்கு, லவங்கப்பட்டை / தனித்தனியாகத்

தூளாக்கவும். 100கிராம் சுக்கு, மிளகு – 50 கிராம் பொடியாக்கி, தேன் 200 மில்லி எடுத்துக் காய்ச்சி அதில் இந்தப் பொடிகளைப் போட்டுக்கிளறி எடுக்கவும். டீஸ்பூன் காலை, மாலை சாப்பிட்டபின்பு சாப்பிடவும்.

4.காரட் சாற்றில், சூடான பால் கலந்து, சிறிது தேன் கலந்து, பனங்கற்கண்டு சேர்த்துக் குடிக்கவும். 5. வில்வப் பொடி கடையில் கிடைக்கும். 1 டீஸ்பூன்

பொடியை பாலில் கலந்து 2 வேளைகள் சாப்பிடவும்.
வசம்பைச் சுட்டுக்கரியாக்கவும். அந்தத் தூள் 100கிராம் சர்க்கரை 250கிராம் பாகுகாய்ச்சி அதில் வசம்புக் கரித்தூளைப் போட்டுக் கிளறி அரை டீஸ்பூன் காலை மாலை சாப்பிடவும்.

7. துளசிச் சாற்றில் கற்கண்டைக் கலந்து குடிக்கவும். 8. வல்லாரை இலைகளின் சாற்றில் அரிசி திப்பிலியை ஊறவிடவும் பின்னர் வெய்யிலில் சாப்பிடவும். காய்ந்த திப்பிலியைத் தூளாக்கவும். 1 டீஸ்பூன் தூள் 2 வேளைகள் தண்ணீருடன் சாப்பிடவும்.

9. சிறுகீரைச் சமூலம், மிளகுப்பொடி, உப்பு, நெய்கலந்து ஒரு மண்டலம் சாப்பிடவும். புத்திக்கூர்மை ஏற்படும்.

மூளைக்குச் சக்திதரும் வைட்டமின்கள் வைட்டமின் பி: மூளையின் சக்தி குறைகிறது என்று ஞாபக சக்திக் குறைபாட்டையே சாதாரணமாகக் கூறுவார்கள். மூளை நன்கு செயல்பட இந்த வைட்டமின் உதவுகின்றது.

பி-1 (தியானமன்)

இதை ஒரு நாளைக்கு 2 வேளைகள் சாப்பிடலாம். மனம் தெளிவாகவும் ஆற்றலும் அதிகரிக்கும்.

பி-3 (நியாசின்) இரத்தச் சிவப்பணுக்களை அதிகரிக்கின்றது. பிராணவாயு அதகரிக்கும்.பி-12: மனத்தில் தடுமாற்றம். முதியோர்களின் மன அழுத்தம் குறையும் – பதற்றம் தீரும்.

வைட்டமின் ‘சி’

மூளையிலுள்ள செல்களுக்கு பாதுகாப்புத் தருகின்றது. ஞாபகசக்தி அதிகரிக்கும்.

வைட்டமின் பி-12

மூளைக்கு அதிக சக்தியூட்டுகிறது. ஞாபக

சக்தி இழப்பைத் தடுக்கும்.

வைட்டமின் பி-6

வாழைப்பழம், கோதுமைத் தவிடு, தானியங்கள், காரரிசி இவற்றில் உள்ளது. சிந்திப்பதில் தெளிவை ஏற்படுத்தும்.இது போன்ற சத்துள்ள ஊட்டச்சத்து நிறைந்த உணவை தினமும் எடுத்துக் கொள்ளுங்கள் பிறருக்கும் கொடுங்கள் ஆரோக்கியமாக வாழுங்கள் நன்றி அடுத்த பதிவில் வேறு ஒன்று  வித்தியாசமாக பார்ப்போம்

Vinodhan, 7010054619

Shopping Cart