நிகழ்வுகளின் உருவாக்கம், வாழ்வின் நிஜங்கள், ஆன்மாவின் தன்மை, இவற்றை இடைவிடாமல் தேடுதல், அறிவைப் பற்றிய ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு இவையெல்லாம் கொடுக்கும், அபூர்வமான. உணர்வுபூர்வமான அறிவுதான், ‘ஞானம்’ எனப்படும்.,

  • நான், எனது’, என்னும் எண்ணங்களிலிருந்து முழுவதுமாக விடுபடல்.
  • நாம் மிகவும் விரும்பும் செயல் என்னவென்று கண்டுபிடித்து அதைச் செய்தல் அவசரம், கவலை ஏதுமில்லாமல், அதேசமயம்ஒரு நொடிகூட வீணாக்கமல் செயல்படுதல்

  • வந்தவை, வருபவை பற்றி கவலை கொள்ளா 30 இந்த நொடிப்பொழுதை முழு கவனத்துடன செலவிடுதல்.

  • எல்லாமே நாம் தேர்ந்தெடுத்தபடிதான் நடக்கிறது, எதேச்சையாக ஏதும் நடக்காது” என்ற அறிவு.

  • ஆன்மீகப் பாடம்தான் முதற்கண் பாடம் என்று அறிவது.இப்பூவுலகில், முழுமையான ஞானம் யாரும் அடைய இயலாது சந்தேகமின்றி அறிதல். என்ற உண்மையை அனைத்தும் ‘நீயே’ என்ற அறிவு.

  • எந்த எதிர்பார்ப்பும் இல் ல், பிரபஞ்சத்தில் எல்லா ஜீவராசிகளிடத்தும் காட்டும் கனிவுதான் நட்பு. இதுவும் ஞானம்

  • காருண்யம் தான் ஞானம். பௌதிக நட்புதான் காருண்யம். குறை கூறாமல் இருத்தல்.

  • குருவிடம் பணிவும், மரியாதையும் கொண்டு மௌனமாக இருத்தல்.கருத்துள்ள, மனமார்ந்த எண்ணம், மனதை மாறச் செய்யும். மனமாற்றமே ஞானம்.

  • எந்த சூழ்நிலையிலும், அறிவுப்பூர்வமாக, பக்குவமாக, செயல்படுவது. வெளி உலகில் எவ்வளவு ஆரவாரம் இருப்பினும், மனதினுள் அமைதியுடன் திகழ்வது. 

  • நம் ஒவ்வொருவரும், பிரமிக்கத்தக்க, எல்லையற்ற ஆற்றல் பெற்றவர்கள் என்பதை அறிவது

  • நாம் தான், நம் முன்னேற்றத்திற்கு வழிவகுத்துக்கொள்ள வேண்டும். இதற்காகவே நாம் இங்கு தோன்றியிருக்கிறோம்.

  • எப்போதும், அஞ்சா நெஞ்சம் கொண்டு, உண்மையில்லாதவற்றிற்குத் தலைவணங்காமல் இருப்பதே ஞானம். 

  • ஒரு குழந்தையைப் போல்,  ஓர் உணர்ச்சியிலிருந்து மற்றொன்றுக்கு மிக எளிதாக மாறும் தன்மை.

  • சுடுசொல்லையும், துன்பத்தையும் தாங்கும் மனவலிமையை உண்டாக்கிக் கொள்வது. நம்முடைய தன்னம்பிக்கை, தனித்தன்மை இவற்றை இழக்காமல் எல்லோருடனும் எளிதாகப் பழகுதல் 

  • நம்முடைய இயல்பான உணர்ச்சிகளை அடக்கி வைக்காமல் இருப்பது.  இறப்பு இல்லை என்பதை அறிவது.எல்லா ஞானத்திற்கும் ஒரே வழி தியானம் தான். ஞானம் என்பது படைப்பிற்கு சமமாகும். ஆகவே, ஞானிகள் படைப்பாளிகள் ஆவார்கள்.

  • பேசுவதற்கு முன்னும், பேசிய பின்னும் தீர ஆலோசிப்பது

  • புதிதாக சாத்திரங்களை அறியும்போதும், அறிவு வளரும்போதும், நம் பழைய பழக்கவழக்கங்கள் மாறிவிடும். இது இயற்கை.

  • சக்திதான் பொருள் வடிவாகிறது. எண்ணம் சக்தியை உருவாக்குகிறது என்பதை உணர்வது. சைதன்யம், எண்ணம் தோன்றக் காரணமாக உள்ளது. எல்லாவற்றிற்கும் ஆதி மூலம் சைதன்யமே!
  • வாழ்நாள் முழுவதும் அகங்காரம் அற்று வாழ்க்கை வாழ்வதே ஞானம்
  • எனக்கு ஞானம் கிடைத்துவிட்டது என்று கூறிக்கொண்டு திரிபவர்கள் நான் ஞானம் அடைந்துவிட்டேன் என்று கூறிக்கொண்டு திரிபவர்கள் ஞானம் அடைந்தவர்கள் அல்ல
  • ஞானம் என்பது இயற்கை இயற்கை மனிதனுக்குத் தரும் அற்புத அறிவு மனிதன் தனி மனிதன் அல்ல அவன் இயற்கை என்று இயற்கை தரும் புரிதலே ஞானம்

Vinodhan,

Shopping Cart