“தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சிதம்

மெய்வருத்த கூலி தரும்” திருக்குறள்

சித்தர்கள் தயவின்றி வாசியை உணரமுடியாது. வேதங்களில் கூட விவரிக்காத வாசியை சித்தர்கள்தான் விளக்கி சாகாக்கல்வி என போதிக்கிறார்கள். வாசியை உணராத மாந்தர்கள் அதனை பல வழிகளிலும் வீணாக்கி பிறப்பிறப்பில் வீழ்கிறார்கள். வாசியை உணர்ந்த சித்தர்களே அதை எவ்வகையிலும் வீணாக்காது யோக ஞானத்தால் தம் உடல் உயிரை இணைத்து சோதியில் ஊடுறுவி இறவா நிலை அடைந்துள்ளார்கள். சில பேர் சொல்லுவார்கள் இந்த கலை சிலருக்கு மட்டும்தான் வரும் ஜாதக ரீதியா பிறந்தவர்களுக்கு மட்டுமே இந்த வாசியோகம் கலை சித்தியாகும் என்று ஆனால் திருவள்ளுவரின் வாக்கின்படி முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும் இதை மட்டும் மனதில் நிறுத்திக் கொண்டால் போதும் கண்டிப்பாக இந்த சித்தர்களின் அரிய வகையாக பயன்படுத்துகிற சாலையில் உள்ள வாசியோகத்தை கற்றுக்கொள்ள முடியும் அதுபோலவே நாமும் சித்தர்கள் தயவைப் பெற்று இரகசியக் கலையான வாசியை அறிந்து இடைவிடா முயற்சியுடன் பயிற்சி செய்து வந்தால் இறவா நிலை அடையலாம். அல்லாது போனாலும் வாசியினால் நம் பிறவியில் புண்ணியத்தை கூட்டலாம்.

உயிர் காற்றிலிருந்து உடம்பு வளர்ந்தது. அப்பிராணனிலிருந்து தனஞ்செயன் என்ற காற்று பிரிந்து உடம்பில் மூலாதாரத்தில் ஒடுங்கியது. அக்காற்றை கருத்தோடிருந்து வாசியோகத்தால் இருத்தி எழுப்பி தலையில் ஏற்றி உயிரில் சேர்க்க வல்லவரான யோகி கிழவராக இருந்தாலும் இளமையோடே இருப்பர். அவர்கள் உடம்பு இதனால் சிவந்திடும். இது இறையருளால் என்னுளே தரித்து நிற்கும் சிவ சக்தி திருவடி என்பதே உண்மையாகும் என்கிறார் சிவவாக்கியர். இந்நிலை வாசியை அறிந்த உடனே கிடைத்துவிடாது. இவ்வாசிப்பயிற்சியை பொறுமையுடன் நம்பிக்கையுடன் முறையாக பழகிவர வாசி லயமாகும். தியானம கை கூடி நீடித்த பயன் கிடைக்கும். நிறைவேறும். எண்ணிய எண்ணங்கள் யாவும் இறையருளால்  வாசியை லயமாக்கவும் கைவல்யப்படுத்தவும் சித்தர்கள் இரண்டு வருடகாலங்கள் இப்பயிற்சியை இடைவிடாது செய்ய வேண்டும் என்று கூறுகிறார்கள். அதற்கு அவர்கள் வாசியோக பயிற்சிகளை ஐந்து நிலைகளாக போதிக்கின்றனர். அவைகள் குயில்கூத்து, மயில்கூத்து, ஞமலிக்கூத்து. மலைக்கூத்து, சர்ப்பக்கூத்து எனப்பெயர் பெறும். இவைகள் யாவையும் அறிந்து முறையாக பயின்று வந்தால் வாலையின் கிருபையினால்வாசி லயமாகி அவ்வாசியேகுருவாகி மெய்வழி காட்டும். வாசியை தவிர வேறு எவராலும் இறைவனைக் காட்டி வைத்து இறவாநிலை தரமுடியாது. எவ்வாறு இருப்பினும் உடம்பையும் உயிரையும் பாதுகாத்து நோய் நொடிக்கு ஆளாக்காது வைக்கும் வாசியினால் வரும் பலன்களை அடையுங்கள். அதனால் புண்ணியங்கள் உங்கள் பிறவியில் சேருமேயன்றி குறையாது. இதற்குகாலம் வந்தால் பார்த்துக் கொள்ளலாம் என அலட்சியப்படுத்தி இப்பிறவியையும் வீணாக்கிவிடாதீர்கள். இளமையிலேயே இதைக் கைக்கொண்டு புண்ணியக் கணக்கைபெருக்கி பலன் பெறுங்கள். இதைவிடுத்து எல்லாக்கர்மாக்களையும் முடித்து விட்டு இதைத் தேடலாம் என எண்ணினால் உங்களுக்கு வயதாகிவிடும். ஆதன்பின் வாசியோகம் செய்ய உங்கள் உடம்பு ஒத்துழைக்காது. ஆதலால்வாசியோகத்தைகாலத்தே அறிந்து பயிர் வாகியோகத்தை இல்லறவாசிகள் பயிலக்கூடாது என்றும் துறவிகளே செய்யதகுந்தவர்கள் என்று கூறுவோர் வாசியை அறியா தோசிகள். தன்னை அறிவதற்கு இல்லறம் தடையல்ல. இல்லறத்தில் இருந்து கொண்டே இவ்வாசியினால் இறவாநிலையை அடைந்து நமக்கும் வழிகாட்டுபவர்கள் சித்தர்களே.

பயிற்சியின் அனுட்டானங்கள் வாசியோகப்பயிற்சியும் தியானமும் அதிகாலையில் எழுந்து செய்வதுவே உத்தமம். காலைக்கடன்களை முடித்து தந்தசுத்தி, நேத்ரசுத்தி, கபசுத்தி போன்றவைகளை செய்தபின் நீடாரடவும். இச்சுத்திகளை தச தீட்சை நூலில் விளக்கமாக தெரிவித்துள்ளோம். நீராடியபின் பூஜை அறையிலோ அல்லது தனி இடத்திலோ தரையில் ஏதேனும் விரிப்பைபோட்டு ஆசனத்தில் அமருங்கள்.பின் இறைத்துதிப் பாடல்களை மெய் பக்தியுடன் மெய்யுருகிப் பாடுங்கள். இந்நிலையில் இறைக்காதலாகி கண்ணீர் சிந்தி அழுங்கள். இதற்கு திருவாசகம் மிகவும் நன்று.

குயில் கூத்து

            இதுவே வாசியோகத்தின் முதல் பயிற்சி. முன் சொன்ன இயம நியமங்களை ஒழுங்கு முறையாக முடித்தபின் வாசியோகப் பயிற்சியைத் செய்வதுவே வஜ்ராசனத்தில் தொடங்குங்கள். இதற்கு ஆசனம் வஜ்ராசனம். கோவிலிலும் பெரியோர் காலிலும் விழுந்து வணங்குவதைப் போல் குனிந்து நிமிர்ந்து தொடர்ந்து செய்யும் யோகப்பயிற்சி. இதனை உணர்த்துவதற்கே நமஸ்காரம் என்பது. இப்பயிற்சியின் நுட்பம். அவர்களும் இப்பயிற்சியில் குனியும் போது ‘அல்லா’ என்றும் நிமிரும் போது ‘ஹீ’ என்பதை வாயால் சொல்லியே இவ்வணக்கத்தைச் செய்வார்கள். அல்லா ஹீ என்பதே அஉ என்ற எட்டிரண்டு மந்திரமே. அவர்கள் இந்த வாசியின் தந்திர இரகசியத்தை அறியாததால் இது வெறும் தொழுகையாக மட்டும் செய்யப்படுகிறது. ஆனால் நபிகள் நாயகமோ இக்கலையைசித்தர்களிடம்பெற்று அல்லாஹீ என்ற மந்திரத்தால் உண்ணாக்கில் ஊதி தான் அடைந்த இறை இன்பத்தை அனைவரும் அடையவேண்டியே இத்தொழுகையை இஸ்லாத்தின் கடமையாக அமைத்தார். எவ்வாறே ஆயினும் வாசியை தனக்குள்ளே உணர்ந்து இறைவனை அறிய வேண்டும் என்ற இஸ்லாத்தில் தொழுகையின் போது நமாஸ் செய்வதுவே நன்னோக்கம் கொண்டே இவ்வழி வகுத்தார். இதனை அறிந்துமெய்ப்பாடுபட்டு மெய்ப் பொருளையும் அறிந்து சும்மா இருந்து சுகம் காண்பவர்களே சூபி எனப்பட்டனர். இவ்வாசியை அறிந்து லாஹீத்து. மாஹித்து, மலஹீத்து, ஜெபஹித்து, பர்ஹித்து என ஐந்து வணங்கங்களையும் முறையாகப் பயின்றவரே கலிமா எனப்படுவர். இந்த வாசியையே அவர்கள் வாழ்வாக வந்தாலும் எந்திரமும் மந்திரமும் உண்மையென்றாலும் தந்திரம் அறியாத காரணத்தால் வாசியை அறிய முடியாது போகிறது. ஆகையால் சாதகர்கள் இவ்வுண்மையை உணர்ந்து கொண்டு அமர்ந்திருக்கும் போது இடது பாதத்தின் மீது வலதுபாதம் பொருத்தி உடலை நேராக நிமிர்த்தி இருக்க வேண்டும். ஆசனத்தில் இருந்த வண்ணமே தலையை தரையில் படும் வண்ணம் குனியும் போது அகாரத்தைச் சொல்லி மூலாதாரத்தில் காற்றை அழுத்த வேண்டும். உடனே நிமிரும் போது உகாரத்தைச் சொல்லி உண்ணாக்கில் வைத்து ஊத வேண்டும். இதுபோல் குனிந்து நிமிர்ந்து மந்திரத்தை உச்சரித்தவாறே இடைவிடாது தொடர்ச்சியாக சோர்வடையாமல் 45 நிமிட நேரம் பயிற்சி செய்ய வேண்டும். இதுவே வாசி பயிற்சியில் முதலாவதாக இருக்கும் குயில் கூத்து. இதனை இயற்கையிலேயே குயிலானதுகூவிக்கூவி உணர்த்துவதால் இது எனப்பட்டது. இதனை இரண்டு வருட அப்பியாசித்து வந்தால் வாலையின் காலம் குயில்கூத்து இடைவிடாது ஊதுகின்ற தந்திரத்தோடு ஊதுங்கள். வஜ்ராசனத்தில்

            இப்பயிற்சியை செய்யும் மண்டைசளி,நெஞ்சுசளி, தொண்டை சளி என யாவும் வெளியேறிக் கொண்டே இருக்கும். அதனை விழுங்காது நேரத்தில் துப்பிவிடவேண்டும். எக்காரணம் கொண்டும் பயிற்சியிலிருந்து பயிற்சி முடியும் வரை எழுந்து விடக்கூடாது. இவ்வாறு 45 நிமிட நேரம் வாசிப்பயிற்சி முடித்த பின் பயிற்சி செய்த விரிப்பிலேயே வெளியே பத்மாசனத்தில் அமர்ந்து 45 நிமிடநேரம் தியானம் செய்ய வேண்டும். ஒரு நாளைக்கு ஒரு முகூர்த்த நேரம் இவ்வாறு வாசிப்பயிற்சியை முடித்து தியானம் செய்வதுவே உத்தமம்.

மயில் கூத்து

இதுவே வாசியோகத்தின் இரண்டுவுது பயிற்சி மந்திரத்தை மாற்றிப் பயிற்சிக்குமயில் கூத்து எனப்பெயர். வஜ்ராசனத்திலிருந்து குனியும் போது உகாரத்தை சொல்லி மூலாதாரத்தில் செலுத்தி உடன் நிமிரும்போது அகாரத்தை சொல்லி மேலேற்றுவதே மயில் கூத்து ஆகும். இது சற்று கடினமாயிருந்தாலும் தொடர்ந்து பயிற்சிசெய்ய இலகுவாகி அகாரம் கற்பமாக மாறும். இதனை இரண்டு வருட காலம் இடைவிடாது அப்பியாசித்து வந்தால் சிவதரிசனம் கிட்டி சிவனருள் பெறுவர். இப்பயிற்சியை குயில் கூத்து 10 நிமிடநேரம் செய்து விட்டு அப்படியே மாற்றிப்போட்டு மயில் கூத்தை 35 நிமிடம் செய்த பின்பு 45 நிமிடநேரம் தியானம் செய்ய வேண்டும். இவைகளை எந்ந நேரத்திலும் உணவு அருந்துவதற்கு முன்பும் உணவு உண்டு 45 நிமிடநேரம் கழிந்த பின்பும் செய்யலாம். எவ்வாறாவது தினசரி மறவாமல் இப்பயிற்சிகளை செய்பவர்க்கே வாசிலயமாகும். இக்கூத்தை இயற்கையிலேயே மயிலின் கூகையிலேயே இறைவன் காட்டியுள்ளான். மயிலின் சத்தம் முருகா என்று சொல்வதாவே இருக்கும். அது அகாரத்தையே நமக்கு உணர்த்துவதை உன்னிப்பாககவனித்து கேட்டுப்பாருங்கள். இந்த மயில் கூத்தின் மகிமைகளை அறிந்து கொள்ளுங்கள். இவ்வாறு செய்யும் மயில்கூத்து குயில்கூத்து பயிற்சிகளால் ஆறு ஆதாரங்களும் சுத்தியாகும். உள் உறுப்புகள் யாவும் திறம்பட இயங்கும். உடலில் சுறுசுறுப்பும், தைரியமும் நிறைந்திருக்கும். உடம்பும் உயிரும் வலுப்பெறும். உண்மைகளை உணர்ந்து உண்மையுடன் உழைத்திருங்கள். குயில்கூத்தில் உகார கற்பமும் மயில்கூத்தில் அகார கற்பமும் உள்ளுக்குள்ளேயே முடியும்.

ஞமலி கூத்து

இதுவே வாசியோகத்தின் முன்றுவுது பயிற்சி  பத்மாசனத்தில் அமர்ந்து செய்ய வேண்டிய மூன்றாவது பயிற்சி ஞமலி கூத்து எனப்பெயராகும். ஞமலி என்பது நாய். இயற்கையிலேயே நாய் காட்டித்தரும் பயிற்சியே இதுவாகும். குணங்குடியாருக்கு நாய்தான் வாசியை காட்டிக்கொடுத்தது. அடியார்கள் யாவறும் இறைவனிடம் வேண்டும் போது தன்னை ‘நாயேன்’ என்று உவமானப்படுத்தியே பாடுகின்றனர். இப்பயிற்சி ஆசனத்தில் இப்பயிற்சியினால் சுழுமுனை திறக்கப்பட்டு வாசி முதுகுத்தண்டின் வழியாக அமர்ந்த நிலையில் மேலேறுவதை சாதகர்கள் அறிந்து ஆற்றுவது. கொள்ளலாம்.இப்பயிற்சியினால் எல்லா போகும். வினைகளும் நோய்களும் பொசுங்கிப் ஆசனத்தில் அமர்ந்த வண்ணம் நாய் ஓடி வந்து நிற்கும் போது தன் வாயைத் திறந்த வண்ணம் காற்றை உள்ளும் புறமும் வேகமாக இழுத்து இரைத்துக் கொண்டே நிற்பதைப் பார்த்திருப்பீர்கள். அதுபோலவே உடம்பு அசையா வண்ணம் காற்றை மட்டும்கண்டத்தில் வைத்து கதிகொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். அதற்கு மந்திரங்களை நீங்கள் எதுவும் சொல்லி வாசியை இயக்க வேண்டாம். ஏனெனில் குயில்கூத்தாலும் மயில்கூத்தாலும் உகாரமும் அகாரமும் சித்தியாகி நாம் விடும் மூச்சே எட்டிண்டாக மாறி நடப்பதால் ஞமலி கூத்தில் மந்திரம் சொல்ல வேண்டியதில்லை. இதுவே சிவகதியாக தானாக நடந்திடும். ஆதலால் இந்த கதியை மட்டும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு கொடுத்து வாசியை மூலாதாரத்தில் செலுத்துங்கள். வாசி கீழிறங்கியதும் குதத்தை அகாரத்தால் இறுக்கி மூடினால் ஒன்பது வாசலும் தானே அடைப்படும். உடனே இம் என்ற ஒரெழுத்தால் உண்ணாக்கில் வைத்து மேலேற்றுங்கள். இப்போது மேலேறுவதை உணர்வீர்கள். வாசியை வாசி முதுகுத்தண்டின் வழியாக இது போல் இப்பயிற்சியை மட்டும் சித்தர் நெறியில் இருப்போரிடம் அறிந்து கொண்டு அதற்கு வெவ்வேறு பெயர்களை சூட்டி அதற்கும் கட்டணம் விதித்து இதை யோக ஞானம் என்று பல குருக்களும்கற்றுத் தருகிறார்கள். எந்திர, மந்திர, தந்திரம் சொல்லாமல் சொல்லிக் கொடுக்கும் கலை எப்படி சித்தியமாகும். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசி உண்மையை மறைத்து உபதேசம் தந்து பணம் கரப்பது எப்படி உண்மையாக இருக்கும்

மலை கூத்து

இதுவே வாசியோகத்தின் நான்காவதுபயிற்சி இறைவனைக்காண கடுமையான மலை ஏற்றங்களில் ஏறும் போது அவரவர்க்குள்ளே வாசியாக நடக்கும். அதனை அச்சமயத்தில் சற்று அமர்ந்து ஆசுவாசப்படுத்தி உள்ளே நடக்கும் சுவாசத்தை உற்று கவனித்தால் வாசியை உணர்ந்து கொள்ளலாம். இந்த மலைக்கூத்து என்னும் 4வது பயிற்சியை 1.2 பயிற்சிகள் போலவே வஜ்ராசனத்தில் இருந்தே இயற்ற வேண்டும். ஆசனத்தில் அமர்ந்து குனியும் போது ‘அ’ என்று எட்டிரண்டு சேர்ந்தே சொல்லி வாசியை இறக்க வேண்டும். உடன் நிமிரும் போது ‘உஅ’ என்று இரண்டையும் சேர்த்தே சொல்லி வாசியை மேலே ஏற்ற வேண்டும்.இதுவேமலைக்கூத்து ஆகும். இதையும் 45 நிமிடம் செய்ய வேண்டும். இதனை விடாது தொடர்ந்து பயிற்சி செய்வதனால் வாசி பேசவும் செய்யும். வாசியினாலேயே பஞ்சாட்ரம்,காயத்ரி போன்ற எல்லா மந்திரங்களையும் உச்சரிக்கும் ஆற்றல் கிடைக்கும். பேசக்கண்டாய் வெண்ணிலாவே என்று வள்ளலார் மலைக்கூத்து பயிற்சியினால் முடியும் என்பதை உணருங்கள். வாசி கேட்பது இந்த மழை குத்து பயிற்சியினால் சாத்தியம் என்பதை உணர வேண்டிய அவசியம் உண்டு

சர்ப்பக்கூத்து

இதுவே வாசியோகத்தின் ஐந்தாவதுபயிற்சி மௌனமே வீணப்பா விதியில்லை கதியில்லை மந்திரம் இல்லை என்பர் சித்தர். இந்த 5வது கடைசிப் பயிற்சியான சர்ப்பக்கூத்து மௌனத்தில் செயல்புரிவது. இதுவும் வஜ்ராசனத்தில் இருந்துதான் செய்ய வேண்டும். குனிவதும் நிமிர்வதும் மௌனத்திலேயே வாசியை இறக்கவும் ஏற்றவும் வேண்டும். இதனைவிடாது தொடர்ந்து பயிற்சி செய்து வந்தால் வாசி மூலாதாரத்திலிருந்து மேல் நோக்கி நல்ல பாம்பு சீறுவதைப் போல் நாதத்துடன் எழும்புவதைக் காணலாம். இப்படி செய்யும் மௌனத்தின் ஓசையே ஓரெழுத்தாக சீறி எழுவதை உணர்ந்து கொள்ளுங்கள்.

நாகக் கூத்து

இதுவே வாசியோகத்தின் ஆறாவது பயிற்சி நாகம் தன் படத்தை விரித்து சீறும் கவனித்துப்பாருங்கள். அதுவாசியினால் தான் தன் சக்தியை பெருக்கி பஓசையை படம் எடுத்து ஆடும். நல்ல பாம்புகளுடனேயே பழகி அறிந்த பாம்பாட்டி சித்தர் வாசியை ஆடுபாம்பே எனப்பாடி நமக்கு உணர்த்துவார். நல்ல பாம்பின் எதிரி கீரிப்பிள்ளை. அது நல்ல பாம்புடன் சண்டை போடும் போது பாம்பு படம் எடுத்து நிற்கும் போது அதனால்பாம்பை நெருங்கவோ கொல்லவோ இயலாது. பாம்பு வாசியை விட்டு விட்டு படத்தை சுருக்கும் போதே கீரி அதைக்கொல்கின்றது. அதுபோல் வாசியோகம் செய்பவரை எந்த சக்தியாலும் கேடு விளைவிக்க முடியாதுஎன்பதை அறியுங்கள். இப்பயிற்சியினால் தானாகலே ஓரெழுத்தாகி சீறுவதால் இதற்கு சர்ப்பக்கூத்து என்று பெயர் வைத்தனர். இதனால் வாசிலயமும் நாதமும் கிட்டும். இவ்வாறு இறைவன் படைத்த இயற்கையிலேயே வாசியை உணர்ந்து நமக்கும் வழிகாட்டி நிற்பவர்களே சித்தர்கள். இந்த குயில்கூத்து, மயில்கூத்து, ஞமலிக்கூத்து. மலைக்கூத்து, சர்ப்பக்கூத்து என்ற ஐந்து வாசி பயிற்சிகளையும் முறையாக முடிக்கும் சாதகர்களுக்கு நிச்சயம் வாசிலயமாகும் என்பதில் ஐயமில்லை. வாசிலயம் கிடைத்த பின்னால் வாசியை எந்த கலையிலும் சேர்த்து ஏற்றி இறக்கலாம். வாசி கொண்டு எப்படி வேண்டுமானலும் விளையாடிப் பார்க்கலாம். ரேசக பூரகப்பயிற்சி செய்து தீயிலேயே சேர்த்து கும்பகம் செய்து தியானம் செய்யலாம். வாசிலயமானால் தான் கும்பகம் நீடிக்கும். வாசியைப் பிடிக்கும் கும்பகத்தால்தான் வல்லமைகள் யாவும் பெற்று சக்திமானாக மாற முடியும்.வாசிலையமானால் தியானம் சித்தியாகி தவம் மலரும். தவத்தினால் அஷ்டமாசித்திகளையும் அடையலாம் என சித்தர்கள் இயம்புவர். இவ்வாறு மந்திரம், யோகம், தியானம் என்ற மூன்றும் வாசியைக் கைவல்யமாக்கி செய்து வந்தால் அனைத்தும் சித்தியாகும். சித்த கிடைத்தால் தவம் பெருகும். தவம் பெருக இறைவனை சேரும் அனுபவம் கிட்டும். முத்தி என்பது முன்னுரு சாதனம் சித்தி என்பது சேர்நிலை அனுபவம். என்கிறார் வள்ளற்பெருமான்.தன்னையறிந்து இன்பமுற வெண்ணிலாவே ஒரு தந்திரம் நீ சொல்ல வேண்டும் வெண்ணிலாவே  எட்டிரண்டு எனும் மந்திரத்தை எவ்வாறு உச்சரிப்பது என்பதே வாசியோகத்தின் தந்திரம் ஆகும். இம்மந்திரம் மூக்கினால் உச்சரிக்க முடியுமா அல்லது வாயினால் உச்சரித்து வாசியை அறிய முடியுமா என்றால் நிச்சயம் முடியாது. அவ்வாறு செய்வதினால் ஆகுமென்றால் பலகாலங்களாக வேத மந்திரங்களை வாயினால் கோடி கோடியாக உச்சரிக்கும் அந்தணர்கள் இதை அறிந்திருப்பார்களே! மந்திரங்கள் யாவிலும் இந்த மூன்றெழுத்து உச்சரிப்பாகத் தானே உள்ளது. பின் ஏன் அவர்களால் வாசியை அறியமுடிவதில்லை. வாயால் கத்துவதை வரட்டுத் தவளை போல் என்பர் சித்தர். “சாத்திரங்கள் ஓதுகின்ற சட்டநாதபட்டரே வோர்த்து இரைப்பு வந்த சிவவாக்கியரோ போது வேதம் வந்து உதவுமோ” எனப்பபாடுகிறார். இந்த தந்திரத்தை அறிந்திருந்தால் மந்திரங்களும் சித்தியாகும்.

Vinodhan, 7010054619

#vinodhan,

Shopping Cart