சாமிக்கண்ணு ஐயா நோக்குவர்மதால் செய்த ரயில் பயண அற்புதம்

16 சீடர்களின் மனதில் இடம் பிடித்தேன்

          part 3

 

         என் குரு தேவரின் பயணம் 2002 வருடம் குரு தேவர் என்னை அவருடைய நெருங்கிய சீடனாக என்னை மனதார ஏற்றுக்கொண்டார் ஆனால் அதை அவர் என்னிடம் சொல்லவில்லை நானும் அவரிடம் எதையும் கேட்கவும் இல்லை காத்திருந்தேன் அவருடைய அன்புக்காக மட்டும் அவர் பல கலையை கலைகள் கற்று தேர்ந்த வித்தகர் என்று எனக்கு தெரியும் ஆனால் என்னென்ன கலைகள் என்று எனக்கு தெரியாது அவரோடு இருந்த அந்த பதினாறு சீடர்களும் மிகவும் அற்புதமாக பல விசேஷமான திறமை படைத்தவர்களாக இருந்தன நானும் அவர்களிடம் பல கேள்விகள் கேட்டேன் குருவை குறித்த கேள்விகள் ஏனென்றால் பல வருட காலம் அவர்கள் தான் அவரோடு இருக்கின்றனர் அதனால் அவர்களிடம் கேட்டால் பல விஷயங்கள் தெரியவரும் என்று நான் சிறுவயதிலேயே யோசித்து அந்த யோசனை நாள் அவர்களிடம் நன்மதிப்பையும் பெற்றுக் கொண்டேன் அவர்கள் எனக்கு சாமி கண்ண ஐயாவை குறித்த பலரும் தகவல்களை என்னிடம் சொன்னார்கள் சொன்ன  தகவல்களை கேட்டால் உண்மையாகவே சொல்கிறேன் அதிர்ந்து போய் விடுவீர்கள் நானும் அதே போல் அதிர்ந்து போனேன் இப்படிப்பட்டவராக இவர் என்று பல அனுபவங்களை நான் உங்களிடம் பகிர்ந்து கொள்ள போகிறேன் 

 

         இந்த ஒவ்வொரு பதிவும் என்னுடைய குருநாதரை குறித்த பல தகவல்கள் இருக்கும் காரணம் இந்த உலகத்தால் மறைக்கப்பட்ட மிகப் பெரிய குரு இவர் ஆனால் இவரை யாருக்கும் தெரியவில்லை என்ற வேதனை எனக்கு இருந்தது மனதில் இவரை எப்படியாவது எல்லோரிடமும் சொல்ல வேண்டும் என்று ஆவல் எனக்கு அதிகமாக இருந்தது ஆனால் என் குருநாதர் சொன்னார் யாரிடமும் சொல்லாதே அதனால் என்னுடைய ஆர்வத்தை அனைத்தையும் மூட்டை கட்டி வைத்து மூடிக்கொண்டேன் 

             

 

 

                என் குருநாதர் ஒவ்வொரு சீடர்களையும் கண்டுபிடித்தார் அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு முத்துக்கள் என்று சொல்லலாம் சாமிக்கண்ணு ஐயா சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் வேத வார்த்தையாக வைத்துக் கொள்பவர்கள் அவர் என்ன சொல்கிறாரோ அதை மட்டுமே கீழ்ப்படிய கூடியவர்கள் தான் அந்த பதினாறு சீடர்கள் என் குரு சொன்ன பல கட்டளைகளை கீழ்ப்படிந்து நடப்பவர்கள் அந்த சீடர்களின் ஒருவன் நான் என்று நினைக்கும் போது எனக்கு மிகப் பெரும் பெருமையாக இருந்தது ஆனால் ஒன்று எனக்கு எதுவும் தெரியாது ஒன்றுதான் ஆனால் அவரிடம் அன்பை பெற முயற்சி செய்தேன் அவர் என்னிடம் காட்டின ஒன்றே ஒன்று அவர் சுண்டி விரலை பிடித்துக் கொள்வது மட்டும்தான் காரணம் என் வயது அது அந்த வயது இருப்பதால் நான் அதைத்தான் செய்ய வேண்டும் ஆனால் எல்லாவற்றையும் கவனித்தேன் ஆழமாக கவனித்து அந்த கவனத்தில் தெரிந்தது இவர் ஒரு சர்வ ஞானி என்று புரிந்தது இவர் ஒரு ஞானம் அடைந்த ஜீவன் என்று உணர்ந்தேன் இவர் முக்தி அடைந்தவர் என்று உணர்ந்தேன் அவருடைய குரூக்குல வாசத்தில் பல பேர் வருவார்கள் போவார்கள் அந்த குரூக்குல  வாசம் கேரளாவில் இருந்தது அந்த இடம்தான் ஆழப்புழா ஆனால் நான் ஆலப்புழாக்கு சென்றதில்லை அந்த வயதில்.என் குரு தேவர் அடிக்கடி சொல்லுவார் இன்னொரு குரூக்குலவாசம் கன்னியாகுமரியில் இருந்தது நான் அங்கு மட்டுமே சென்றிருக்கிறேன் என் குரு தேவர் அடிக்கடி சென்னைக்கு வருவார் அவர் வரும்போது எல்லாம் ஆவலாக ஒரு நாயைப் போல ஓடுவேன் அவரை பார்க்க தவித்து தவித்து ஓடுவேன் 

                                               குரு தேவரை குறித்த முதல் அற்புதம்

  

இவர் சாகாக்கலை கற்றவர் அதில் உயர் நிலையில் அடைந்தவர் கல்பம் உண்டவர் சிவயோகம் செய்தவர் மௌன யோகத்தை நோக்கி சென்றவர் .

பதனாறு சீடர்களிடம் மனதில் இடம் பிடித்ததால் அவர்கள் சொன்ன ஒரு அற்புத தகவல்கள் என்னுடைய குருநாதரை குறித்த தகவல்

                                ராஜாங்கி குரு சொன்ன வட மாநில பயணம்

               திருடர்களிடமிருந்து மக்களை காப்பாற்றின சாமிக்கண்ணு

ஒரு முறை சாமி கண்ணு ஜயா வின் குருநாதர் ராஜாங்கி சித்தர் சொன்ன வார்த்தையின் படி வேறு ஒரு மாநிலத்துக்கு சென்றார் கன்னியாகுமரியில் இருந்து வட மாநிலம் சென்று கொண்டிருக்கும் பொழுது அப்பொழுது ஒரு ரயில் பயணத்தில் இவர் போய்க் கொண்டிருந்தார் அப்பொழுது ரயிலில் பல பேர் இருந்தார்கள் திடீரென்று ஒரு கும்பல் அங்கிருந்த ரயிலில் உள்ள பயணிகளில் இடமிருந்து பல நகைகள் பொருட்கள் எல்லாவற்றையும் திருட முயற்சித்தனர் ஆனால் அந்த திருட்டு நேரத்தில் சாமிக்கண்ணு நம் குரு தேவர் அங்கே இருந்தார் அவரிடம் எதுவும் இல்லை ஆனால் அவர்கள் அவரிடம் இருந்தும் சில பொருட்களை எடுத்துக் கொண்டனர் அவரும் அமைதியாக இருந்தார் அவர்களிடம் ஒரு கேள்வியை கேட்டார் நீங்கள் திருடுவது நல்லது தானே இதுவே உங்கள் வாழ்க்கையின் கடைசி திருட்டு திருடர்கள் என்ன சொல்வது என்று தெரியவில்லை நாங்கள் திருடுவது நல்லதா இதுவரை நாங்கள் இந்த வார்த்தையை கேள்விப்பட்டதே இல்லையே ஆமா நீங்கள் திருடுவது நல்லது தான் எவ்வளவு முடியுமோ அவ்வளவு திருடி கொள்ளுங்கள் ஏன் இப்படி சொல்கிறீர்கள் நீங்களும் திருடரா என்று திருடர்கள் என் குருநாதரை கேட்டனர் இல்லை நான் திருடன் அல்ல என்று குருநாதர் சொன்னார் அப்போது ஏன் நாங்கள் திருடு வது நல்லது என்று சொல்கிறீர்கள் காரணம் இதுதான் உங்கள் கடைசி திருட்டு இன்னொரு பத்து நிமிடத்தில் நீயும் சரி நானும் சரி இந்த ரயில் பயணம் முடியப்போகிறது என்று சொன்னார் அப்படி என்றால் என்ன நாங்கள் சாகப் போகிறோமா நீங்களும் சாகப் போகிறீர்களா என்று கேட்டனர் அவர் சொன்னார் இல்லை ஆனால் நீ மட்டும் சாவாய் என்று சொன்னால் இதை பார்த்த நொடிப் பொழுது ஒருவன் அங்கே மயக்கம் அடித்து விழுந்தான் அவன் மயக்கம் அடைந்து விழுந்தவுடன் குருநாதர் அவனை தலையில் தட்டி முதுகு தடைவி பின் பின்பு தட்டி அவனை அவனுக்கு தண்ணீர் கொடுத்து அவனை ஓரமாக திருடனை படுக்க வைத்தார் அந்த திருடன் சொன்னான் ஐயா நீங்கள் யார் என் பெயர் சமணன்

 

                 நீங்கள் அவனை என்ன செய்தீர்கள் என்று சொல்லுங்கள் என்று சொன்னார் அவர் சொன்னார் நான் ஒன்றும் செய்யவில்லை நீ திருடின பணத்தை அவரிடம் கொடுத்து மன்னிப்பு கேட்டால் நீயும் தப்பிப்பாய் என்று சொன்னார் அவர்கள் தப்பி ஓட முயற்சி செய்யும்போது அங்கு இருந்த அனைவரும்  8 திருடர்கள் மயக்கம் அடித்து விழுந்தார்கள் பயந்து போனார்கள் திருடர்கள் இருந்த மக்கள் அனைவருக்கும் ஒடி வந்து அவர்களிடம் இருந்த பொருட்களை எல்லாம் மறுபடியும் வாங்கிக் கொண்டார்கள் சிறிது நேரம் கழித்து அவர்களை எழுப்பி உட்கார வைத்து குருதேவர் கேட்டார் ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று அவர்கள் எழுந்து ஓட முயற்சி செய்தும் அவர்களால் ஓட முடியவில்லை அவர்கள் உடல் முழுவதும் கட்டி போட்டது போல் இருந்தது பிறகு ரயில் பயணம் முடிவு வரும் பொழுது காவலர்கள் அங்கே இருந்தன காவல் துறை அந்த எட்டு திருடர்களையும் பிடித்தனர் சாமிக்கண்ணு அய்யாவை பார்த்து மரியாதை உடன் காவல்துறையினர் நன்றியை தெரிவித்தனர் அவர்கள் கேட்டனர் எப்படி இதை செய்தீர்கள் என்று அவர் சொன்னார் இறைவன் சொன்னார் நான் செய்தேன் என்று சொன்னார். அவர் நோக்குவர்மதால் அவர்களை மயக்க அடிக்க வைத்து கீழே விழச் செய்தார் அங்கிருந்த மக்கள் அனைவரும் அவருக்கு நன்றியை தெரிவித்தனர் இவருக்கு (நோக்கு வர்மமும் தெரியும்) அனைத்து கலையையும் அறிவர்

தொடரும் சமணணுடன்………………. 

உங்கள் வினோதன்

#vinodhan #nookuvarmam #நோக்கு வர்மம் #வர்மம் #varmakalai #varmam #guru #samykannu #samanan #theif #train #siddhar 

Shopping Cart