சமூகத்தில் என்னதான் கல்வி வசதி

     

                 இன்றைய சமூகத்தில் மக்கள் தொகை பெருக்கத்திற்கு காரணமாக விளங்குவது குழந்தைகளை நாளுக்குநாள் பெற்று தள்ளுவது ஆகும். அதுவும் இந்தியாவில் சொல்ல வேண்டியதே இல்லை ஜனத்தொகையின் அளவு அதிகமாக உள்ளது. ஏன் மக்கள் தொகை இந்தியாவில் அதிகரித்துக் கொண்டே போகிறது.ஆனால் இந்தியா எதிர்பாராதவிதமாக எவ்வித முன்னேற்ற வளர்ச்சியும் சீனாவிற்கு ஈடாகவும் அமெரிக்கா விற்கு ஈடாகவும் வரமுடியவில்லை. ஆனால் ஜனத்தொகை பெருக்கம் மட்டும் நடந்து கொண்டே இருக்கிறது. திருமணம் ஆகிறது உடனே குழந்தையைப் பெற்றெடுப்பது திருமணம் ஆகி இருவருக்குமிடையே ஒரு சரியான புரிதல்கள் வருவதற்கு முன்னாடியே குழந்தை என்கிற ஒன்றை முட்டுக்கட்டையாக மனிதன் பெற்றெடுக்கிறான். பிறகு அக்குழந்தையை வளர்ப்பும் வேலையில் ஈடுபடுகின்றனர் ஆனால் கணவன்-மனைவி தங்களின் வாழ்க்கையை முழுமையாக வாழ்கிறார்களா என்றால் 100% அவர்களின் வாழ்க்கையை வாழாமல் போகிறார்கள். இந்த சமூகத்தில் குழந்தை இல்லை என்றால் உடனே பெரியவர்கள் தம்பதிகளை தவறாக கருதுகின்றனர் அதாவது பெண்ணுக்கு மலட்டுத்தன்மை யாகவும் ஆணுக்கு ஆண்மை குறைவாகவும் சமூகம் நம்மை கூறுகிறது. ஒன்று பட பேசுவார்கள் இங்குதான் குழந்தை இல்லாதவர்களுக்கு ஒருவித கஷ்டம் ஏற்படுகிறது ஏனென்றால் நாம் சமூகத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம் அல்லவா என்னதான் குழந்தை நீங்கள் இந்த சமூகத்தில் பெற்றெடுத்தாளும் சமூக சீர்கேட்டிற்கு இணையாகவே குழந்தை வளர்கிறது இதற்கான காரணம் அது ஆபாசம் மற்றும் ஆசை என்கிற ஒன்றும் பிறகு காமத்தை மிக அசிங்கமாக விவரிக்கும் இந்த சமூகம்தான் காரணம். இதனால் தேவையற்ற ஜனத்தொகை அதிகரித்து இயற்கைப் பேரழிவை சந்திக்க நேரிடுகிறது ஏனென்றால் அனைவருக்கும் ஆசை என்கிற ஒன்று உள்ளது தாய் தந்தைக்கு மிகுந்த பக்குவம் வேண்டும் அப்பேற்பட்ட பக்குவம் இருந்தால் குழந்தையைப் பெற்று வளர்க்க தெரியவேண்டும் அதே சமூகத்தில் அவ்வளவு நன்மைகளும் அதிகம் உள்ளது. ஆனால் அது எல்லாம் மக்களுக்கு தெரிவதில்லை அதை குறித்த விழிப்புணர்வும் இல்லை. ஏனென்றால் சமூகம் நம்மை அதிக தீய வழிகளிலேயே நம் மனநிலையை தயார் செய்து கொண்டிருக்கிறது அப்பேர்ப்பட்ட சமூகத்தில் நாம் குழந்தையை எப்படி வளர்க்கப் போகிறோம் நாம் படுகின்ற கஷ்டத்தை வரும் சந்ததிக்கு இன்னும் மோசமாக இருக்கும் இயற்கை பேரழிவு என்றால் பஞ்சபூதங்களினாலும் மற்றும் இயற்கைப் பேரழிவு ஆனது மனித மனநிலையை கொண்டு நடத்தப்படுகிறது.

         நீங்கள் குழந்தையைப் பெற்றெடுத்தாள் உங்கள் மனப்பதிவை மற்றும் சமூகத்தில் ஈடுபடும்போது அதற்கான வழியை தேர்ந்தெடுத்து அது செயல்படுகிறது சரி ஏன் இந்தியாவில் இவ்வளவு மக்கள் தொகையை வைத்து நம் நாடு இன்னும் முன்னேறவில்லை அதேபோன்று மக்கள் தொகை மிகக் குறைவாக உள்ள வெளிநாடுகள் டாப்பாக தான் இருக்கிறது ஏனென்றால் அவர்களின் சமூகம் மிக சிறப்பாக செயல்படுகிறது அங்கு கல்வி முறை இந்த குழந்தையின் அறிவை முழுமையாக பயன்படுத்த செய்கிறது ஆனால் இங்கு அப்படியா குழந்தையைப் பெற்று அதனை ஒரு தொழிலாளியாக தான் நாம் வேலைக்கு அனுப்புகிறோம். நாம் சமூகத்தில் என்னதான் கல்வி வசதி இருந்தாலும் நம்முடைய அறிவு மற்றவரிடம் வேலை செய்யும் அளவிற்கு தான் இருக்கிறது இருக்கின்றது என்று சொல்லக்கூடாது நம்மை மாற்றி விட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். நாம் ஏன் தேவையில்லாமல் குழந்தை பெற்றுக் கொள்கிறோம் என்றால் ஆசைக்காகவும் சமூகத்திற்காகவும் பிறகு நம்முடைய சுயநலத்திற்காகவும் அரைகுறை ஆபாசமாகவும் உடலுறவு போன்ற செயல்களினால் நம் குழந்தையை பெற்று எடுக்கிறோம். அப்படிப் பற்றி எடுக்கப்பட்ட குழந்தையானது பின்னால் நோயினால் அவதிப் படுகிறது இனிமேல் பிறக்கும் குழந்தை நோயுடன் பிறக்கும் அல்லது வளர்வதன் மூலம் நோயை உருவாக்கும் ஏனென்றால் உணவு கட்டுப்பாடு ஒன்று இருக்காது .அதிக ரசாயனங்கள் கலந்த உணவு அதிக புழக்கத்தில் வந்துவிட்டது.

          இந்த உணவை நாம் சாப்பிடுகிறோம் உடலளவில் பெரிதாக ஒன்றும் பலன் இருக்காது அப்போது நாமே இப்படி இருக்கிறோம் நோய் உடனோ அல்லது மன பாதிப்பில் இருக்கிறோம். இந்நிலையில் குழந்தை பெற்றால் குழந்தை எப்படி ஆரோக்கியமாக பிறக்கும் பிறகு எப்படி அது நோயற்ற ஒன்றாக வே வளரும். பிறகு குழந்தை இல்லாதவர்கள் படும் பாடு இருக்கே ரொம்ப கஷ்டம் எப்படி உடலளவில் ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ பாதிப்பு இருந்தால் எப்படி குழந்தை பிறக்கும் சிந்தித்துப் பாருங்கள் குழந்தை இல்லை என்றால் பரவாயில்லை நீங்கள் உங்களின் வாழ்க்கையை முழுமையாக வாழ ஆரம்பியுங்கள் இன்பம் துன்பம் என இவற்றை அறிந்து வாழ்க்கை முழுமையாக உங்கள் விருப்பத்திற்கு ஏற்றார்போல் உங்கள் ஆசைகளை தீர்த்துக் கொள்ளுங்கள் குழந்தை இருந்தால் பெருசா எதுவும் இருக்காது கொஞ்சம் காலம் தான் நீங்கள் சந்தோஷமாக இருப்பீர்கள் அவ்வளவுதான் அந்த வாழ்க்கையை விட்டு புதுமையான வாழ்வை மேற்கொள்ளுங்கள்.

      உலகிலேயே சொர்க்கத்தை அனுபவிக்கும் நாடாக நெதர்லாந்து இருக்கிறது அங்கு அவர்கள் அவர்களின் வாழ்க்கையை முழுமையாக வாழ்வார்கள் 40வயதிற்குமேல் தான் திருமணமே செய்து கொள்வார்கள் பிறகு குழந்தையை பெற்றுக் கொள்வார்கள் பிறந்த குழந்தை வளர்ந்தவுடன் அதற்கு தேவையான பணத்தை வைத்துவிட்டு அவர்கள் எப்போதும் போல் வாழ்ந்து கொண்டிருப்பார்கள் குழந்தை தானாகவே அதுவும் அதே போல் வளர்ந்து உலக இன்பங்களை அனுபவித்து 40 வயதிற்கு மேல் திருமணம் செய்யும் ஆகவே அவர்களின் வாழ்வை முழுமையாக சந்தோஷமாக வாழும் நாடு நெதர்லாந்து இன்றைக்கும் அந்த நாடு அப்படித்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறது. சமூகத்தைப் பற்றி கவலைப் படாதீர்கள் இந்த சமூகம் நம்மை கஷ்டப்படுத்தும் நம்மைக் கேலி செய்வதற்கும் தான் உதவும் சமூகத்தைப் பற்றி எண்ணாதீர்கள் ஒரு சில கோட்பாடுகளுக்கு மட்டும் நாம் சமூகத்தை பின்பற்றி அதன் மேம்பாட்டினை நாம் வளர்க்க வேண்டும்.ஆனால் நம்முடைய சொந்த விஷயங்களை பற்றி சமூகம் பேசுவதை கண்டு கொள்ளக் கூடாது. சமூகத்தை நீங்கள் மறந்து விட்டால் வாழ்க்கையில் இன்பம் கிடைக்கும் இதை மேலோட்டமாக படித்தால் தவறாக கருதுவீர்கள் சிந்தித்துப் பாருங்கள்.

               

                                                                                                                      குழந்தை பெற்றெப்பதற்கான தகுதிகள்….
1. முதலில் குழந்தையை பெற்றெடுப்பதற்கு உங்களின் உடல் நிலையை எவ்வித நோய் நொடி இன்றி இருக்க வேண்டும் அதாவது நோய் என்றால் உடலில் மட்டுமல்லாமல் மனதளவிலும் நோய் இருக்கக்கூடாது அதாவது உடலளவில் இல்லாமல் மனதளவிலும் நோய் இருந்தால் அதுவும் நோய் தான் எனவே மனிதன் முழுமை அடைய மாட்டான் உடலாலும் உள்ளத்தாலும் நோயின்றி இருக்க வேண்டும் ஆண் பெண் இருபாலரும்.

2. பொருளாதார அளவில் நீங்கள் சிறந்தவராக இருக்க வேண்டும் அதாவது தேவையை விட கொஞ்சம் அதிகமாக இருந்தால் போதும் அப்போதுதான் அவள் சிறந்ததாக இருக்கும் ஏனெனில் குழந்தையை வளர்க்கப் போகிறீர்கள் அல்லவா அதற்கு வேண்டியதை செய்ய செல்வம் தேவை.இல்லை என்றால் குழந்தை குமுறல்களை உங்களால் தாங்க முடியாது. மற்றவர்கள் போல் அதுவும் இருக்க வேண்டும் என ஆசைப்படும் பொருளாதார அளவிலும் எங்கள் சிறந்தவராக இருக்க வேண்டும்.

3. நீங்கள் ஒரு சிறந்த அறிவு தெளிவு உடையவராக இருக்க வேண்டும் ஏனென்றால் ஒரு குழந்தையின் உணர்வுகளை புரிந்து கொள்ளும் அளவிற்கு நீங்கள் தெளிவு உடையவராக இருக்க வேண்டும்.

4. நீங்கள் ஒரு தந்தையாக மட்டுமில்லாமல் ஒரு ஆசானாகவும் நண்பனாகவும் குழந்தையின் மனநிலையை புரிந்து கொள்பவராகவும் பிறகு நீங்கள் அதிக பக்குவத்தில் இருக்க வேண்டும் இப்போது உள்ள பெற்றோர்கள் சரியான முறையில் வளர்ந்து வர்களாக இருக்க மாட்டார்கள். அதிக மூடநம்பிக்கைகளையும் தவறான புரிதல்களிலும் தவறான வழிமுறைகளிலும் தீய குணங்கள் கொண்டவராகவும் இருப்பதால் அதே ரத்தம் குழந்தைக்கும் அப்படியே கடத்தப்படுகிறது அதனால்தான் நீங்கள் ஒரு சிறந்த குணம் உடையவராக இருக்க வேண்டும்.

5. முக்கியமாக இன்றைய கால கட்டத்தில் நீங்கள் குழந்தைகளுக்கு நல்ல குணங்களை அவர்களுக்கு கற்பிக்க வேண்டும். பிறகு மிக முக்கியமாக காமத்தை எப்படி கையாளுவது என்கிற மிக நுண்ணிய மான நுணுக்கங்களை சொல்லித்தர வேண்டும் ஏனென்றால் இன்றைய உலகில் காமத்தால் தான் இவ்வளவு மக்கள் தொகையும் சிலர் சீரழிவுகளும் பெரும்பாலும் நடக்கிறது. அதை எடுத்துச் சொல்லும் அளவிற்கு நீங்கள் அறிவு உடையவராகவும் பக்கம் உடையவராகவும் இருக்க வேண்டும் மனநிலை….

நான் சொல்லுகிற மனநிலையை உங்களுக்கு இருந்தால் நீங்கள் இதை மாற்றிக் கொள்ள வேண்டும் அல்லது இந்த மனநிலைக்கு நீங்கள் வரவேண்டும்.

1. முதலில் குழந்தையை ஒரு ஆசையோடு தான் பெற்றுக் கொள்கிறீர்கள் சரி முக்கியமான ஒன்று நம்முடைய விருப்பத்தை பிறக்கும் குழந்தைகளிடம் திணிக்க கூடாது அது எவ்வித மனநிலையை கொண்டுள்ளது என்பதை புரிந்துகொண்டு அதற்கேற்றாற்போல் நாம் வளர்க்க வேண்டும்.

2. முக்கியமாக எவ்வித எதிர்பார்ப்பும் இருக்கக் கூடாது என் குழந்தை வளர்ந்து எனக்கு இது செய்யும் அது செய்யும் என்கிற ஒரு துளி எதிர்பார்ப்பும் பிறக்கும் குழந்தையின் மேல் இருக்கக் கூடாது அப்படி எதிர்பார்த்தால் உங்களை விட முட்டாள்கள் யாரும் இவ்வுலகில் இல்லை நமக்கு துரோகம் செய்வது முதலில் நம்முடைய குழந்தையாகத்தான் இருக்கும் அதை புரிந்து கொள்ள வேண்டும் ஆகவே ஆசைப்பட்டு தான் நாம் பெற்றிருக்கிறோம் ஆகவே துன்பம் கண்டிப்பாக நிகழ்ந்தே தீரும் அது எல்லாம் முன்கூட்டியே அறிந்து நீங்கள் செயல்பட வேண்டும்.

3. இன்னொரு விஷயம் எனவென்றால் நீங்கள் குழந்தையாக வளரும் பருவத்தில் எப்படி இருந்தீர்கள்லோ ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி என்னென்ன வேலை செய்தீர்களோ அதைவிட ஒரு மடங்கு அல்லது இரு மடங்கு உங்கள் குழந்தை செய்தே தீரும் அது நன்மையோ அல்லது தீமையோ எதுவாக இருந்தாலும் சரி ஏனென்றால் உங்களின் ஜீன்கள்தானே அதனால் அதை உங்கள் வாழ்க்கையில் பார்ப்பீர்கள் பிறகு இதற்கு சூழ்நிலையும் ஒரு காரணமாகிறது.

4. குழந்தையை அதன் போக்கில் வளர விட வேண்டும் உங்களின் எண்ணங்களை அதன் மேல் திணிக்காதீர்கள் பிறகு அவை உங்களுக்கு பிடிக்காத விஷயங்களில் செய்ய ஆரம்பித்துவிடும் நாம் உருவாக்கும் செயலை இங்கு செய்கிறோம் அதாவது பிறக்கும் குழந்தை ஒரு robo போல் அனைத்து சாப்ட்வேர் களும் இன்பில்டாகத்தான் இருக்கும். நாம் அதை மக்களிடம் பழக விட போவதிலும் தான் உள்ளது. என்னதான் பெற்றது நீங்களாக இருந்தாலும் வளர்ப்பது வேறு யாராக இருந்தாலும் பெற்றவர்கள் உடைய ஜீன் குழந்தைகளுக்கு இருந்தே தீரும் ஆகவே எந்த சூழ்நிலையிலும் எப்பேர்ப்பட்ட மனிதர்களிடம் அது வளர்ந்து வந்தாலும் பெற்றோர்களின் படியே அதன் குணநலன்கள் அவை வளரும் காலத்தில் வெளிப்படுகிறது. அதற்கு நல்லதையும் கெட்டதையும் சொல்லித்தர வேண்டும் பின்பு அதன் அறியவும் அதன் ஆசைப்படும் அது வளர ஆரம்பிக்கும் சமூக இன்ப துன்பங்களை அனுபவித்து வளரட்டும்.

5. இதையெல்லாம் கவனம் கொண்டு நல்ல முறையில் வளர்த்து சமூகத்தில் சிறந்த ஒருவனாக வளரவிடுங்கள் இல்லை என்றால் மக்கள்தொகையில் ஒன்றாக போய்விடும் நாம் பெற்றெடுக்கும் குழந்தை சில துன்பங்களை நமக்கு கொடுக்க நேரிடும் அதாவது பிள்ளையை வளர்த்தால் கண்ணீரு தென்னையை வளர்த்தால் என்ற பழமொழியும் உண்டு புரிந்து கொள்ளுங்கள்.

6. நீங்கள் முதலில் ஒரு ஐந்து வருடம் குழந்தை இல்லாமல் இளமையை தக்க வைத்து கணவன் மனைவியும் இருவரும் சந்தோஷமாக உலக இன்பங்களை அனுபவிக்க பொருளாதாரத்தை மேம்படுத்தி குழந்தையைப் பெற்றுக் கொண்டால் உங்களின் இந்த ஐந்து வருடம் இடைவெளியில் நல்ல புரிதல் இருக்கும் பிறகு கணவன் மனைவிக்கிடையே நல்ல பக்குவம் கிடைக்கும்.

7. குழந்தையை நோய்நொடியின்றி வளர்க்க வேண்டும் எது இருக்கின்றதோ இல்லையோ ஆரோக்கியம் பங்கு நிறைந்தவையாக இருக்க வேண்டும் உடலைப் பற்றியும் மனதைப் பற்றியும் தெளிவாக சொல்லிக் கொடுக்க வேண்டும் நாம் அதற்கு ஒரு விழிப்புணர்வு கொடுப்பவராக இருக்க வேண்டுமே தவிர அதன் வாழ்க்கை நாம் கட்டுப்பாட்டில் வைக்க கூடாது பிறகு அதனுடைய வாழ்வை அது பார்த்துக் கொள்ளும் நீங்களும் கரையேற முயற்சிசெய்து இறைவனடி சேர்வதற்கான அருளைப் பெற முயல வேண்டும். நன்றி மகிழ்ச்சி….

Hipnotist Sivaganesh,

Shopping Cart