குருதேவரை சந்தித்த முதல் நொடி…………. 

இது என் வாழ்க்கையில் ஏற்பட்ட அனுபவங்கள் மட்டுமே

நான் என்னுடைய முதல் கட்டுரை இது இந்த கட்டுரையில் என் வாழ்க்கையில் ஏற்பட்ட மகத்தான ஒரு அனுபவம் அந்த அனுபவத்தை குறித்த ஒரு வாழ்க்கை முறை தகவல் கூட அது என்னவென்றால் 

என் குரு தேவரை பற்றிய கட்டுரை வாழ்க்கையில் பல பேர் பல குருவை தேடி அலைந்திருக்கிறோம் ஆனால் குரு கிடைப்பது நமக்கு கோடி புண்ணியம் என்று தெரியும் ஆனால் அவரை பார்க்க முடியுமா பார்க்க சென்றாள் உண்மையற்றவர்களை மட்டுமே பார்க்க முடிகிறது குரு என்று சொல்கிறார்கள் ஆனால் வெளியில் ருகு வாக இருக்கிறார்கள் குரு என்றால் இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு கொண்டு வருபவர்கள் ருகு என்றால் இருட்டிலேயே வைத்துக் கொள்பவர்கள் இந்த உலகத்தில் எங்கு சென்றாலும் ஒரு 90% குரு என்று சொல்பவர்கள் எல்லாம் ருகு தான் ஆனால் என் வாழ்க்கையில் உண்மையான அந்த குருவை நேரில் பார்த்தேன் பார்த்த அவரோடு பல வருடங்கள் குருகுல வாசம்  செய்தேன் அவரோடு பலமுறை உரையாடினேன் அவர் பாதங்களால் என் முகத்தை தொட்டுக் கொண்டேன் அவர் இல்லாவிடில் நான் இல்லை என்ற உணர்வுக்கு வந்தேன் இந்த உண்மையை இப்பொழுது நான் உங்களுக்கு சொல்ல போகிறேன்

அவருடைய பெயர் சமணன் குரு அவரை எல்லோரும் அன்பாக சாமி கண்ணு என்று அழைப்பார்கள் கன்னியாகுமரி மாவட்டம் Thuckalay மற்றும் கேரளாவில் உள்ள ஆலப்புழா அங்கும் இருப்பார் இது அவருடைய குருகுலம் இவர் 1921ல் இந்த உலகத்தில் பிறந்தார் அவர் கடைசி காலம் எங்கே சென்றார் அவருக்கு என்ன ஆனது என்று அவர்களுக்கு சீடருக்கும் தெரியாது எனக்கும் தெரியாது ஆனால் அவர்கள் சீடர்கள் சொல்லும் ஒரு வார்த்தை அவர் ஆலப்புழா வில் சமாதியானார் என்று சொல்வார்கள் அது எந்த விதத்தில் உண்மை என்று தெரியவில்லை காரணம் அவர்களுக்கு அது தெரியாது பலர் அதிகமாக விசாரிப்பதால் இதை சொல்லி முடித்து விடுவார்கள் 

குருதேவர் எங்கே சென்றார் என்று யாருக்கும் தெரியாது அவர் ஒளிக்குள் சமாதியாகிவிட்டார் காலத்தில் மறைந்து விட்டார்

குருவை சந்தித்த அனுபவம்

என் வாழ்க்கையில் இப்படிப்பட்ட ஒரு மனிதனை நான் சந்தித்ததில்லை என் வாழ்க்கையில் நான் 2000th year பிப்ரவரி மாதம் 29ஆம் தேதி முதல் முதலில் நான் அவரை சந்தித்தேன் நான் என்னுடைய பள்ளி பருவத்தில் பள்ளிக்கூடத்திற்கு சென்று கொண்டிருக்கும் பொழுது ஒரு பஸ்ஸில் ஏறினேன் அந்த பஸ் என்னுடைய பள்ளிக்கூடத்திற்கு போகிறது அந்த பஸ்ஸில் நான் உட்கார்ந்து கொண்டிருக்கும் பொழுது என் முன்பு இருந்த ஒருவரை பார்த்தேன் ஆனால் அவரை என்னால் பார்க்க முடியவில்லை ஆனால் என் மனம் துடித்தது அவரை பார்க்க வேண்டும் முடிந்தவரை முயற்சி செய்து ஆனால் அவரை பார்க்க முடியவில்லை பஸ்ஸில் இருப்பவர்கள் எல்லோரும் என்னுடைய தோழர்கள் இறங்கி விட்டார்கள் ஆனால் நான் பஸ்ஸில் இருந்து இறங்கவில்லை அவரின் பார்க்க காத்துக் கொண்டிருந்தேன் ஆனால் நான் பார்த்தது அவருடைய பின் தலையை தான் ஆனால் அவரைப் பார்த்துக் கொண்டே இருக்கும் பொழுது நேரம் போவது எனக்கு தெரியவில்லை அவரை எப்படியாவது பார்க்க வேண்டும் என்று காத்துக் கொண்டே இருந்தேன் ஆனால் திடீரென்று பஸ் நின்றுவிட்டது அவர் இறங்குவதை கண்டேன் அவர் பஸ்ஸிலிருந்து இறங்கி போய்க்கொண்டு இருந்தால் எந்த இடம் என்றால் சென்னையில் உள்ள மூலக்கடை என்ற ஒரு இடத்தில் ஒரு வீடு உள்ளது அந்த வீட்டிற்கு சென்று கொண்டே இருந்தாள்.

 நான் அவர் பின்னே சென்று விட்டேன் கடைசியாக தான் எனக்கு தெரிந்தது நான் இருக்கும் இடத்தை விட ஒரு 25 கிலோ மீட்டர் தூரம் வந்து விட்டேன் என்று புரிந்தது நான் பயந்துவிட்டேன் நான் அப்பொழுது எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன் அந்த சிறு வயதில் அந்த இடம் எனக்கு தெரியவில்லை. ஆனால் அவரை பார்க்க வேண்டிய ஒரு ஆவல் வந்து விட்டேன் என்னை அவர் திரும்பி பார்த்தார் யார் வேண்டும் உனக்கு என்று சொன்னார் நான் சொன்னேன் தெரியாது எனக்கு எதுவும் தெரியாது.

 உங்களை பார்த்தேன் உங்கள் பின்னே ஒரு நாய் போல் வந்து விட்டேன் என்று சொன்னார் அவர் சொன்னார் போ எங்கிருந்து எங்கு வந்தாயோ அங்கே செல் என்று சொன்னார் காத்துக் கொண்டிருந்தேன் அவர் மறுபடியும் என்னிடம் பேசுவார் என்று இதெல்லாம் என்னுடைய உணர்வு என்னை வழிநடத்தி சென்றது வெளியே ஒரு மீன்தொட்டி இருந்தது அந்த தொட்டியில் பார்த்துக் கொண்டு நீங்களே தொட்டுக் கொண்டு விளையாடிக் கொண்டிருந்தேன் வீட்டுக்குள் இருந்து ஒருவர் வந்தார் அவர்தான் சாமி கண்ணின் ஐயா உடைய முதல் தலைமையான சீடன் என்னை பார்த்து கேட்டார் ஏன் வந்தாய் என்றார் நான் அவரிடம் சொன்னேன் எனக்கு தெரியாது என்று ஏன் எது கேட்டாலும் தெரியாத தெரியாது என்று சொல்கிறாய் என்று கேட்டார் அப்போதும் சொன்னேன் தெரியாது என்பது பதில் உலகத்தில் மிக உயர்ந்த பதிலென்று அப்பொழுதுதான் நான் உணர்ந்து கொண்டேன் வாழ்க்கையில் நான் பார்க்கும் பொழுது பல பேர் எனக்கு தெரியும் தெரியும் என்று உலகத்தில் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள் ஆனால் ஒரு முறை உண்மையை சொல்லிவிட்டால் பிறகு குருவிடம் சென்று விடலாம் இது என் அனுபவம் எனக்கு எதுவும் தெரியாது இது தான் அந்த பதில் பிறகு அந்த சீடன் என்னை குருவிடம் இருந்து என்னை பிரித்து நான் எங்கே வந்தேனோ அங்கே என்னை அழைத்துக் கொண்டு போய் விட்டு விட்டார்

என் மனம் துடித்தது துடித்துக் கொண்டே இருந்தது காரணம் மறுநாள் பள்ளிக்கூடம் சென்றேன் அவர் ஞாபகமாகவே இருந்தது அந்த ஞாபகம் எப்படி சொல்வது வார்த்தையே இல்லை ஒரு பெண்ணை இந்த உலகில் காதலித்தால் எப்படிப்பட்ட சுகம் தருவோம் அதைவிட ஆயிரம் மடங்கு அதிகமாக இருந்தது பள்ளிக்கூடம் முதல் திங்கள் ஆரம்பித்து வெள்ளிக்கிழமை வரும் வரை காத்திருந்தேன் வெள்ளிக்கிழமை வந்து விட்டது சனிக்கிழமை காலையில் எழுந்து நான் எப்படி அந்த இடத்திற்கு வந்தேனோ அதேபோல் எங்கிருந்து பஸ்ஸில் ஏறி இது ஞாபகம் வைத்துக் கொண்டு மறுபடியும் அங்கே சென்று தனி ஆளாக நான் போய் பார்த்தேன் அவரை மறுபடியும் வந்து விட்டாயா என்று சீடன் சொன்னார் ஆமாம் நான் சொன்னேன் எனக்கு எதுவும் தெரியாது ஆனால் நான் அவரை பார்க்க வேண்டும் யார் அவரை என்று கேட்டார் அவர்தான் வயதானவராய் இருந்தாரு அவர்தான் திடீரென்று அந்த இடத்தில் இருந்து ஒரு அமைதியான தேஜஸ் நிறைந்த ஒரு அற்புத தேவதை தேவ தூதன் போல் ஒருவர் வந்தார் அவரை பார்த்தேன் முகத்தை இரண்டாவது முறையாக பார்த்தேன் வியந்தேன் ரசித்தேன் உணர்ந்தேன் செத்தே போனேன்.

ஏன் இந்த உணர்வு ஏற்பட்டது அதற்கும் பதில் தெரியாது பதில் எதுவும் தெரியாது என்றுதான் அவர் என்னை பார்த்து உள்ளே வா நீ வந்து விட்டாய் என்று சொன்னார் அதுவும் கடந்த காலத்தில் சொன்னார் எனக்கு அது புரியவில்லை ஆனாலும் நான் உள்ளே சென்றேன் அவர் அவருடைய சுண்டி  விரலை பிடிக்க ஆசைப்பட்டேன் அந்த ஆசை எனக்கு அந்த நிறைவேறவில்லை அவர் என்னிடம் பேசவே இல்லை நான் ஓரமாக உட்கார்ந்திருந்து அனைத்தையும் கவனித்தேன் முதல் முறையாக என் குருவின் சன்னிதானத்தில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தேன் இதற்கு பிறகு தான் என் வாழ்க்கையில் நான் பேரானந்தம் கொண்டேன் இவரை போன்ற ஒரு குருவை பார்த்ததில்லை நாடும் இன்று வரை பல புத்தகத்தில் படித்திருக்கிறேன் பார்த்ததில்லை இவரை போல் பார்க்கவும் முடியாது நீ தயாராக இருந்தால் குரு உன்னை தேடி வருவார் என்று முதல் ஆனமீக அனுபவம் என் வாழ்க்கையில் முதல் 2000 ஆம் ஆண்டில் தொடங்கினது என் முதல் ஆன்மீகம் பயணம்

தொடரும் சமணருடன்

                                                    அடுத்த பகுதி 

[அவருக்கு ஏன் சாமி கண்ணு என்று பெயர் வந்தது?]……..

#guru #vinodhan #samykannu #samanan

Shopping Cart