உடலுக்கும் மனசுக்கும் காயசித்தி யோக சித்தி ஞான சித்தி கவுன சித்தி இந்த மாதிரி சித்திகள் எல்லாம் பெற்று நம்மளுடைய வாழ்நாளில் நீண்ட காலம் அதாவது தீர்க்க ஆயுசு வாழ்நாளை நீண்ட காலம் வாழ்வதற்கு இதை பயன்படுத்தினால் கண்டிப்பா நல்லா இருக்கும்.
அதற்கு என்ன நாம் சாப்பிடலாம் என்றால் நமக்கு ரொம்ப ரொம்ப முக்கியமானது என்னன்னா கடுக்காய்.
கடுக்காய் என நீங்க நினைக்கிற மாதிரி இல்ல கடுக்காய் சாதாரண ஒரு மூலிகையே இல்லை உண்மையா மூன்றாவது கண்ணை கூட திறந்து வைக்கும் கடுக்காய் அவ்வளவு கழிவுகள் எல்லாத்தையும் மொத்தத்தையும் உடம்பிலிருந்து வெளித்தள்ளும். ரொம்ப பெரிய அற்புதமான ஒரு கல்பம் கடுக்காய்.
இதை சித்தர்கள் அவர்களுடைய வாழ்க்கையில் அனுபவித்து பயன்படுத்தின விஷயத்தை சொல்றாங்க. இதை தினமும் அனைவரும் சாப்பிட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள் எதற்கு சாப்பிடுகிறார்கள் என்றால் வயிற்றில் இருக்கும் மலத்தைக் வெளியேற்றுவதற்காக தான் பெரும்பாலும் சாப்பிடுகிறார்கள். இதற்காக தான் பெரும்பாலும் கான்ஸ்டிபேஷன் பிரச்சினைகள் இருப்பவர்கள் தான் கடுக்காயை உபயோகித்துக் கொண்டிருக்கிறார்கள்.ஆனால் அதையும் தாண்டி அற்புதமான சில விஷயங்கள் இதில் இருக்கிறது அதை இப்போது பார்ப்போம்.
நான் இப்பொழுது இதன் பயன்களை சொல்லப்போவதில்லை இதை எவ்வாறு பயன்படுத்துவது என்று சொல்லப்போகிறேன். ஏனென்றால் இதனுடைய பயன்கள் அனைவரும் அறிவார்கள். இதை எப்படி பயன்படுத்துவது என்று தெரிந்தால் மட்டும் தான் அதில் உள்ள பயன்கள் என்னவென்று முழுமையாக தெளிவாக புரியும்.
இதை எப்படி சாப்பிடனும் என்று ஒரு முறை இருக்கிறது சித்தர்கள் சொன்ன ஒரு முறைதான் இப்போது சொல்லப் போகிறேன். அது என்னவென்றால் இதை ஒரே மாதிரி எல்லா நாட்களும் சாப்பிடக்கூடாது மாதங்கள் வருடங்கள் எல்லா நாளும் அப்படியே சாப்பிடக்கூடாது ஒரு மாற்றங்கள் இருந்து கொண்டே இருக்கும் 20 30 40 வயது உடையவர்கள் அந்த வயது எண்ணிக்கை அளவிற்கு தான் கடுக்காயை சாப்பிட்டு ஆகணும்.
கடுக்காயை 50க்கு மேல் உள்ளவர்கள் பதினைந்து நாளும் 60 வயதிற்கு மேல் பத்து நாளும் சாப்பிட வேண்டும். அதற்கு மேல் சாப்பிடக்கூடாது.
கடுக்காயை சுத்தம் செய்து தான் சாப்பிட வேண்டும் அதை இங்கு யாரும் சுத்தம் செய்து சாப்பிடுவதில்லை. சுத்திகரிப்பு செய்தால் அதனுடைய நிறமே முற்றிலுமாக மாறி இருக்கும் நஞ்சை நீக்கி சுத்தம் செய்த பிறகுதான் அதை சாப்பிடணும் இல்லை என்றால் அதை சாப்பிடவே கூடாது.
தேகத்தை கல்போல் உறுதியாக்கும் இந்த காயகல்பம். கல்பம் என்றாலே பெரும்பாலும் சிறப்பு கற்பம் பொது கல்பம் என்று சொல்லுவார்கள். இரண்டு வகை இருக்கு உடலுக்கு ஆரோக்கியம் அழகை இளமை மறுபடியும் திரும்பக் கொடுக்கும் இதெல்லாம் பொதுவான ஒரு கல்பம்.
சிறப்பான ஒரு கல்பம் என்றால் உடல் உபாயத்தை பிரச்சனைகள் தோஷம் சார்ந்தது. அதாவது உடம்பை சம அளவாக ஆகாமல் மாற்ற கூடியது சிறப்பு கற்பம். இது பெரும்பாலும் அவசியமின்றி சாப்பிடக்கூடாது என்று சித்தர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
காலை மாலை சாப்பிட்டால் போதும் பெரும்பாலும் இதை கஷாயம் வைத்து அருந்தினால் நல்லது உடலுக்கு நல்ல ஒரு விஷயங்கள் தரும் கற்பங்கள் யாவும் இளமைத் பருவத்திலேயே சாப்பிடுவது என்று என்பது நல்லது. ஒரு 50 வயதிற்கு மேல் சாப்பிட்டால் அதற்கு கொஞ்சம் ஆற்றல் குறைவாக தான் இருக்கும் இதற்கும் என் வயதில் சாப்பிட்டால் உடம்புக்கு மிகவும் நல்லது 40 50 வயதிற்கு மேல் உடல் உடம்பு தளர்வாக தான் இருக்கும்
40 வயதிற்குள் இருப்பவர்கள் சாப்பிட்டால் தேகம் உறுதிபெறும். அதாவது முப்பு அண்டாமல் நம் உடம்பில் புதிய தோள்களும் வளர்ந்து நல்ல உடல் வலிமை பெறும் இதை எந்த மாதத்தில் சாப்பிடவேண்டும் என்று மிக அழகாக அற்புதமாக சொல்லியிருக்கிறார்கள்.
அது என்னவென்றால் ஒவ்வொரு சீதோஷண மும் ஒவ்வொரு காலமும் மாற மாற இதனுடைய தன்மையும் மாறும் சிலபேர் சொல்லியிருப்பார்கள் கடுக்காய் சாப்பிட்டால் மிகவும் சூடாக இருக்கிறது என்று அதை அனைத்தும் மாற்றுவதற்கு பருவ காலத்திற்கு ஏற்றார் போல் தான் இதை உண்ணும் முறை இப்படி சாப்பிட்டால்தான் உடலுக்கும் ஆரோக்கியம் ஏற்படும் மனசுக்கும் ரொம்ப பெரிய ஆரோக்கியத்தை ஏற்படுத்தும்.
தமிழ் மாதத்தில் ஆணி ஆவணியில் கடுக்காயை வெல்லம் அல்லது நாட்டு சக்கரை உடன் சேர்த்து உட்கொள்ள வேண்டும்.
சித்திரை வைகாசியில் சுக்கு கஷாயத்துடன் அதை சேர்த்து கலந்து சாப்பிட வேண்டும்.
புரட்டாசியில் குறிஞ்சி தேனுடன் குழைத்து அதை கண்டிப்பாக சாப்பிட்டு ஆகவேண்டும் என்று உலகத்தில் மிக சிறந்த மருத்துவரான போகர் இதைக் கூறுகிறார். அவர் சொன்ன மருத்துவம் இது அற்புதமான மருத்துவம்.
ஐப்பசி கார்த்திகை மாதத்தில் செங்கற்றாழை உடன் இதை சேர்த்து உண்ண வேண்டும். இதை எப்படி என்று பார்க்கலாம். அந்த கற்றாழை பார்ப்பதற்கு பச்சை நிறமாக தான் இருக்கும் ஆனால் அதை உரித்த உடன் உள்ளிருக்கும் சோற்றை எடுத்தாள் சிகப்பு நிறமாக மாறி இருக்கும்.. அந்த சோற்றுடன் கடுக்காயை நன்றாக போட்டு குழைத்து விடவேண்டும். இந்த சாற்றை நாம் சிறிது நாட்கள் கூட வைத்திருக்கலாம் அதைதான் ஒரு சில அளவுகளை எடுத்து நாம் இந்த மாதத்தில் இப்படி தான் சாப்பிட வேண்டும்.
மார்கழி தை மாதத்தில் நாட்டு கற்கண்டுடன் சேர்த்து பொடி செய்து சாப்பிட வேண்டும்.
பங்குனி மாதத்தில் சுத்தமான நெய்யில் கலந்து தான் சாப்பிட வேண்டும்.
இதைப்போல் வருடத்தில் வெவ்வேறு பருவத்தில் இதை சாப்பிட்டால் தான் ஞானத்தை சித்தி, காயசித்தி, யோக சித்தி யாக மாற்றும்.
இதை எல்லா வயதினரும் யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம் காயகல்பம் என்பதினால் முடிந்த அளவு 50 வயதிற்கு முன் உள்ளவர்கள் சாப்பிடுங்கள்.
இதில் முக்கியமானது காபுல் கடுக்காய் உள்ளது. அதை சாப்பிடுங்கள் முக்கியமாக நஞ்சை நீக்கின பிறகுதான் கடுக்காயை சாப்பிட வேண்டும் இங்க பெரும்பாலும் கடையில் கிடைப்பது எல்லாம் நஞ்சை நீக்காத கடுக்காய் தான். அது நல்ல ஒரு வைத்தியரிடம் கிடைக்கும்.
நஞ்சை நீக்கப்பட்ட கடுக்காய் சாப்பிட்டால் முற்றிலும் வித்தியாசமாக தெரியும் அது உடம்பு சூடாக ஆகும் என்று நான் சொல்லவே முடியாது.
இதை உலகத்தில் மிகப்பெரிய அற்புதமான ஒரு மிகப்பெரிய வைத்தியர் சொன்ன விஷயம் பதஞ்சலி முனிவருக்கு பிறகு அடுத்தது போகர் தான் மிகப்பெரிய ஒரு அற்புதமான வைத்தியர் சொன்ன விஷயம் இது எந்தெந்த மாதத்தில் எப்படி உண்ண வேண்டும் என்று.
இதை சாப்பிட்டால் யோகமார்க்கத்தில் உள்ளவர்கள் ஞான மார்க்கத்தில் உள்ளவர்கள் உடலை கர்ப்பமாக மாற்ற நினைப்பவர்கள் கவுன சித்தியைப் பெற நினைப்பவர்கள் அஷ்டமா சித்தியை பெற நினைப்பவர்கள் அதாவது மூன்றாவது கண் திறப்பது போன்ற சில அமானுஷ்யமான சக்திகளைப் பெற சிறந்தது காபுல் கடுக்காய் தான்.
ஒரு அமானுஷ்ய கர்ப்பம் என்றால் கடுக்காய் மட்டும்தான் உண்மையிலே வருடக்கணக்கில் இதை நாம் எடுத்துக் கொள்ளலாம் ஆனால் இந்த இந்த மாதத்தில் இப்படி தான் சாப்பிடவேண்டும் அதை சாப்பிட்டு வரவும்.
கடையில் விற்கும் கடுக்காயை வாங்கி சாப்பிடுவதை தவிர்த்து விட்டு இதை எப்படி உங்களுக்கு தெரிந்த வைத்தியரிடம் கேட்டு நஞ்சை எவ்வாறு முறையாக நீக்குவது என்பதை தெரிந்துகொண்டு நஞ்சை நீக்கின பிறகு முறையாக எப்படி சாப்பிட வேண்டும் என்று தெரிந்து எடுத்துக்கொள்ளுங்கள்.
இது ஒரு அற்புதமான மருந்து. நீண்ட காலம் இந்த உலகத்தில் வாழ்வதற்கு இதை ஒரு அமானுஷ்ய கல்பம் என்று தான் சொல்ல முடியும். உடல் பலம் பெரும் சித்திகள் பெறும் யார் யாரெல்லாம் மந்திரங்கள் உபாசகர்கள் அதிகமாக பயன்படுத்துகிறீர்களா அனைவரும் இந்த கடுக்காயை பயன்படுத்தி உங்களுடைய ஞான மார்க்கத்திலும் யோக மார்க்கத்திலும் இருப்பவர்களும் உண்மையாக பக்தி மார்க்கத்தில் இருப்பவர்கள் எடுத்துக் கொண்டால் உங்கள் பக்தி மேலோங்கும். உடலில் இருக்கும் கசடுகள் வெளியேற ஆரம்பித்துவிட்டாள் இறைவன் மேல் வைத்திருக்ககூடிய பக்தி ஆயிரம் மடங்கு பெருகி போகும்.
VINODHAN..

Shopping Cart