Post Views: 233
இத்தைலம் தோல் நோய்களை, அரிப்பை சரி செய்கிறது.
தோலில் வயதாவதால் ஏற்படும் சுருக்கம் வராமல் இருக்க இந்த தைலத்தை தேய்த்து குளிக்கலாம்
சித்த மருந்துகளில் மத்தன் தைலத்தோடு சேர்த்து போட ஆறாபுண்ணும் ஆறும்
தேவையான பொருட்கள்
1. அருகம்புல்சாறு – 3.2 லி
2. தேங்காய் எண்ணெய் – 0.8 கிகி
3. தண்ணீர் – 3.2 லி
4. அதிமதுரம் – 50 கிராம்
செய்முறை
முதல் மூன்றையும் ஒன்றாகக் கலந்து அத்துடன் அதிமதுரத்தை அரைத்துக் கல்கமாகச் சேர்த்துக் காய்ச்சிக் கரபாகத்தில் இறக்கி வடிகட்டவும்.
பயன்படுத்தும் முறை
வெளி உபயோகத்திற்கு மட்டும்.
தீரும் நோய்கள்
உடலெரிச்சல், சொறி, சிரங்கு, பித்தத்தால் சீர்கேடடைந்த தோல் நோய்கள்.
புண்களை வெகு விரைவில் ஆற்றி அந்தப் பகுதிகளில் திசுக்கள் தோன்றி விரைந்து வளர்வதை ஊக்குவிக்கிறது
இந்த மருத்துவ முறையை தந்தது திருச்சி பெருமாள் பரம்பரை வைத்தியர்
vinodhan,