இந்த உலகத்தில் எல்லோரும் உணவிற்காக ஒரு சில விஷயங்களை செய்து கொண்டிருக்கிறார்கள் அது பலருக்கு தெரியும் ஆனால் உணவைப் பொறுத்து பலருக்கு தவறான எண்ணம் இருக்கிறது இந்த எண்ணத்தை மற்றும் மாற்றிவிட்டால் உணவு பரிசுத்தமாக்கும் உணவு தான் மனிதனுக்கு மிக முக்கியமான ஒரு ஆதாரமாக இருக்கிறது அதற்காக தான் அவன் இவ்வுலகத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறான் அந்த உணவை குறித்து ஒரு விழிப்புணர்வு பதிவு இது நம்முடையபெரும்பாலான மக்கள், உயர்ந்த விலை உடைய உணவு களில் அதிக சத்துக்கள் இருக்கும். எனவே சிறந்தது என நினைக் கின்றனர். அதேபோல் குறைந்த விலை உணவுப் பொருள்களில் (இயற்கையில் கிடக்கும் உணவுப் பொருள்களைப் பற்றித்தான் கூறுகிறேன்) சத்துக்கள் குறைவாக இருக்கும் என்றும், அவைகள் தரத்தில் தாழ்ந்தன என்றும் நினைக்கின்றனர். இரண்டுமே தவறு. உதாரணத்திற்குப் பழ வகைகளில் நான் குறிப்பிட்டுள்ளது போல விலை குறைந்த பப்பாளி, கொய்யா போன்றவைகள், விலை உயர்ந்த ஆப்பிளை விட உயர்ந்தது என்பது அறிஞர்களின் முடிவு.

எளிதில் கிடைக்கும் உணவுகள்

எளிதில் கிடைக்கும் சில இயற்கை உணவுப் பொருள்களை மட்டமாக பலர் நினைப்பது உண்டு. இதனால்தான் ‘தோட்டத்து பச்சிலைக்கு வீரியம் குறைவு’ என்ற பழமொழியே உருவானது. வெகுதூரத்திலிருந்தோ வெளிநாட்டிலிருந்தோ கஷ்டப்பட்டுப் பெறும் உணவுகளை உயர்ந்ததாக நினைப்பதும் உண்டு. இந்த இரண்டு எண்ணங்களுமே தவறு.

சீசன் உணவுகள்

சில உணவுப் பொருள்கள் உண்மையில் உயர்ந்த சத்துக்கள் உள்ளதாய் இருக்கும். அதனால் அதைத் தொடர்ந்து உண்ண விருப்பப்படும் சிலர், அவை அதிகம் விளையாத காலங்களில்

கூட அவற்றை அதிகம் விலை கொடுத்து வாங்கி உண்பதை பெருமையாக நினைக்கிறார்கள். இதுவும் தவறு. ஒரு பொருளின் சத்துகளும், அதன் மருத்துவ குணங்களும் அது அதிகம் விளை யும் காலத்தில்தான் அதில் அதிகம் இருக்கும், மற்ற காலங்களில் அவை குறைவாக இருக்கும்.

பெரிய கம்பளிகள்

சிலர் மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனங்கள் விற்பனை செய்யும் பொருள்கள் என்றால் அவை உயர்ந்த தரமாயும், மிகுந்த சத்துகள் உடையதாயும், உடலுக்கு அவை கெடுதியை உண் டாக்காது என்றும் கண்மூடித்தனமாக நம்புகின்றனர். இதுவும் தவறு. அந்நிறுவனங்களுக்குப் பணம் மட்டுமே குறி. உங்கள் ஆரோக்கியம் இல்லை.

அறிவியல் முறைப்படி நிரூபித்தது (Scientifically Proved)

ஒருசில உணவுகளை அறிவியல் முறைப்படி நிரூபித்தது என்று கூறி விளம்பரப்படுத்துவர். பல சமயங்களில் அது உண்மை யாகயும் இருக்கலாம். காலம் மாறும்போது, அதுவே தவறு என வேறு ஒரு சமயத்தில் நிரூபிப்பதும் இயல்பாக நடக்கிறது. இதுதவிர, அப்பொருள்களில் உள்ள வேறு விஷயங்கள் நம் உடலைக் கெடுக்கக் கூடியனவாக இருக்கும். இதுபற்றி அவர் களுக்கு தெரிந்த போதும், அவர்கள் அதுபற்றி வாயைத் திறப்ப தில்லை.

ஒரு உதாரணம்: கடலை எண்ணெய் கெடுதலை செய்யும் என்றனர். இன்றோ அது உடலுக்கு நல்லது என்கின்றனர். அதே போல் தேங்காய் எண்ணெயும் சிறந்ததுதான் என சில ஆராய்ச்சி களின் முடிவுகள் உள்ளன.

எனவே அனுபவத்தில் எது சிறந்த பலனைக் கொடுக்கிறதோ அல்லது நாம் மதிக்கும் நம் முன்னோர் கூறிய நல்ல விஷயங் களை பின்பற்றுவதே என்றும் சிறந்தது அல்லது கூறப்படும் விஷயம் பற்றி பல நூல்களில் நன்கு ஆராய்ந்து பின் நம்ப வேண்டும்.இன்றைய நாளில் சிலருக்கு கடை உணவுகளை வேறு வழியின்றி சாப்பிடுகின்றனர். இன்னும் பலருக்கு வாரம் ஓரிரு முறை விருப்பத்துடன் குடும்பத்துடன் ஹோட்டலுக்குச் சென்று உண்பதும் வாடிக்கையாகி விட்டது.கடை உணவு என நான் குறிப்பிடுவது நட்சத்திர ஹோட் டல்கள் முதல் சிறிய ஹோட்டல்கள், பீச் கடைகள், கையேந்தி பவன், இனிப்புக் கடைகள், போளி கடைகள் என அனைத்து வகை, அனைத்து தர கடை உணவுகளையும் சேர்த்துதான்.இவை அனைத்திலும் மேற்கூறிய உணவுப் பொருள்களில் சேர்க்கக்கூடாத பொருள்களான நிறம், மணம், சுவை ஊட்டக் கூடிய பொருள்கள் நிச்சயம் கலந்தே இருக்கும்.வாடிக்கையாளர்களைக் கவர ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் தில்லுமுல்லு செய்பவர்கள்தான். இவை தவிர, சில சிறிய கடைகளில் ஏற்கனவே பயன் படுத்திய சுட்ட எண்ணெயைத்தான் பலமுறை சுடவைத்துப்பயன்படுத்துவர்.

இதைவிடக் கொடிய விஷம் ஏதுமில்லை நாகரீகம் என நினைத்து கடைப்பொருள்களை தின்பவர் களால், கடைக்காரர்களுக்கும், மருத்துவமனைகளுக்கு நிச்சயம் லாபம் உண்டு என்பது, தற்காலத்தில் இவைகள் வளர்கிற வேகத்தைப் பார்த்தால் தானே புரியும்.சுவைகள் என்னும் தலைப்பில், மருத்துவ குணம் அதிகம் உள்ள சுவைகளாக துவர்ப்பு, கசப்பு, சுவைகள்தான் உள்ளன என்பது தெரியும். நீங்கள் இதை நிச்சயப்படுத்திக் கொள்ள வேண்டும். ஏனெனில் பெரும்பாலான ஆங்கில மருந்துகளை சிரப் தவிர சுவைத்துப் பாருங்கள். அதன் சுவை உங்களுக்குப் புரிய வைக்கும். அப்படிப்பட்ட சுவையை மக்கள் சுவைத்து சாப்பிடுவ தில்லை. மக்களுக்கு பிடிக்காத இந்த சுவையை எந்தக் கடை யிலும், ஹோட்டல்களிலும் விற்பதில்லை. அப்பொழுது எப்படி அந்தஉணவுகள் உடல்நலத்தை கொடுக்கும். அதாவது மிகுந்த சுவையுடைய பொருள்களில் குறிப்பாக எண்ணெயில் வறுத்தஅல்லது தீயில் நேரிடையாக சுட்ட பொருள்களில் நல்ல சத்துக்கள் இருப்பதில்லை. நல்ல சத்துக்கள் உடைய உணவுகளில் குறிப் பாக வேகவைத்த அல்லது பச்சைக் காய்கறிகளில் சிறந்த சுவை இருப்பதில்லை.எனவே, சத்து உடைய உணவும், சுவையுடைய உணவும் பல சமயங்களில் எதிர் எதிர் தன்மை உடையன. எனவே, நாம் நம் உணவில் சுவைக்காக சிலவற்றையும் அதன் சத்திற்காக பலவற்றையும் உண்ண பழகிக் கொள்ள வேண்டும்.

vinodhan 7010054619

Shopping Cart