தனிமனித சுதந்திரம் என்பது உண்மையில் என்ன?
தனிமனித சுதந்திரம் என்பது உண்மையில் என்ன அதாவது நாம் நம்முடைய சுய அறிவை பயன்படுத்தும்போது அதற்கு தடையாக யாரேனும் இல்லை என்பதே தனி மனித சுதந்திரம். சரி ஏன் இப்போது தனி மனித சுதந்திரம் இல்லாமல் இருக்கின்றது ஏன் நம்மை ஒருவர் பல விஷயங்களில் சுய அறிவை பயன்படுத்த தவறு அவர்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள். நாம் ஒரு செயலை செய்கிறோம் என்று சொன்னால் இதை நீ செய்யக்கூடாது என்று நமக்கு கட்டளையிடுகிறார்கள் இதற்கெல்லாம் என்ன காரணம் இதற்கு நாம் அனைவரும் ஒரு கொள்கையின் அடிப்படையிலோ மதங்களின் அடிப்படையிலோ ஜாதி கிழோ நாம் அழுத்தமாக சிக்கிக்கொண்டே இருக்கிறோம். இதுவே நம்முடைய சுய அறிவை மிகக் கடுமையாக பாதிக்கின்றது அது வளரும் இளம் பிள்ளைகளையும் பாதிக்கிறது இதனால் நாம் மனம் அடுத்த கட்டத்தை நோக்கி செல்லாமல் கீழ் நிலையாகவே இருக்கின்றது. இன்னொரு பக்கம் உளவியல் படி பார்த்தால் நாம் எந்த நபரின் மீதோ எந்த ஒரு பொருள்களின் மீதோ அதிக பற்று வைக்கின்றோமோ இதனால் ஆரம்பத்தில் இருந்த பற்று படிப்படியாக காலப்போக்கில் நமக்கே தெரியாமல் அதற்கு நாம் அடிமையாகிறோம்.
அடிமை என்பதற்கு பல்வேறு வகையான அர்த்தம் உண்டு ஒருவரின் கீழ் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது ஒருவகை அடிமைத்தனம் அல்லது நாம் ஒன்றின் மீது அதிக பற்று வைப்பதால் அதற்கு நாம் அடிமையாகி விடுகிறோம் இது ஒருவகையான அடிமை தனம். சரி இதற்கெல்லாம் நாம் என்ன செய்வது நாம் சுதந்திரமாக இருக்க என்ன செய்ய வேண்டும் முதலில் நாம் செய்யவேண்டியது அதிகமான மனிதர்களிடம் பழக வேண்டும் எப்படி பழக வேண்டும் என்றால் அளவாக பழக வேண்டும் ஏனெனில் மனிதர்களின் எவ்வளவு அன்பாக இருந்தாலும் சரி எவ்வளவு பயமாக இருந்தாலும் சரி எவ்வளவு கோபமாக இருந்தாலும் சரி அவை உங்களை எளிதில் அடிமைப்படுத்திவிடும் எப்படி என்றால் நம்முடைய உணர்வானது எந்த இடத்தில் நாம் அதிகமாக செலுத்துகிறோமோ அவை ஒரு கட்டத்திற்கு மேல் ஒருவித அடிமைத்தனத்தை ஏற்படுத்துகிறது.
பிறகு அளவுகடந்து பழகுதல் வேண்டாம் அப்போதுதான் நீங்கள் நினைத்த ஒரு சில இலக்கை அடைய முடியும் அதிகமாக மனிதர்களிடம் பழகுங்கள் நன்றாக அவர்கள் சொல்வதை ஏற்றுக் கொள்ளுங்கள் ஆனால் எவ்வித சூழ்நிலையிலும் உங்களை அவர்களுக்கு கொடுத்து விடாதீர்கள் மனதளவிலும் வேண்டாம் அன்பு காட்டுங்கள் அனைவரிடமும் அளவோடு காட்டுங்கள். ஆனால் மரியாதையை அதிகமாக்குங்கள் அப்போது நீங்கள் மனிதர்களிடம் நிறைய விஷயத்தை தெரிந்து கொள்ளலாம் ஏனெனில் அடிமைத்தனம் என்பது ஒருவித மோசமான உணர்வுதான் எப்படி என்றால் அவர்களுடைய சிந்தனையை உங்களுக்குள் திணிப்பார்கள். மனக்குழப்பத்திற்கு நீங்கள் ஆளாகி விடுவீர்கள். எனவே எதையும் கேளுங்கள் அதை உங்களுக்குள் ஆராயுங்கள் பிறகு ஒரு தெளிவுக்கு வாருங்கள். ஏனெனில் இங்கு அவர்களுடைய அறிவை இருப்பார்களே தவிர ஒரு புரிதலை கொண்டு வரமாட்டார்கள் எவன் ஒருவன் உங்களுக்கு புரிதலைக் கொண்டு வருகிறானோ அவனே ஒரு கிளர்ச்சியாளன். அன்பு என்பது நாம் சுதந்திரத்தை சற்று குறைக்கும் எப்படி என்றால் இந்த உலகத்தை சற்று ஆழமாக பார்த்தால் ஒவ்வொருவரும் தாங்கள் பிறரை மிகவும் நேசிப்பதாக நினைக்கிறார்கள் ஆனால் அவர்கள் அன்பை சற்று உற்று கவனித்தால் ஒருவருக்கொருவர் எப்படி அடுத்தவரை அடிமைப்படுத்துவது என்பதில் ஆர்வமாக இருப்பது புரியும் அன்பினால் ஒருவரை அடிமையாக்க முடியுமா அதற்கு பெயர் அன்பா ஆனால் நடைமுறையில் 99% அன்பு இப்படித்தான் இந்த உலகத்தில் செயல்படுகிறது இவை எதார்த்தமான உண்மையும் இது.
புரிதல் இல்லாத இந்த உலகில் அன்பு அப்படித்தான் ஆரம்பத்திலிருந்து செயல்படுகிறது ஆணும் சரி பெண்ணும் சரி அன்பை சரியாக புரிந்து கொண்டால் அவர்கள் சுதந்திரமாக இவ்வுலகில் வாழ முடியும் சரி சந்தோஷமாக இருப்பது எப்படி எப்போதும் இதுவும் ஒருவித சுதந்திரம்தான் ஏனெனில் சந்தோஷமாக இருக்க வேண்டாம் இந்த உலகத்தில் பிறந்து இருக்கின்றோம் சந்தோஷம் என்பது என்ன அதற்கு ஒரே பதில் தான் அன்பை புரிந்து கொள்ள வேண்டும். முதலில் அன்பு எங்கிருந்து தோன்றுகின்றது என்பதை நீங்கள் புரிந்து கொண்டால் சந்தோஷம் உங்களுக்கு ஒரு புரிதலோடு கிடைக்கும். பிறகு மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் உங்களுக்கு ஒருவர் இதை செய்யாதே என்பார்கள் அங்கும் உங்களுக்கு சுதந்திரம் இல்லாமல் போகும் நீங்கள் எவ்வித சலனமுமின்றி அதை செய்யுங்கள் எதுவாக இருந்தாலும் அதை புரிதலோடு செய்யுங்கள் ஏனெனில் தவறு செய்ய பயப்படும் மனிதன் வாழ்க்கையில் வளர்ச்சி அடையும் மாபெரும் ஒரு வாய்ப்பினை தவற விடுகிறான் என்று ஓஷோ கூறுகிறார்.
அந்த தவறின் மூலம் நீங்கள் கற்றது என்ன அப்போது உங்கள் மனம் பக்குவப்படும் ஏனெனில் இதை தவறு என்கிறார்கள் ஓ அதை துணிச்சலுடன் ஒருமுறை செய்து பாருங்கள் பிறகு சுற்றியுள்ள மக்கள் உங்களை என்ன செய்கிறார்கள் அந்த வகையில் நம் மனம் எப்படி இருந்தது என நாம் ஆராயவேண்டும். அதன் மூலம் நமக்கு நடக்க என்ன நடக்கிறது என்று உற்று கவனியுங்கள் பணம் பக்குவம் ஏற்படும் உங்களுக்கு பிறகு உங்களுக்கு தைரியத்தை கொடுக்கும். முக்கியமான இன்னொரு ஒரு விஷயத்தை நான் எதிர் கூறுகிறேன் அது என்னவென்றால்…( குற்ற உணர்வு).. உங்கள் மனதில் மாபெரும் குற்ற உணர்வு ஏற்படும். எந்த ஒரு செயலை செய்யும் போது உங்களுக்கு குற்ற உணர்வு ஏற்படுகிறது அங்கு உங்கள் சுதந்திரம் முற்றிலுமாக தடைபடும் பிறகு உங்களுக்கு சுதந்திரமே இருக்காது உற்று கவனியுங்கள் குற்ற உணர்வு உங்கள் பிறப்பிலேயே வந்ததா இல்லை வளரும்போது சமூகம் உங்களுக்கு குற்ற உணர்வை ஏற்படுத்தியதா சமூகம் உங்களுக்கு ஏற்படுத்தியதாகவே தான் இருக்குமே தவிர பிறப்பில் வந்தது கிடையாது நம்முடைய சுய அறிவையும் பாதிக்கும் முக்கியமான உணர்வு குற்ற உணர்வு ஏன் குற்ற உணர்வை ஏற்படுத்துகிறார்கள்.எதற்கேற்றாலும் குற்ற உணர்வு ஏற்படுகிறது என்றால் நம்மை யாரோ ஒருவர் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள் என்பது தான் நூறு சதவீத உண்மை. இந்தக் குற்ற உணர்விற்கு பின்னே உள்ள மர்மத்தை நீங்கள்தான் ஆராய்ந்து புரிந்துகொள்ள வேண்டும் அதிலிருந்து விடுபட வேண்டும். நாம் எந்த நிலையிலும் சுதந்திரமாக இருக்க முக்கியமாக ஒரு உச்சகட்ட சூட்சமமே இதுதான்.
பிறகு இன்னொரு ரகசியமும் உள்ளது அதுவே விழிப்புணர்வு ஆம் விழிப்புணர்வுடன் இருக்கும் இறைவனை யாராலும் அடிமை படுத்த முடியாது தனக்கு உள்ளேயும் வெளியேயும் விழிப்புணர்வு கொண்டு எவன் இருக்கிறானோ அவன் முற்றிலும் சுதந்திர மனிதனாவான். இதற்குப் பிறகு மனம் சமூகத்திலிருந்து விடுபட்டு அடுத்த பரிணாம வளர்ச்சியை ஆன்மீகம் ஆன்மீகம் என்பது என்ன என்றால் எவன் ஒருவன் மாயையை புரிந்து கொண்டு தன்னை அறிய முயல்கிறான் அவனே ஆன்மீகவாதி அதுவே உண்மையான ஆன்மிகம் வெளியே நடக்கும் மாயைக்கு காரணம் நம் மனம் நம் மனதை புரிந்து கொண்டால் மாயை விலகும் நமக்கு உச்சகட்ட சுதந்திரமே இதுதான் இதை எப்படி புரிந்து கொள்வது இதற்கு பயிற்சி இருக்கின்றதா என்றால் எவ்வித பயிற்சியும் கிடையாது புரிதல் ஒன்றே பயிற்சி புரிதல் என்பது அழகான ஒன்று அது அவ்வளவு சீக்கிரம் நம்மிடத்தில் வராது அதற்கு என்ன செய்ய வேண்டும் என்றால் விழிப்புணர்வு கொள்ளுங்கள் அல்லது விழிப்புணர்வு பெற்ற மனிதன் சிறந்த புரிதலை கொண்ட மனிதனாக இருப்பான் எந்த மனிதன் உங்களுக்கு புரிதலை ஏற்படுத்தும் என்றாலும் அவன் கடந்து வந்த பாதை எப்படி இருக்கும் தெரியுமா ஒரு ஊசி முனையில் ஒட்டகத்தை நுழைத்தால் எப்படி இருக்கும் அந்த அளவு மிக மோசமான பாதையை கடந்து வந்தவனே கிளர்ச்சியாளன் உண்மைகளை கொண்டவன் அவனே. ஆகவே சுதந்திரம் என்பது நமக்குள்ளே தான் முதலில் இருக்கிறது பிறகுதான் வெளியே அதை நாம் காண முடியும் ஆகவே நாம் எப்போதும் சுதந்திரமாக இருக்க சில விதிமுறைகளை புரிந்து கொள்ள வேண்டும்.(குறிப்பு)… மேலே கூறியதை நீங்கள் செய்ய தொடங்கும் போது உங்கள் மனம் பாதை தவறாக போகலாம் ஆனால் நீங்கள் மனதை பக்குவப்படுத்தி விழிப்புணர்வு கொண்டுதான் சிலவற்றை துணிச்சலாக செய்ய முடியும் ஆகவே மனப்பக்குவம் வேண்டும் சுதந்திரத்திற்கு அடிப்படையான சிலவற்றை புரிந்து கொள்வோம்.முதலில் அன்பு என்பது காமத்தில் தான் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
மனம் என்பது மாயை என புரிந்து கொள்ள வேண்டும் பிறகு மனமே குரு என்கிற ஒரு கட்டத்தில் மனம் உங்களை எடுத்துச் செல்லும் மனிதர்கள் என்பது ஒரு புரியாத புதிர் என்பதையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் ஏனென்றால் மனிதனே ஒரு நோய் என்று ஒரு மிகத் தெளிவாக கூறியிருக்கிறார் என்ன காரணம் என்றால் உங்களை நீங்களே புரிந்து கொண்டாலே ஒழிய பிறரை உங்களால் புரிந்து கொள்ள முடியும் இல்லையென்றால் முடியவே முடியாது. இவ்வித புரிதல்கள் இருந்தாலொழிய நீங்கள் அடிமைகள் கிடையாது. பிறகு எதற்கும் நீங்கள் அடிமையாகவும் மாட்டீர்கள்.நீங்கள் ஒரு சுதந்திர பறவை. இதன் மூலம் தான் சுய அறிவு எனப்படும் உள்ளுணர்வு உங்களுக்குள் செயல்படும் அதன் செயல்பாடுகள் மிக பிரம்மாண்டமாக இருக்கும் நன்றி மகிழ்ச்சி…🍬
Writer K.SivaGanesh…………..