இக்கட்டுரை முழுக்க முழுக்க தண்ணீரைப் பற்றியது தண்ணீரின் அவசியத்தை நம் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டும். இக்கட்டுரையை முடிக்கும் தருவாயில் தண்ணீரை தானமாக பெற வேண்டும் என்று எண்ணுவீர்கள்.
வெயில் காலத்தில் மண்பானை ஒன்று வாங்குங்கள். சளி பிடிக்கும் என சொல்லாதீர்கள்: சளி என்கிற கழிவைத் தான் மண்பானை வெளியேற்றும்! உங்கள் வீட்டு RO வாட்டர் வெளியேற்றாது!
மண்பானை நீர்- 7- 8 pH அளவு”
இரத்தத்தில் pH அளவும்
எலும்பு,மூட்டு வலியும்…!
மூட்டு எலும்பு வலிக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், மருத்துவர்கள் சொல்வது மூட்டு தேய்ந்து விட்டது, கால்சியம் குறைந்து விட்டது, எலும்பு அடர்த்தி குறைந்து விட்டது என்பதுதான்.
இயல்பாக இரத்தத்தின் pH அளவு 7.4 ஆகும். (pH என்பது “potential of Hydrogen”). ஒரு பொருள் 7 இற்கு கீழ் pH அளவு இருந்தால் அந்த பொருள் அமில தன்மை உடையது. ( Acid ). ஒரு பொருள் 7 இற்கு மேல் pH அளவு இருந்தால் அந்த பொருள் காரத்தன்மை உடையது.
(Alkaline):
நமது இரத்தம் இயல்பாகவே காரத்தன்மை உடைய 7.4 pH அளவு உடையது…!
ஆனால் நாம் அருந்தும் பெரும்பாலான குளிர்பானங்கள் அமிலத்தன்மை உடையவை.
அதாவது pH அளவு என்பது பெரும்பாலும் 5 விட கீழாக இருக்கும்.
இந்த குளிர்பானங்களை அருந்தும் போது நமது இரத்தமானது அதன் இயல்பான காரத்தன்மையை இழந்து அமிலத்தன்மையாக மாறும்.
இது தொடர்ந்து நடக்கும் போது இரத்தம் அமிலத்தமையை அடையும். இது பல்வேறு உடல்நல கேடுகளுக்கு வழிவகுக்கும். எனவே இதை தடுக்கும் பொருட்டு உடலானது இரத்தத்தை காரத்தன்மையாக மற்ற முயலும். இரத்தத்தை காரத்தன்மை உடையதாக மாற்ற கூடிய பொருள் கால்சியம். எனவே இந்த எலும்பு மற்றும் மூட்டுகளில் உள்ள கால்சியம் ஆனது ionized கால்சியம் ஆக மாற்ற பட்டு நமது இரத்தத்தில் கலக்கிறது . இப்போது இரத்தம் இயல்பான காரத்தன்மை அடைகிறது. இவ்வாறு எப்போதெல்லாம் இரத்தம் அமிலத்தன்மை உடையதாக மாறுகிறதோ அப்போதெல்லாம் கால்சியம் எலும்பு மூட்டுகளில் இருந்து பிரிந்து இரத்தத்தில் கலந்து அதை காரத்தன்மை உடையதாக மாற்றுகிறது.
*எனவே எலும்பு, மூட்டுகள் வலுவிழக்
எனவே எலும்பு, மூட்டுகள் வலுவிழக்கிறது. கடுமையான வலி உண்டாகிறது. இப்போது எந்த அளவு pH ஆனது கீழ்கண்ட பொருட்களில் இருக்கிறது என்று கூகுளில் தேடி பார்த்தபோது கீழ்கண்ட அளவீடுகள் கிடைத்தன.
குளிர்பானங்கள் – 2.3 – 3.5 pH அளவு.R.O.WATER – 5 – 6 pH அளவு.காபி -4.5 -5.5 pH அளவு.
மண்பானை நீர் – 7- 8 pH அளவு.
R.O. WATER – என்பது நாம் வீடுகளில் பெருமையாக நினைத்து பயன்படுத்தும் தண்ணீர் சுத்திகரிக்கும் கருவி.
தற்காலங்களில் பெரும்பாலான வீடுகளில் இந்த கருவிகள் பொருத்தப்பட்டு தண்ணீரை சுத்திகரிப்பதாய் நினைத்து மூட்டுவலியை விலை கொடுத்து வாங்குகிறோம்.
நாம் குடிக்கும் அத்தனை குளிர்பானங்களும் மூட்டுவலிக்கு ஒரு காரணமாய் அமைகிறது. இப்போது மண்பானை நீர் எவ்வளவு பாதுகாப்பானது என்று உங்களுக்கு தெரிய வரும்.
*ஏன் என்றால் மண்பானை நீர் pH அளவு 7- 8 ஆகும்.
*தண்ணீருக்கு என்று மிகப்பெரிய ஆற்றல் உண்டு. அதனால்தான் அனைத்து மதத்தவரும் தண்ணீரை புனித நீராக கூறுகிறார்கள். தண்ணீரில் அற்புதமும் செய்தார்கள்.
*தண்ணீர் அருந்தக்கூடாத நேரம் காலை 9 மணி முதல் 11 மணி வரை, இந்த விஷயம் நிறைய பேருக்கு தெரியாது, தெரிந்திருந்தாலும் கடைபிடிப்பதில்லை ,இந்த நேரத்தில் தண்ணி குடிக்காமல் இருந்தால், நமது மண்ணீரல் தன்னைத்தானே குணப்படுத்திக் ஆற்றல் உடையதாக மாறுகிறது.!
வெயில் காலத்தில் மண்பானை தண்ணீர் குளிர்ச்சியாகவும், குளிர்காலத்தில் வெண்கல பானை உடலுக்குத் தேவையான இளம் சூடு தண்ணீராகவும் பயன்படுகிறது.
*கேரளாவில் எந்த ரோட்டுக்கடையாக இருந்தாலும், மதிய உணவு ஓட்டல், நட்சத்திர ஓட்டல் என்று எங்கு போனாலும் குடிப்பதற்கு ஒரு வாசனை வெந்நீரை கொடுக்கிறார்கள். வெளியூரிலிருந்து வந்து நாசுக்கு பார்க்கும் வாடிக்கையாளரைக் கூட நம்பிக்கையுடன் குடிக்க சொல்கிறார்கள். வாட்டர் பாட்டிலை நீட்டுவதில்லை . (இதுவே நமது ஊராக இருந்தால் normal or cold water வேண்டுமா என்று கேட்பார்கள்).
எந்த கடைகள்தான் என்றால் கோயில் அன்னதானத்திலும் இதுதான். வீடுகளிலும்….. எங்கும் எதிலும்
கொஞ்சம் விசாரித்ததில் எவருக்கும் ஏன் செய்கிறோம் என்று தெரியவில்லை. அந்தளவு பல காலமாக நடைமுறையில் பழகிவிட்டது. குடிதண்ணீர் என்றாலே அவர்களுக்கு மூலிகை தண்ணீர்தான். பருவம் மாறும்போது தண்ணீரினால் நோய்வராமல் இருக்க என்று ஒரு ஒட்டல்காரர் சொன்னார்..
என்ன மூலிகை சேர்ப்பார்கள் என்று பார்ப்போம்.
அ) பதிமுகம் பட்டை (அதுதான் சிவப்பு வண்ணத்தை கொடுக்கிறது). (சிறுநீரக தொல்லை நீங்கும்)
ஆ) சொர்க்க மரம் (சைமரூபா கிளாக்கா). கான்சர் வராதாம்.
இ) கங்களி
இன்ன பிற மூலிகைகள்.
*பழக்கத்தில் (ஜீரோ பாக்டீரியா) மினரல் வாட்டர் பாட்டிலை கேட்டாலும் அவர்கள் அதை நமக்கு விற்காமல் இதை இலவசமாக குடிக்க சொல்கிறார்கள்.
*எங்கேயோ பூமிக்கு பின்புறத்தில் இருக்கும் அமெரிக்காவை காப்பியடிக்கும் நமக்கு பக்கத்து ஊரில் இருக்கும் மலையாளத்தானை நல்ல விஷயத்துக்கு அட்டை காப்பி அடிப்பது தவறா ? அடிப்போம் ?.
இனி எங்கு சென்றாலும் ஒரு பாட்டில் எடுத்துச் செல்வோம். தண்ணீரை தானம் அளிப்போம்,தானமாக பெறுவோம்.
*இந்த வாய்ப்பை அளித்து மாஸ்டர் அவர்களுக்கு தலை வணங்குகிறேன் நன்றி!!! நன்றி!!!
Hipnotist Karthik