ஆண்களுக்குத் தொடையில் ஏற்படும் வெரிகோஸ் பாதிப்பு……

விதைப்பை வீக்கத்தை (Varicocele) உருவாக்கக்கூடும்.

 வெரிகோசில் – Varicocele

குழந்தையின்மை பிரச்சினைக்கு காரணமாக வெரிகோசில் அமைகிறது.

சில ஆண்களுக்கு விதை பகுதியில் Varicocele சுருள் சிரை varicose ஏற்படுகின்றது. அதாவது, ஆண்களின் விதையை சுற்றியுள்ள பகுதிகளில் அதிகமான நேரம் இரத்தம் தேங்கியிருக்கும் போது அந்த இரத்தத்தால் ஏற்படும் அதிகமான வெப்பநிலையினால் விதைசெயல்படும் தன்மை குறைகிறது.

இப்பிரச்சினையுள்ள ஆண்களுக்கு உயிரணுக்களின் எண்ணிக்கையும் Sperm count அதன் துடிப்பும் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது.

இதனால் கருத்தரிப்பதற்கான Infertility வாய்ப்பு மிகவும் குறைவாகலாம்.

இதனால் பெண்கள் குழந்தையின்மை பிரச்சினைக்கு தள்ளப்படுகின்றனர்.

ஆனால் ஒரு சில ஆண்களுக்கு வெரிகோஸிலின் பிரச்சினை இருந்தும் கூட ஆரோக்கியமான உயிரணுக்கள் Healthy Sperms இருப்பதைப் பார்க்கலாம்.

குழந்தையின்மைக்கு………

ஆண்களின் காரணமாக வெரிகோஸில் வெயின் பிரச்னை இருக்கிறது. இதனால்………

👉விந்தணுக்களின் ஊர்ந்து செல்லும் பாதிப்பு Motility,

👉உருவ அமைப்பில் மாறுபாடுகள் ஏற்படுகின்றன Abnormal shape sperms.

விந்தில் குறைபாடு உள்ள அணுக்களும் defective sperms,

முதிராத அணுக்களும் Immature sperms நிறைய காணப்படும்.

ஒரு விரையைவிட இன்னொரு விரை சிறியதாக இருந்தால் small size testes அது வெரிகோஸ் வெயின் பிரச்னையாக இருக்கலாம்.

பாதிக்கப்பட்டவரைக் குனியவைத்து, மூச்சை இழுத்துவிடச் சொன்னால், அந்த அழுத்தத்தில் விரை வீங்கும்.

விந்துக் குழாய் சிரைச்சுருள் என்பது முக்கியமாக நரம்புகளின் உள்ளிருக்கும் வால்வுகளில் ஏற்படுத்தும் சேதத்தால் நரம்புகள் வீக்கம் மற்றும் விரிவடைவதோடு விரை நாணில் முறையான இரத்த ஓட்டமின்மையையும் ஏற்படுத்துகின்றது.

சிறுநீரகக் கட்டி போன்ற நிலைகள் கூட நரம்புக்கு செல்லும் இரத்த ஓட்டத்தில் அடைப்பை ஏற்படுத்தக்கூடும்

அறிகுறிகள்

  1. விந்துக் குழாய் சிரைச்சுருளில் பொதுவாக காணப்படும் அறிகுறிகள் மற்றும் அடையாளங்கள் பின்வருமாறு:
  2. அசௌகரியம்.
  3. மந்தமான வலி.
  4. விதைப்பையிலிருக்கும் நரம்புகள் விரிவடைந்தோ, அல்லது முறுக்கப்பட்ட நிலையில் இருப்பது.
  5. வலியில்லாத விதை முடிச்சு.
  6. இடுப்புதொடை நரம்பில் ஏற்படும் வீக்கம் அல்லது புடைப்பு.
  7. குழந்தையின்மை.
  8. குறைவான விந்துகளின் எண்ணிக்கை.
  9. அரிதாக – அறிகுறிகள் ஏற்படுவதில்லை.
Shopping Cart