பிறவித் தொடர்ச்சியும் தியானமும் நமக்குரிய ஒரு வீட்டில் நாம் குடியிருக்கின்றோம். அந்த வீடு நாம் ஆகிவிடுவதில்லை. நாம் குடியிருக்கும் வீடு அது. அது நமக்குப் பலவகையிலும் பயனுள்ளதாகவும் இருக்கும். அதன் அமைப்பும் செழுமையும் நமக்கு மகிழ்ச்சி தரும். ஆனால், அந்த வீட்டைவிட்டு நாம் போய் விடலாம். வீடு கவனிப்பாரற்று இடிந்து அழிந்து போகும். இது நமக்குத் தெரியும். சில சமயம் நாமே அழித்துவிட்டுப் புதுவீடு கட்டுவதும் உண்டு.உயிர் இப்படித்தான் இந்த உடற்கூட்டில் வாழ்ந்து வரு கின்றது. இதற்குமுன் எத்தனையோ உடற் கூடுகளில் வாழ்ந் தும் இருக்கலாம். இதை விட்டபின் வேறு உடற்கூடுகளை எடுத்துக் கொள்ளவும் செய்யலாம்இப்படிப் பிறந்து பிறந்து உலகிலே இன்ப களை உயிரானது அனுபவிப்பது துயரம் ஆனதுதான். இந்தத் துன்பங் துயரத்திலிருந்து அது விடுபடுவதுதான் நல்லது. உயிரைப் பற்றியுள்ள பாசம் துயரம் ஏற்படாது. கழன்றுவிட்டால் இந்தப் பிறவித்

பாசத்தை எப்படிக் கழற்றுவது ?

பரமாத்மாவின் துணையால்தான் கழற்ற முடியும். உடலோடு இருக்கும் உயிர், உலகப் பொருள்களிடமும் உலக ஜீவன்களிடமும் விருப்பும் வெறுப்பும் கொள்வதால் தான் இன்பதுன்பங்களை அனுபவிக்கின்றது. இந்தப் பற்று நீங்கவேண்டும். உலகப் பற்றிலிருந்தும் உடற்பற்றிலிருந்தும் விலகிப் போகும்போது, உயிர் தன்னையும் தன் நலத்தையும் சிந்திக்கின்றது; உடற்கட்டை வெறுக்கின்றது.

பரமாத்மாவினை நினைக்கின்றது!

பரமாத்மாவின் நினைவிலேயே மனத்தை முழுவதுமாக நிறுத்துகின்றது. இப்படி மனம் முழுமையாகப் பரத்துட னேயே ஒன்றி விடுவதைத்தான் ‘தியானம்’ என்கின்றோம்.மனம் பரமாத்மாவோடு ஒன்றும்போது, உயிரை அது தூண்டி மயக்குவதில்லை. உயிரின் உயர்வுக்கே அதுவும் உதவுகின்றது. மனம் இப்போது உடலைப்பற்றியும் உலகைப் பற்றியும் நினைப்பதை அறவே மறந்து விட்டு, உயிரைப் பற்றியே நினைக்கின்றது. உயிருக்கு உதவும் துணையாகி விடுகின்றது.இந்த உண்மைகளின் அடிப்படையில் தான் தியான யோகமும் சித்தர்களால் உருவாக்கித் தரப் பெற்றுள்ளது. தியானம் உயிரைஉயர்த்துகின்றது. வீட்டுக்காரனின்வளமை பெருகும்போது வீடும் நாளுக்குநாள் புதுமையும் வலிமையும் பெற்றுப் பிரகாசிப்பதைக் காணலாம். இப்படியே தான் உயிர் உயர்வு பெறும்போது உடலின் கருவி கரணங் களும் உயர்வு பெறுகின்றன. உடலும் பொன்மை பெற்றுப் பிரகாசிக்கின்றது!ஒரு குழந்தையின் உள்ளன. ஒன்று முன்னே கவர்ச்சியானது. இரண்டு பொருள்கள் ஆனால் குழந்தைக்கு அதனால் ஆபத்து வரும். ஒரு கூர்மையான கத்தி என்று வைத்துக் கொள்ளலாம். இன்னொன்று ஒரு மரப்பொம்மை யாக இருக்கும். குழந்தை சுதந்திரமாக எதையாவது எடுத்துக் கொள்ளட்டும் என்று விட்டுவிடலாமா? பெற்றோர் விட மாட்டார்கள், கத்தியை எடுத்து வேறு இடத்தில் வைத்து விடுவார்கள். குழந்தையின் அறியாமை அவர்கட்குத் தெரியும்.இப்படிப்பட்ட நிலையில்தான் மனிதரும் உள்ளனர். எது நல்லது, எது கெட்டது என்று தெரியாத நிலையில் மயங்கு கின்றனர். இந்த மயக்கம் காரணமாகத் தொல்லைகளையும் அனுபவிக்கின்றனர். இந்தத் தொல்லைகள் அறிவையும் மயக்குகின்றன.பரமான்மா மனித உயிர்களை இவ்வாறு விரும்பியபடி ஆடவிட்டுத்தான் வேடிக்கை பார்க்கின்றது. பிற உயிரினங் களின் வாழ்வைப் பரமான்மாவே தூண்டி நடத்தி வருகின்றது. மனிதனுக்கு மட்டும் பகுத்தறிவைத் தந்து இதைப் பயன்படுத்தி முன்னேறு’ என்று விதித்துள்ளது.இந்த அறிவைத் திருப்பிப் பரமான்மா தியானத்தில் நிறுத் தினால், ஆன்மாவிற்கு அதன் தன்மைகள் படருகின்றன.பர மான்மாவின் நிலையை நோக்கி உயிர் முன்னேறுகின்றது. தியான யோகம் இவ்வகையில் ஏற்பட்டது தான்.உலக நன்மைகளைப் பெறவும் தியானம் உதவாதா உதவும்? இந்த உதவியை பெறுவதற்கு உதவிய சக்தியைமேலும் உயர்வான நலன்களைப் பெறப் பயன்படுத்தி வேண்டும் என்று நினைத்தால் நல்லது. இதற்கு பரமான்ம தியானமே உதவும்.சில சமயங்களில் இந்தத் தியான ப் பயிற்சியானது உள்மனத்தில் ஒடுங்கிக் கிடக்கும் பூர்வ ஜன்ம ஞானங்களை வெளிப்படுத்தியும் உதவுவது

Vinodhan,

Shopping Cart