ஆண், பெண் என்னும் இரு சக்திகளின் கூட்டின் பலனாக மூன்றாவதான புது உயிர் உண்டாகிறது. ஆணின் உறுப்பில் இருந்து வெளிவரும் விந்துவில் உள்ள பரமாணுவும், பெண்ணின் வயிற்றில் உள்ள பரமாணுவும் சேர்ந்து புதிய உயிர் உண்டாகக்கூடிய கருவாகிறது.

கரு உண்டான முதல்நாள் கடுகுபோலவும், இரண்டாம்நாள் மல்லி போலவும், மூன்றாம் நாள் மிளகு போலவும், நான்காம் நாள் அவரை விதை போலவும், ஐந்தாம் நாள் நீர்க்குமிழியைப் போலவும், ஆறாம் நாள் நெல்லிக்காய் போலவும், ஏழாம் நாள் புன்னைக்காய் போலவும், ஒன்பதாம் நாள் காக்கை முட்டையைப் போலவும், பதினைந்தாம் நாள் கோழி முட்டை வடிவிலும் இருக்கும்.

முதல் மாதத்தில் வாழைப் பூ வடிவமாகும்.

இரண்டாம் மாதம் தலை, கழுத்து, முதுகு, தோள் உண்டாகும். உ மூன்றாம் மாதம் இடுப்பு, கை, கால், விரல்கள்

உண்டாகும்.

நான்காம் மாதம் வாய், நாக்கு, மூக்கு, பாதம் உண்டாகும்.

ஐந்தாம் மாதம் காது, கண்களுண்டாகும்.ஆறாம் மாதம் மல நீர்த் துளைகள், நகங்கள், நரம்புகள் உண்டாகும்.

ஏழாம் மாதம் நாடி, நரம்பு, ரத்தக் குழாய்கள் பூர்த்தி ஆகும். மயிர், எலும்புகள், குடல்கள், தொப்புள், அகன்ற கைகள், கால்கள், மூச்சுக் கருவிகள் முதலியன உண்டாகும்.

எட்டாம் மாதம் தாய் சாப்பிட்ட அன்னசாரம்

குழவிக்குச் சென்று உடலைப் பெருக்கச் செய்யும். ஒன்பதாம் மாதம் போதுமான உயிர் ஏற்படும். உச்சி வழி மூடும், அறிவு தோன்றும்.

பத்தாம் மாதம் வெப்பமும் காற்றும் அதிகரித்து

மலக்காற்றில் தலைகீழாகத் திரும்பி யோனி வழியாகக்

குழவி தலை திரும்பி பிறக்கும்.

தாய், தந்தை ஐம்பூத அமைப்புகளால் கருவில் உருவாகின்ற உடல் உறுப்புகள்:

தாயிடமிருந்து:- தோல், ரத்தம், தசை, கொழுப்பு தொப்புள், இருதயம், கல்லீரல், மண்ணீரல், சிறுநீர்ப் பை, சிறுகுடல்.

தந்தையிடமிருந்து:- தலைமயிர், நகம், மீசை

உடம்பு, மயிர், பற்கள், எலும்பு, ரத்தக்குழாய், நரம்பு,

தசைக்கயிறு.

தாயின் உணவால்:- நல்வாழ்வு, சுறுசுறுப்பு, புலன் தெளிவு, குரல்,நிறம்,மகிழ்ச்சி.கருவில் உடல் உருவாகும்போது உள்ள முக்குணங்களின் (முக்குற்றங்களின்) தன்மைக்கேற்ப உடல்வாகு அமைகிறது.

வாத உடல்

உடல் பருத்து குளுமையாக கருமை நிறத்துடன் இருக்கும். உணவில் அதிக காரத்தை விரும்புவர். வெற்றியும் புகழும் பெற பொய்யை மெய் போலப் பேசுவர். மந்த அறிவுடன் எச்செயலிலும் அசட்டை யாகவே இருப்பர். உடலுறவில் அதிக விருப்பம் இருக்கும். பித்த உடல்

உடல் மெலிந்தும், வெப்பமாகவும், வெண் பசுமை நிறத்துடனும் இருக்கும். குறைந்த உணவும், அதிகப் புளிப்பும் விரும்புவர். திடமும் கடினமுமான செயல் செய்வதுடன் பொய், மெய் பற்றி சிந்திப்பர். கடைக் கண் சிவந்து காணப்படும். இனிமைச் சொற்களைப் பேசி மூத்தவர்களை விருந்தோம்புவர்.

கப உடல்

உடல் தணிவாகவும், சிவந்த நிறமாகவும்

வேர்வையுடனும் இருக்கும். அதிக பசியுடன் தித்திப்பை விரும்புவர். அடக்கமாகவும், அழுத்தமாக வும் முடிவான பேச்சையே பேசுவர். நீண்ட தலைமயிர், பொய்யை மெய் எனப் பேசுதல், உடலுறவில் ஆர்வம், மார்க்கங்களில் விருப்பம் முதலியன உள்ளவராக இருப்பர்.உடல் மெலிந்து கருமை நிறமாகக் காணும், உணவில் அதிகக் காரமும், துவர்ப்பும் விரும்புவர். கோபம், அறிவுத் தெளிவிண்மை காம இச்சை முதலியன இருக்கும்.

வாத கப உடல்

உடல் தடித்து யானை போன்ற நடையுடன் சிவப்பு நிறத்துடன் இருப்பர். எல்லாக் கலைகளையும் அறியும் திறமை, யோகப் பயிற்சி, சிற்றின்பதில் ஆர்வம், அதிக புளிப்பும் காரமும் உள்ள உணவுகளில் ஆர்வம் உள்ளவர்.

பித்த வாத உடல்

உடல் வறண்டு வெண்சிவப்பு நிறமாக இருக்கும். அறிவுடைமை, இனிய குரல் ஒசை, நறுமணங்களில் விருப்பம், அதிக காரமும் புளிப்பும் விரும்புதல் முதலியன இருக்கும்.

பித்த கப உடல்

சண்பக மலர் போன்ற நிறம், இரக்க சிந்தனை, கற்றோரை ஆதரித்தல், நடுநிலையான யோகாப்பியாசம் இனிய குரல் முதலியன இருக்கும்.

கப வாத உடல்

உடல் தடித்து கறுப்பு, சிவப்பு நிறத்துடன் கற்றல், பெரியோரை ஆதரித்தல், உற்சாகம் முதலிய வற்றுடன் அதிக காரமும் புளிப்பும் விரும்புவர்.

vinodhan,

Shopping Cart