சொர்க்க தேவதை அதுவும் இன்றைய காலத்தில்.  இன்றைய நவீன காலத்தில் அதுவும் ஒரு தேவதை நம்முடைய விருப்பங்களை நிறைவேற்றுகிறது என்றால் நம்மால் நம்ப முடியவில்லை அல்லவா! இது முற்றிலும் உண்மை ஏனென்றால் நாம் இந்த விரைவான உலகில் நாம் எதையோ எதற்காகவோ எப்படியோ நாம் ஒன்றை நோக்கி நம்முடைய வாழ்வை தினசரி கடந்து கொண்டிருக்கிறோம். அதில் எவ்வளவு கஷ்டம் எவ்வளவு கவலை எவ்வளவு பதட்டம் என்கிற ஒரு இறுக்கமான சூழ்நிலைகளில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பது மறக்க முடியாத உண்மையும் தவிர்க்க முடியாத உண்மையும் கூட நாளுக்கு நாள் நம்முடைய விருப்பங்கள் அதிகமாகிக் கொண்டே தான் இருக்கிறது இதற்கு என்ன காரணம் என்று கேட்டால் பலவித காரணங்கள் நம்மிடம் ஏராளம் உள்ளது இந்த பிரபஞ்சம் இருக்கின்ற வரை நமக்கு விருப்பங்கள் உருவாகிக் கொண்டுதான் இருக்கும்.

       இது இந்த உலகத்தில் எதார்த்தம் எல்லோராலும் ஞானிகள் ஆகிவிட முடியாது அல்லவா! ஏனென்றால் நாமே ஒரு விருப்பத்தின் மூலமாகத்தான் இவ்வுலகில் பிரவேசித்திருக்கிறோம் நாமும் ஒரு ஆசை விளைவாகத்தான் நம்முடைய வேலையை செய்து கொண்டிருக்கிறோம் இதற்கு அடிப்படை ஆசையே! அப்பேர்ப்பட்ட விருப்பங்களை நாம் நிறைவேற்றவில்லை என்றால் நம் மனம் என்ன பாடுபடுகிறது மனம் சஞ்சலம் அடைவதால் நம் மனமே கவலை கொள்கிறது. அந்தக் கவலை நம் மனதை ஆட்கொள்வதால் நமக்கு மனம் மற்றும் உடல் சார்ந்த பிரச்சினைகளை நமக்கு விளைவிப்பதோடு நாம் எண்ணங்களின் மாறுபடுதலுக்கும் இவ்விருப்பம் காரணமாகிறது. சரி இப்பேற்பட்ட விருப்பங்களை நாமே நிறைவேற்ற படாத பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம் பின்னர் அதை நோக்கியும் சென்று கொண்டிருக்கிறோம் இதற்கு நமக்கு ஒரு துணை இருந்தால் நன்றாக இருக்கும் அல்லவா! உடனே நமக்கு ஒன்று தோன்றும் மனைவியா.

    அட நான் கல்யாணம் பண்ணாம இருந்தா நல்லா இருந்திருக்கும் என்று பலர் மனதில் தோன்றுவது நகைச்சுவையான ஒன்று. அந்த துணை எல்லாம் கிடையாது நான் சொல்வது மனிதர்களை அல்ல. சரி கடவுளா என்றால் நானும் கடவுளை கும்பிட்டுக் கொண்டுதான் இருக்கிறேன் ஒன்னும் வேலைக்கு ஆகவில்லை என்று உங்கள் மைண்ட் வாய்ஸ் கேட்கிறது ஆனால் நான் சொல்வது கடவுளை அல்ல இவ்வுலகில் வாழ்ந்த அழகிய பருவம் மங்கை எனப்படும் சொர்க்க தேவதை (Angel) அந்த இளம் வயது பருவ மங்கையின் மிகப்பெரிய விருப்பமே பிறர் விருப்பங்களை நிறைவேற்றுவது. அந்த அளவுக்கு சக்தி வாய்ந்த உயரீய (pure soul). இவ்வுலகில் இன்று நவீனமும் அறிவியலும் நிறைந்த இவ்வுலகத்தில் இது ஏதோ மூடநம்பிக்கை என்று கூட சொல்லலாம் அதை உடைத்து நிருபித்து காட்டக்கூடிய அளவிற்கு எந்த தேவதைக்கு அவ்வளவு தந்திரமான திறமைகளைக் கொண்ட பலவித சக்திகள் உண்டு. ஆம் இன்று பலரது சந்தோஷத்திற்கு காரணமாக இந்த தேவதை இன்று இந்த உலகத்தில்(The precious soul) லாக பிரவேசித்துக் கொண்டிருக்கிறது.

   சந்தோஷம் என்கிற ஒன்று ஒரு மனிதன் தான் கற்பனையில் நடந்த ஒன்றை நிஜத்தில் காணும் போது அவன் தன் உள்ளுணர்வில் இருந்து ஆனந்தம் கொள்கிறான். அப்பேர்ப்பட்ட நிலையை கொண்டு வர மனிதர்களால் முடியும் ஆனால் மனிதர்களால் முடியாத அளவுக்கு இந்த தேவதையை ஒருவனுக்கு நிறைவேற்றி க் கொடுக்கிறது அதுவும் இந்த காலத்தில் (2022) இந்த தேவதைக்கு அழிவே கிடையாது என்பது இது செய்த பலவித ஆக்கபூர்வமான செயல்களும் விருப்பங்களும் அனுபவங்களும் தான் அப்பேர்ப்பட்ட சக்தி கொண்டு இந்த தேவதை யார் இது உண்மையா அல்லது பொய்யா என்று பலருக்கும் அதிகமானவர்களுக்கும் ஐயம் உண்டு என்பது ஏற்றுக் கொள்ளக் கூடியது.

      ஆம் சிந்தனை மிகுந்த மனிதர்கள் இவ்வுலகில் ஏராளம் என்பது வரலாறு ஏனென்றால் ஒரு கண்டுபிடிப்பு ஏற்பட்டு அதை வெளியே விட வேண்டும் என்றால் சிந்தனை மிகுந்த மனிதர்கள் கண்டுபிடிப்பை பலவித ஐயங்களுடன் கேள்விகளுடன் பல ஆராய்ச்சிக்கொண்டுதான் தான் அதை மக்கள் மத்தியில் வெளியே விடுவார்கள் அதேபோலத்தான் இந்த சொர்க்க தேவதையும் இதனுடைய ஆரம்பத்தை நான் உங்களுக்கு வெளியே விட்டுள்ளேன். இதன் நோக்கம் மற்றவர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் அவர்களுடைய பாதுகாப்பையும் நிலை நிறுத்துவது இதுவே இந்த தேவதையின் உயரிய நோக்கம். இந்த ஏஞ்சல் செய்த பல வித விருப்பங்கள் என்ன என்பதையும் யார் இந்த (Angel) இதைப் பற்றிய விவரத்தை விளக்கமாக அடுத்த வாரம் பார்ப்போம். இந்த தேவதை செய்த செயல்கள் ஏராளம் எனவே இது ஒரு தொடர்கதை என்பதை நாம் கூறுகிறோம்.தொடரும்….

Vinodhan,,,,,,,,,,,,,,,,,,,,,

Writing Sivaganesh

Shopping Cart