இவ்வளவுதான் வாழ்க்கையா? இதற் காகத்தான் இத்தனை சிரமங்களா?
இதற்காகத் தான் நான் இவ்வளவு உழைத்தேனா? எனக்கு மட்டும் ஏன் இத்தனை சிக்கல்கள்? எனக்கு மட்டும் ஏன் இத்தனை சங்கடங்கள்? நம் எல்லோரையும் அவ்வப்போது குடைந்து கொண்டிருக்கும் கேள்விகள் இவை. எத்தனை சம்பாதித்தாலும் போதவில்லை. நிறைய கனவுகள். நிறைய திட்டங்கள். புத்துணர்ச்சி இல்லை. உடலும் மனமும் சோர்ந்து போயிருக்கின்றன. உடல் ஆனால், சோர்வாவது பரவாயில்லை. மனச்சோர்வை என்ன செய்ய? ஜென் நமக்கு அறிமுகம் ஆகவேண்டிய
இடம் இதுதான். நம் கையைப் பிடித்து இழுத்து அருகில் அமர வைத்து தோளில் கை போட்டு,
அவ்வப்போது நம் கன்னத்தைத் தடவிக் கொடுத்து, குழந்தைகளுக்கு ஏ ஃபார் ஆப்பிள் சொல்லித் தருவதுபோல் வாழ்வியல் நெறிகளை கற்றுத் தருகிறது ஜென்.
எளிமையாக, மிக மிக எளிமையாக. எந்த தத்துவமாவது முதல் வாசிப்பில் நமக்கு இதுவரை புரிந்திருக்கிறதா? சத்தியமாகக் கிடையாது. அதிலும் ஆன்மிக நெடி வந்துவிட்டால் அவ்வளவு தான். ஆத்மா, அந்தர்த்மா, அப்பர் ஆத்மா என்று படுத்திஎடுத்துவிடுவார்கள். ஜென் ஒரு தத்துவம். ஆனால், புரியக்கூடிய தத்துவம். வாழ்வின் இன்பங்களை, சோகங்களை, வெற்றிகளை, தோல்விகளை, உயரங்களை, சரிவுகளை புரியவைக்கும் தத்துவம்.
ஜென் தத்துவத்தை சாறு பிழிந்தால் இப்படி வரும். நீ யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். உன் பதவி என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம். உன் வேலையை செய். ஒழுங்காக. ரசனையுடன், சிறு தவறும் இல்லாமல். போதும்.இதிலென்ன இருக்கிறது? எல்லோரும் வேலைதானே செய்து கொண்டிருக்கிறோம் நினைப்பவர்களுக்கு அடுத்த பாரா. அவரவர். என்றுஅவர் ஒரு ஜென் துறவி. சுலபத்தில் வாயில் நுழையாத ஏதோ ஒரு ஜப்பானிய பெயர். சொன்னாலும் நினைவில் வைத்துக் கொள்வது சிரமம். அவருடைய வேலை என்ன தெரியுமா? மடாலயத்தின் வாசலில் இருக்கும் ஆலமரத்திலிருந்து விழும் குப்பை, சத்தைகளை தூசி தும்பு இல்லாமல் அகற்றுவது. உங்கள் வேலை என்ன என்று அவரிடம் கேட்டுப் பாருங்கள்.தவம் செய்கிறேன் தம்பி என்று சொல்வார். அட, குப்பையை பெருக்குவதுதான் தவமா என்று ஆச்சரியத்துடன் கேட்டுப் பாருங்கள். சொல்வார். தம்பி, கண்களை மூடி நிஷ்டையில் ஆழ்ந்துவிடுவதுதான் தவம் என்று நீ நினைத்துக் கொண்டிருக் கிறாய். தவறு. என்னளவில் இதுதான் தவம்.இன்னும் கொஞ்சம் நெருங்கிப் போனால் அவர் சொல்வதன் பொருள் முழுவதுமாக, பிரமாண்டமாகப் புரியவரும்.
உன் பணி குப்பைகளை அகற்றுவது எனில், நீதான் ஆலமரம். நீதான் வழிப்பாதை. நீதான் உதிர்ந்த இலை, நீதான் சருகு நீதான் தூசு நீதான் மணல். நீதான் துடைப்பம் நீதான் சுத்தம்,உன்னை உன் வேலையில் கரைத்துக்கொள். நீதான் வேலை. இதுதான் மந்திரம். தேவையற்றதை அகற்றுங்கள். இது முதல் வேலை. தேவையில்லாததுஎது? குப்பைகள், எதுபோன்ற குப்பைகள்?
பொறாமை, தோல்வி மனப்பான்மை, பயம், விரக்தி, மனஉளைச்சல், சந்தேகம். இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். நமக்கே தெரியும். நம்மிடம் மலிந்துள்ள குப்பைகள் என்னென்ன, அவை எப்போதெல்லாம் வெளிப்படும், எப்போதெல்லாம் நம்மை பூதம்போல் கடித்து சாப்பிடும் என்று.அவற்றை ஒவ்வொன்றாகக் களையவேண்டும்.சாமர்த்தியமாக.
புத்தர் அவர் வாழ்ந்த காலத்தில் பல்வேறு எதிரிகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. தர்க்கம் செய்ய வேண்டியிருந்தது. புத்தர் மீது அவருடைய எதிரிகள் முன்வைத்த குற்றச்சாட்டு, அவர் மானுட குலத்தைக் கெடுக்கிறார், கடவுளை எதிர்க்கிறார், இந்து மதத்துக்கு எதிராக பிரச்சாரம் செய்கிறார் என்பதுதான்.சம்யுத நிகாயா என்னும் நூல் புத்தர் நிகழ்த்திய ஒரு சிறு உரையாடலை இப்படி பதிவு செய்திருக் கிறது.
பரத்வாஜா: கவுதமா, உன் கருத்துக்களை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. நீ வேண்டுமென்றே கலகம் செய்கிறாய். வேண்டுமென்றே எங்களை இழிவுபடுத்துகிறாய். எங்கள் நம்பிக்கைகளை சிதைக்கிறாய்.நீ சொல்வது அனைத்தும் பொய். உன் நோக்கம்தீங்கு விளைவிக்கக்கூடியது.
புத்தர்: உன்னிடம் ஒரு கேள்வி கேட்கட்டுமா?
பரத்வாஜா ம், கேள்.
புத்தர்: உன் வீட்டுக்கு விருந்தாளிகள் வருவதுண்டா?
பரத்வாஜா: உண்டு
புத்தர்: நண்பர்கள்? பரத்வாஜா: வருவதுண்டு.
புத்தர்: அவர்களை நீ தக்கமுறையில் மரியாதை செலுத்தி வரவேற்பதுண்டா?
பரத்வாஜா: நிச்சயமாக புத்தர்: நீ அளிக்கும் ஆகாரங்களை அவர்கள் ஏற்றுக்கொள்ள மறுத்தால் என்ன செய்வாய்? பரத்வாஜா: அவர்களுக்குத் தெரிந்தது அவ்வளவுதான் என்று அனைத்தையும் நானே வைத்துக் கொள்வேன்.
புத்தர்: உன் குற்றச்சாட்டுகளை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. அனைத்தையும் மறுக்கிறேன். ஆகவே,எல்லாவற்றையும் நீயே ஏற்றுக்கொள்.சுலபமாக பிரச்சினை முடிந்துவிட்டது இல்லையா?யை மட்டும் நான் செய்வேன். சிரத்தையாக. என் எதிரிகள் என்னைப் பற்றி என்ன வேண்டுமானாலும் நினைத்துக்
நமக்கு வேண்டியது இந்தத் தெளிவுதான். என் வேலை கொள்ளட்டும். என்னை அயோக்கியன் என்று சொல்லிக் கொள்ளட்டும். என் வேலையில் குற்றம் கண்டுபிடித் துக் கொள்ளட்டும். என்னை ஏசட்டும். நிராகரிக்கட்டும். சபிக்கட்டும்.அத்தனையும் எனக்குக் குப்பைகள். அவற்றை நான் பொருட்படுத்த மாட்டேன். குப்பையைக் கொண்டு வருபவர்கள் குப்பைக்குச் சொந்தக்காரர்கள். குப்பையை வீசுபவர்கள் குப்பையின் சொந்தக்காரர்கள். ஒருவேளை, குப்பை, என் காலருகே விழுந்துகிடந்தால், நல்லதொரு துடைப்பத்தைக் கொண்டு வந்து அதை நான் சுத்தமாக்குவேன்
vinodhan, 7010054619