உயிர்களின் தோற்றத்திற்கும் உடல் இயக்கம் மற்றும் உயிர்களின் இயக்கத்திற்கும் விந்து தான் மூல காரணமாக இருக்கின்றது. சுக்கிலத்தின் மகிமைகளை பின்வரும் சித்தர்களின் பாடல்களின் மூலம் அறியலாம்.
“விந்தை விட்டவன்
நொந்து கெட்டான்” “சுக்கிலம் விட சுவர் கெடும்” திருமுலர்_வாக்கு “இந்தரியம் தீர்ந்துவிட்டால்
சுந்தரியும் பேய்போல”
விந்து இருந்தால் அறுபது வயதிலும்
இளமையாக வாழலாம்… விந்து இல்லாவிட்டால் முப்பது வயதிலேயே முதுமை வரலாம்
இது நிஜம்……… போகியாய் வாழ்வதற்கும் விந்து வேண்டும்………… யோகியாய் வாழ்வதற்கும் விந்து வேண்டும்…………
ஏனெனில் உயிர்களின் தோற்றத்திற்கும் உடல் இயக்கம் மற்றும் உயிர்களின் இயக்கத்திற்கும் விந்து தான் மூல காரணமாக இருக்கின்றது சரி விந்து இழப்புக்கும் உடலுறவு கொள்ள முடியாமல் போவதுக்கும் என்ன தொடர்பு
அதிகமான விந்தை இழந்துவிட்ட ஒருவனது செயல்பாடுகள் அனைத்து செயல்களிலும் நிறைவனதகாவே இருக்காது. அது போல தான் உடலுறவிலும். உடல் சக்திஇன்மை தான் காரணம் அனைத்துக்கும் வேறு ஒன்றும் இல்லை.எனவே விந்தை விணடிக்காமல், உடலுறவு என்பது ஏதோ கழிவை கழித்தல் போல வைத்து கொண்டால் உடல் நன்றாக இருக்கும், அதை விடுத்தது, ஏதோ இன்பம் கிடைகிறது என்று அதை நோண்டி கொண்டே இருந்தால் உடல் பலம் கெட்டு உடல் நோய்களின் இருப்பிடம் ஆகிவிடும்.
வஜ்ரோலி முத்திரை, பரியங்க யோகம் போன்ற சில யோகங்களே அவைகள். உலகியல் வாழ்வின்படி மணம் செய்து கொண்ட யோகியர் பெண்ணிடம் சேர்ந்தாலும் உடல்கள் சங்கமிக்குமே அல்லாது உள்ளம் சிவனிடத்து இருக்குமாகையால் விந்து கழியாது. இதற்கு இருபாலினருக்கும் பயிற்சியும், ஒருங்கிணைந்த மனப் போக்கும் அவசியம். இதுவே நற்போகமென்றும், இதனால் விரைவில் குண்டலினி மகாசக்தி மகிழ்ந்து மேலேறுவாள் என்றும் சொல்லப்பட்டுள்ளது. இத்தகைய யோகியர் மக்கட்பேறு வேண்டி விந்துவினை விடுவார்களே அன்றி, காதல் வயப்பட்டு அதிகம் விடமாட்டார்கள். விந்துவினை மூலதாரத்தில் அனலால் செம்மையுறச் செய்து, அங்கிருந்து தொப்புள் முதல் நெஞ்சம் வரையுள்ள சூரிய மண்டலத்துக்கு வலது நாடி வழியாக ஏற்றி, அங்கிருந்து நெற்றி வரை இடப்பால் நாடி வழியாக ஏற்றி சந்திர மண்டலம் சேர்ந்து அமுதம் உண்ணலாம்.
இந்த வேளையில் மேலேறும் விந்துவைக் கட்டும் வழி உள்ளது. திருவருட் சக்தியின் துணை கொண்டு மூலத்திடை விளங்கும் அனலை எங்கும் போகமாட்டாமல் சிவசிவ என்னும் நான்மறையால் கைவரச் செய்து யோகியானவர் தன் வாழ்க்கைத் துணைவியாம் பெண்ணின் செந்நீராம் நாதத்துடன் தன் நடுநாடி வழியாக விந்துவாம் வெண்ணீரைச் செலுத்தினால் அவ்விந்து கட்டுப்படும். இதை ஒவ்வொரு ஆதாரமாக மேலேற்றுவார்களாம். இதற்கு நெற்றி வழியாக அருந்தும் சந்திர அமிர்தமும் துணை நிற்கும். ஆரம்ப நிலையில் குண்டலினி யோகம் செய்கிறவர்களுக்கு ஏற்படும் அதிகபட்சமான வீரியத்தை சமநிலைக்கு கொண்டுவர பெண் சம்போகம் தேவையாகும். பிறகு அவர்கள் வஜ்ரோலி முத்திரை மூலமாக விந்து விரையமாகாமல் போகம் செய்து, அதையும் சிவயோகமாகச் செய்து இருவரும் மேன்மை அடைவர்.
இதில் தேர்ச்சி பெற்ற குருவெல்லாம் அவ்வளவு எளிதில் வெளியே காட்டிக் கொள்ள மாட்டார்கள். ஏனென்றால் இன்றைய காலகட்டங்கள் இதற்கு ஏற்புடையதாக இல்லை. இதைப் பயன்படுத்தி தவறு செய்பவர்களே அதிகம் காணப்படுவார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. மாதம் இருமுறை சம்போகம் செய்பவர்களுக்கு இதெல்லாம் தேவையில்லை என்பதே சித்தர்கள் வாக்கு. யோக மார்க்கத்தில் மேன்மையடைய சம்போகத்தையே பயன்படுத்தும் தாந்திரீக யோகமும் உண்டு. அதாவது மன உணர்வினை உடலில் அனுபவித்து, விந்தை வெளிவிடாது மனதை ஒரு நிலைப்படுத்துவர். கடும் பயிற்சிக்குப் பின் இருவருடைய ஒத்துழைப்பின் அடிப்படையில் இந்தக் கலை சிறக்கும்.
இந்த நிலையில் யோகியானவர் யோகாசனம் தெரிந்த பெண்ணோடு உடல் அதிக உஷ்ணமடையாத வண்ணமும், சுவாசம் தறிகெட்டு ஓடாத வண்ணமும் சுவாச முறைகளைக் கையாண்டு நீண்ட நேரம் சம்போகம் செய்வார். இந்த நேரத்தில் காம உணர்வோடு கூடாமல், சிந்தையை புருவ மத்தியில் திரட்டி, விந்தை வெளியே விடாமல் நீண்ட நேரம் கூடி உள்ள உணர்வுகளை ஒருங்கிணைத்து தெய்வநிலை அடைவர். உடல் புணர்ச்சி நிலையில் திளைத்திருந்தாலும் மனம் மட்டும் புருவ மத்தியிலேயே நிலைத்திருக்கும். இதனால் குண்டலினியானது வெளியே கிளம்பும். போகத்தால் குண்டலினியைக் கிளப்புவர்.
இதில் பெண்ணும் ஒத்துழைத்து மனதை புருவ மத்தியில் நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையெனில் மனதை ஏதாவது ஒரு ஆதாரத்தில் நிறுத்தலாம். இந்த நிலையில் சுவாசத்தைக் கட்டுப்படுத்தி இருவரும் கூடும் போது இந்திரிய சக்தி விரையமாகது என்பதோடு ஆன்மிக சக்தியான குண்டலினியும் கிளப்பி விடப்படும். இருவரும் அதை ஒவ்வொரு ஆதாரமாக ஒருமித்த கருத்துடனும், முனைப்புடனும் மேலேற்றுவர். விந்துவும் நாதமும் அருளாகப் பொருந்தி உடன் கூடி சந்திர மண்டலத்தை எட்டுமாயின் ஆயிரம் இதழ் தாமரை பரவெளியிலிருந்து அமிழ்தம் வெள்ளம் போல் பெருகுமாம்
பரியங்க யோகம் என்பது உடலுறவின் மூலம் வழிபாடு அல்ல, அது ஒரு யோகியின் சக்தியை மேல்நோக்கி திருப்புவது, அதன் ஓட்டத்தை மாற்றுவது. இதைப்பற்றி சரியாக அறிந்துகொள்வது பல தவறான சாதனைகள் குழப்பங்களைத் தவிர்க்கிறது.
சுக்கிலம் அல்லது விந்து உயிர்ச்சக்தி. அதை பௌத்த மதத்தில் போதிசித்தம் என்பர். இந்த விந்துவின் இயற்கையான கீழ்நோக்கிய ஓட்டத்தைத் தடுத்து அதை மேல்நோக்கித் திருப்புவது பரவிருத்தி எனப்படுகிறது. இயற்கையாக ஓட்டத்தை உடைய ரசமான விந்துவை மேல் நோக்கித் திருப்பும்போது அது கெட்டிப்பட்டு வஜ்ரம் போல் ஆகிறது. இது ரசவாதத்தில் பாதரசத்தை கெட்டிப்படுத்துவதை ஒக்கும். யோக உபநிஷத் இவ்வாறு விந்துவை மாற்றுவது அந்த யோகியின் உடலுக்கு ஒரு விசேஷ மணத்தை அளிக்கும் என்கிறது. நாத சித்தர்கள் இந்த உல்டா சாதனையை மேற்கொள்வர். இது லய யோகம் அல்லது வெளிப்பட்டு உள்ள உலகம் மீண்டும் லயம் அடைவதைக் குறிக்கிறது. இதுவே சிவனின் சம்ஹாரம்.
கீழ் நோக்கி ஓடும் விந்துவை மடைமாற்றினால் அது ஓஜஸ் ஆகிறது. அந்த ஓஜஸ் மேலும் பயிற்சி செய்யும்போது தேஜஸாகி யோகியின் உடலுக்கு ஒளியூட்டுகிறது. முனைவர் டி.என். கணபதி அவர்கள் தனது திருமந்திரப் பேருரைகள் என்னும் நூலில் இந்த முறையைப் பற்றி விரிவாக எழுதியுள்ளார். இவ்வாறு விந்துவை வெளிவிடாமல் உள்நிறுத்துவது ஸ்கந்தம் என்கிறார். இந்தக் கட்டுப்பாட்டை ஒரு யோகி அடையும்வரை கந்தன் பிறப்பதில்லை! இந்த முறையைப் பற்றி போகர் தனது அஷ்டாங்க யோகம் என்ற நூலிலும் ராமலிங்க அடிகள் தனது அனுபவமாலை என்னும் நூலிலும் குறிப்பிட்டுள்ளனர் என்கிறார் திரு, கணபதி அவர்கள். அஷ்டாங்க யோகம் என்ற சொல் உடலுறவு கொள்ளும் இருவரது எட்டு அவயவங்கள் அல்ல, அவை அவ்விருவரது நான்கு அந்தக்கரணங்களான மனம், புத்தி, சித்தம் அகங்காரம் என்பவை ஒன்றாவது என்று பொருள். ஜெயதேவரின் கீதகோவிந்தம் என்னும் பாடலும் இதே கருத்தில் எழுதப்பட்டது.
கருப்பு, சாம்பல், வெள்ளை எனப்படும் யோகத்தில் கருப்பு யோகத்தில் சுக்கிலம் சுரோணிதத்துடன் சேருகிறது. சாம்பல் யோகத்தில் சில சமயம் சேருகிறது மற்ற சமயங்களில் சேருவதில்லை. வெள்ளை யோகத்தில்சுக்கிலம் வெளிப்படுவதில்லை. இதுவே யோகத்தில் உயர்ந்ததாகக் கருதப்படுகிறது.இது வாமாசாரம் எனப்படும்.
திருமூலர் இந்த முறையைப் பற்றி விளக்கும்போது தனது மந்திரம் 521ல் “ அண்டமொடு எண்திசை தாங்கும் அதோமுகம், கண்டம் கறுத்த கருத்து அறிவார் இல்லை, உண்டது நஞ்சு என்று உரைப்பார் உணர்வு இலோர், வெண்சடை மாலை விரிசடையோர்க்கே” என்கிறார். கபால மாலையும் விரிசடையும் கொண்ட சிவனுக்கு கண்டம் கறுத்த காரணத்தை அறியாதவர்கள் அவன் நஞ்சை உண்டான் என்பர் என்கிறார் திருமூலர். தொண்டைக்குக் கீழே சுக்கிலத்தைப் போக விட்டால் கழுத்து கறுக்கும். அதை தொண்டைக்கு மேலே எழச் செய்தால், ஆக்ஞை வரை எழச் செய்தால் அது அமிர்தமாகி உடலை ஒளிரச் செய்யும். இதுவே சிவபெருமான் நீலகண்டனாக காட்சியளிப்பதன் பின் உள்ள தத்துவம். சரி இந்த முறையை எவ்வாறு நிகழ்த்துவது? மந்திரம் 825 ல் மங்கையின் உடலை வாசனை திரவியங்களால் அலங்கரித்து ஒரு ஆண் மூச்சை உறவின்போது மேலே செலுத்த அறிந்தால் இறப்பிலா இன்பம் என்கிறார் திருமூலர். இதைப் பயிற்சி செய்ய அந்த ஆண்மகன் 30 வயதினனாகவும் பெண் 28 வயதினளாகவும் இருப்பது நல்லது. மாதவிலக்கிற்குப் பிறகு 5, 6, 11 நாட்களில் மேற்கொள்ளக் கூடாது, மற்ற ஆறு நாட்கள் மற்றும் மூன்று வாரங்கள் பயிற்சி செய்யலாம் எனவும் வளர்பிறையில் முதல் எட்டு நாட்களைத் தவிர்த்து மீதி ஆறு நாட்கள் தேய்பிறை முதல் ஆறு நாட்கள் இதைப் பயிற்சி செய்யலாம் என்றும் அவர் கூறுகிறார். இந்த யோகத்தின்போது நான்காவது முகூர்த்தத்தில் உடலுறவைக் கொண்டு மூச்சு சந்திர நாடியில் ஓடி சூர்யா நாடியில் தடைப்பட்டபோது சுக்கிலத்தை வெளிவிடவேண்டும். இதற்கு ஐந்து கடிகைகள் அல்லது இரண்டரை மணி நேரம் பயிற்சி செய்துவிட்டு ஆறாவது கடிகை அப்பெண் தனது காதலனின் தோளில் தூங்குவாள். இந்தப் பயிற்சியை யோகத்தில் உச்சநிலையை அடைந்தவர்களே கேசரி முத்திரையில் தேர்ந்தவர்களே மேற்கொள்ள வேண்டும் என்று கூறும் திருமூலர் இதை சிவன் சக்திக்குக் கற்றுக் கொடுத்தார் என்கிறார். மேலும் அவர் இந்த பிந்து வெற்றி சி என்னும் மந்திரத்தை ஓம் என்னும் பிரணவத்துடன் சேர்த்தால் சிவயநம என்று தோன்றும்போது அடையலாம் என்கிறார் பரியங்க யோகத்தைக் குறித்து இன்னும் அதிகமாக தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் பயிற்சி முறை மாணவர்கள் மட்டுமே புரிந்து கொள்ள முடியும் இதற்காக சில பயிற்சிகள் உண்டு அந்த பயிற்சிகளை நாம் 100 நாட்கள் தொடர்ந்து செய்யவேண்டும் செய்த பிறகு நமக்கு பரியங்க யோகம் கிட்டும் 100 நாட்களுக்கு மேல் பயிற்சி செய்த பிறகு சில உணர்வு நிலை தோன்றும் அந்த உணர்வு நிலைக்கு பிறகு நாம் அந்த நிலையை அடைய முடியும் அதுமட்டுமில்லாமல் இதற்கு ஒரு யோக முறைகள் உள்ளன அந்த யோக பயிற்சியின் மூலமாக நாம் இந்த நிலையை அடையலாம் இது சித்தர்களின் வாக்கு
vinodhan.7010054619