பெண்களாகிய நீங்கள் முதலில் உங்களது மாதவிடாய் சூழ்நிலையை சீர்செய்து கொள்ள வேண்டும் மாதவிடாய் சம்பந்தப்பட்ட ஏற்கனவே நான் எழுதியுள்ளேன் அது அதனுடைய லின்க் https://vinodhan.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4/ இணைக்கப்படுகிறது.

முதலில் மாதவிடாய் சுழற்சியை நன்கு புரிந்துகொள்ளுங்கள்.அந்த காலகட்டத்தில் உங்களது மனம் அலைபாயும் மனதை நிலை நிறுத்த முடியாது முயற்சி செய்யுங்கள் ஆறு மாத கால அவகாசம் எடுத்துக் கொள்ளுங்கள்.இந்த ஆறு மாத காலத்தில் உங்களது மாதவிடாய் சுழற்சி சீராகி விடும் இந்த 6 மாத காலத்தில் மாதவிடாய் நேரத்தில் ஐந்து நாட்கள் குறிப்பாக மூன்று நாட்களில் நீங்கள் பூரண ஓய்வு எடுக்க வேண்டும்.இந்த ஓய்வு நாள் உங்களது உடலும் மனமும் முன்னேறி விடும். உங்களது மாதவிடாய் காலத்தில் எப்பொழுதுமே இரவில் நீராகாரம் எந்த வகையான கஞ்சியாகவும் இருக்கலாம். உங்களது மனமும் உடலும் முன்னேறி விடும் இந்த முன்னேற்றம் உங்களுக்கு உத்வேகத்தைக் கொடுக்கும்.

**கருப்பை கட்டி சினைப்பை கட்டியின் எதுவாக இருந்தாலும் நமக்கு ஒன்றுதான்.
பின்வரும் குறிப்புகளை நீங்கள் எடுத்துக்கொள்ளும் போது உங்களது உடலுக்குத் தேவையான ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் அதிகமாக சுரக்கும். அப்பொழுது கருப்பை கட்டி சினைப்பைக் கட்டி சீராகிவிடும்.

* என்னவென்று பார்ப்போமா.
எள்ளுப் பொடி,மாதுளை பழம் ஜூஸ் மாதவிடாய் காலம் ஏழு நாட்கள் தொடர்ச்சியாக தினமும் உண்ண வேண்டும் அருந்த வேண்டும் இதை தொடர்ச்சியாக செய்யும் போது, உங்களது உடலுக்குத் தேவையான ஈஸ்ட்ரஜன் ஹார்மோன் போதிய அளவுக்கு சுரக்க ஆரம்பித்துவிடும்.
ஆண் பெண் இருவரும் தினமும் ஒரு செவ்வாழை உண்ண வேண்டும் செவ்வாழையின் சிறப்பு ஆண்களின் விந்தை உறுதியாகவும் பெண்களின் கருப்பை சினைப்பை கட்டிகளை கரைக்கும் பேருதவி செய்கிறது.

**”இந்த கிழங்கு விசேஷமானது பெயரிலேயே சதா உள்ளது. இந்த கிழங்கு கிடைக்கும் இடம் மலை சார்ந்த இடங்களில் மட்டும் குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே கிடைக்கும்.சதாவரி கிழங்கு இந்த கிழங்கை தோல் சீவி துண்டுகளாக நறுக்கி நாட்டுச்சக்கரை கலந்து அரைத்து ஜூஸாக குடிக்கவேண்டும். பெண்களுக்கு இருக்கக்கூடிய கருப்பை சினைப்பை கட்டிகள் கரைக்கும். அவர்களுக்கு தேவையான குளிர்ச்சியை அளித்து பெரும் உதவி செய்கிறது.

பெண்களின் இயல்பான ஹார்மோன் வளர்ச்சியை நிலக்கடலை சீராக்குகிறது. இதனால் பெண்களுக்கு விரைவில் குழந்தை பேறு ஏற்படுவதுடன் பெண்களுக்கு ஏற்படும் மார்பகக் கட்டி உண்டாவதையும் தடுக்கிறது. பெண்களுக்கு பெரிதும் தேவையான போலிக் அமிலம், பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், துத்தநாகம், இரும்பு, விட்டமின்கள், குறுட்டாமிக் அமிலம் நிலக்கடலையில் நிறைந்துள்ளது. இதன் காரணமாக பெண்களுக்கு கருப்பை கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படுவதையும் தடுக்கிறது.

ஆண் குளிர்ச்சியாகவும் பெண் சூடாகவும் இருத்தல் அவசியம். உங்களது பிரைவேட் பார்ட், ஆண் ரூமுக்கு செல்லும்போது நன்கு வாஷ் செய்து கொள்ளவும்,பெண் ஒரு மணி நேரத்துக்கு முன்னாடி வாஷ் செய்து கொள்ளவும். தாம்பத்தியத்தை செயலாக இல்லாமல், ஆரோக்கியம் சார்ந்த விஷயமாகவும் உடல் சார்ந்த விஷயமாகவும் மனம் சார்ந்த விஷயமாகவும் வெளிப்படுத்தும்போது நம் உடல் தன்னைத்தானே குணப்படுத்திக் பேராற்றல் உடையதாக மாறுகிறது.

*                            

செய்யக்கூடாதவை……………………………………………..
நீங்கள் முயற்சி செய்யும் மைதா உணவு,எண்ணெயில் பொரித்த உணவு,ஜங்கிள் ஃபுட்ஸ் தவிர்த்தல் மிக சிறந்தத, பிறகு ஃப்ரிட்ஜில் வைத்த எந்த உணவையும் தண்ணீரையும் அருந்தக்கூடாது.

* இதன்பிறகு நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால் நம் முன்னோர்கள் பயன்படுத்திய முறை தான் மாவிளக்கு வாரத்தில் ஒருநாள் கோவில் சென்று செய்ய வேண்டும் என்று அவசியமில்லை வீட்டினிலே வாரத்தில் ஒரு நாள் உங்கள் தொப்பில் மா விளக்கு ஏற்றுங்கள் நமது உடலின் மத்திய பகுதியில் முடிச்சு , தலையின் உச்சிப்பகுதியில் மா விளக்கு ஏற்ற வேண்டும்.
இந்த செயலால் இரு வர்மப் புள்ளிகளும் அந்த தீபத்தின் வெப்பத்தால் இரு புள்ளிகளும் தூண்டி நமது ஆற்றலைப் பெருக்கி கர்ப்பப்பையை சீராக்கி மனதையும் சீராக்கி பெரிதும் இந்த மாவிளக்கு நமக்கு நிறைவேற்றித் தரும்.

Fertility time தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள் உங்களது மாதவிடாய் காலத்தில் முடியும் தருவாயில் இருந்து 5வது நாள் முதல் 12 நாட்களுக்குள் fertility timeஇந்த நாட்களை குறித்து வைத்துக்கொள்ளுங்கள் அனைவருக்கும் பொருந்தக்கூடிய நாட்களே. நம்பிக்கையுடன் செய்யுங்கள் வெற்றி உங்களுக்கே.இந்த வாய்ப்பை அளித்த வினோதன் மாஸ்டர் அவர்களுக்கு நன்றி

Hipnotist Karthik,

 

Shopping Cart