சந்தோஷ உணர்வு தான் உங்கள் தெய்வீக உணர்வு….
இவ்வுலகில் வாழ்ந்து கொண்டிருக்கிற ஜீவராசிகள் அனைத்தும் ஏதோ ஒன்றிற்காக வாழ்ந்து பிறகு வாழ்வை மடிக்கின்றது. ஆனால் யாருக்கும் மனத் திருப்தி என்பது அறவே கிடையாது ஏனெனில் அவைகள் தினம் தினம் ஒருவித கவலைகள் செல்கின்றன. கவலை என்பது உங்களுக்குள் இருந்து தோன்றுகின்றது நீங்கள் வாழும் முறையில் பலரை பார்த்தும் சில எதிர்பார்ப்புகள் சில ஏமாற்றங்கள் நீங்கள் வாழ்ந்து உங்களுக்கு ஏழும் பெரும் பிரச்சனை விடை தெரியாமல் போவதால் கவலை உங்களை ஆட்கொள்கிறது. சரி சந்தோஷ உறவு உணர்வினை எப்படி அதிகப்படுத்துவது என்பதை பார்ப்போம் ஆனால் இதற்கிடையில் இவ்வித உணர்வுகளையும் நாம் தெரிந்து கொண்டும் புரிந்து கொண்டு வந்தால் ஒழிய நாம் சந்தோஷம் உணர்வினை அடைய முடியும்.
ஏனெனில் நாம் அனைவரும் சந்தோஷம் உணர்வின் மூலம் தான் இங்கு பிறப்பெடுத்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம் குழந்தையிலிருந்து அந்த உணர்வு நாம் முதிர்ச்சி அடைய முதிர்ச்சி அடைய நம்மை விட்டு போய் விடுகிறது. இதற்கு காரணம் நாம் அனைவரும் சந்தோஷம் என்பது மனிதன் மூலமாகவோ பஸ் மூலமாகவோ இருப்பின் அதன் மூலமாகவும் அவை வெளியில் கிடைக்கிறது என்று நாம் நம்பி இருக்கிறோம் உண்மையில் சந்தோஷம் என்பது உங்களுக்குள்ளேயே தான் இருக்கிறது வெளியில் தோன்றும் பிறரின் மூலமும் சந்தோஷம் கிடைக்கிறது என்பது ஒருவித உங்களின் மனம் செய்யும் தந்திரம். ஆனால் உண்மையில் சந்தோஷம் என்பது நீங்கள்தான் உங்களுக்குள் தான் இருக்கிறது அதனை நீங்கள் உணர வேண்டும் அதை உணர்வதற்கு முன்பாக பிற உணர்வுகள் நம்மை வாழ்நாள் முழுவதும் ஆட்கொண்டு இந்த சந்தோஷம் என்கிற உணர்வை சிறிதாக நமக்கு கொடுப்பதால் நாம் அதை மீண்டும் கிடைக்க வேண்டும் என்பதற்காக வெளியே தேடி அதை பெற நாம் கஷ்டப்படுகிறோம்.
பிற உணர்வுகளில் சிக்கி உள்ள நாம் இந்த சந்தோஷம் உணர்வில் எப்போதும் இருக்க நாம் ஆழ்ந்து சிந்திக்கவேண்டும் இந்த உணர்வினை புரிந்து கொள்வதற்கு பதிலாக முதலில் நாம் நம் மனதை புரிந்துகொள்ள வேண்டும் ஆம் மனதை புரிந்து கொள்ள வேண்டும் அனைத்து வித உணர்வு ஏற்படுவதற்கு காரணம் நம் மனமே மனம் தான் இவை அனைத்தும் ஏற்படுத்துகிறது நம் உடலில் உள்ள மனதின் உணர்வுகளை மாற்றினால் ஒழிய நாம் வாழ்வை மாற்ற முடியும் இல்லையெனில் நமது வாழ்க்கை பாராது ஏனெனில் வாழ்க்கை என்பது உண்மையான அர்த்தம் வாழுதல் வாழ்தல் என்பது உங்களின் உணர்நிலை எவ்வித உணர்வில் நாம் இப்போது வாழ்கிறோமோ இந்த நொடி அந்த உணர்வு நிலையை நாம் வாழ்க்கை ஆகையால் உணர்வினை நாம் புரிந்து கொள்ள வேண்டும். பிறகுஅவ் உணர்வுநிலையை கையாலள நமக்கு தெரிந்தால் நாம் முழுமையான வாழ்க்கையை வாழ்வோம். சரி சந்தோஷ உணர்வு நமக்கு தடைபட என்ன காரணம் ஏன் இவை எப்போதாவது நமக்கு கிடைக்கிறது என்பதை நாம் முதலில் அலசுவோம். முதன்மையான ஒன்று ஆசை ஆசை என்கிற ஒன்றை நாம் எதில் வைக்கிறோமோ நம்முடைய சந்தோஷ உணர்வு அங்கு தடைபடுகிறது ஏனென்றால் ஆசையே துன்பத்திற்கு காரணம். https://www.youtube.com/results?search_query=vinodhan
நம் மனம் ஆசை ஒன்றை உருவாக்கி அதை அடைந்தால் தான் நமக்கு சந்தோஷம் என்கிற நிலை உருவாக்கப்படுகிறது அதனால் சந்தோஷம் இல்லாமல் நாம் அலைகிறோம். இவ்வுலகில் ஆசையை நோக்கியே தான் நாம் வாழ்கிறோம் நாம் எந்த அளவுக்கு ஒரு நபரின் மீது பொருளின் மீதோ அல்லது இல்லாத ஒன்று ஏதோ பணத்தின் மீது ஆசை கொள்ளும் போது அதை அடைந்தே தீரவேண்டும் என்ற எண்ணம் நமக்கு தோன்றுகின்றது. எப்படி ஆசை உருவாக்கப்படுகிறது என்றால் பிரிந்து செல்வதைத் தவிர்ப்பதன் மூலமாகவும் அதை நாம் உருவாக்கிக் கொண்டு அந்த ஆசையை நாம் உருவாக்கிக் கொள்கிறோம் அல்லது நம் பார்ப்பதன் மூலமாகவும் ஆசை என்ற ஒன்றினை நம் மனம் உருவாகிறது.
நம் ஆசை வைக்கும் போது நமக்கு சந்தோஷமே கிடைக்காது பிறகு இதன் மூலம் உருவாக்கப்பட்டது தான் கவலை கோபம் வெறுப்பு உணர்வு போன்றவற்றுக்கு வழிவகுக்கிறது. இவ்வித உணர்வுகள் நாளடைவில் தீய பழக்கங்களுக்கு வழிவகுத்து நம்மை அடிமைகளாக்கி விடுகிறது. ஆம் நம் மனதிற்கு ஆசை என்கிற ஒரு வார்த்தை மிகவும் பிடித்த வார்த்தை அதை இதை யாரிடம் சொன்னாலும் அவர்களுக்குப் பிடிக்கும் மனிதன் ஆசையை அடிப்படையாகக் கொண்டு இவ்வுலகில் மாயையான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறான். ஆகவே ஆசை நிறைவேறினால்தான் நான் சந்தோஷமாக இருப்பேன் என்ற நிலைக்கு மனிதன் வந்துவிடுகிறான். அதை நான் அடைந்தே தீருவேன் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு என்று கூறுகிறார்கள் நம்பிக்கை ஒன்றே இங்குதான் அணு அளவு உருவாகிறது. ஆசையிலிருந்து எந்த மனிதன் விடுகிறானோ அவனே சந்தோஷம் உடையவன் ஆசை உருவாக என்ன காரணம் என்றால் மனம் ஒரு குழந்தை அதுதான் காரணம் குழந்தைக்குத் தேவை எது அசை எது என்று புரியாது. இரண்டிற்கும் நாம் வேறுபாட்டினை புரிந்து கொள்ள வேண்டும் தேவைக்காக நாம் உழைக்க வேண்டும் அப்போது மனம் எவ்வித சலிப்பும் இல்லாமல் இருக்கும் ஆனால் ஆசையை நோக்கி சென்றால் மனம் தேவை இல்லாத உணர்வினை உருவாக்கும். தேவை என்பதை கொண்டு நிறைவாக வாழ ஆரம்பித்தால் சந்தோஷ உணர்வு நம்மிடத்தில் இருப்பதை உணர முடியும். இரண்டாவது கவலை உணர்வு ஏன் கவலை உணர்வு வருகிறது ஒரு உணர்வின் பாதிப்பில் வருகிறது
ஒரு உணர்வை நம்மால் அல்லது வெளியே உள்ள நபர்கள் அதை சிதைவுபடுத்தும்போது கவலை வருகிறது பிறகு எதிர்பார்ப்பு நமக்கு ஏற்படும் பிரச்சனைகளை கையாள தெரியாததால் கவலை என்கிற உணர்வு ஏற்படுகிறது பிறகு முக்கியமாக நம்முடைய கடந்த கால நினைவலைகளையும் எதிர் கால நினைவலைகளையும் நமக்கே தெரியாமல் நம் மனம் நம்மை முன்னும் பின்னுமாக மாற்றி மாற்றி எடுத்து செல்வதால் நிகழ் காலத்திலிருந்து கொண்டு கடந்ததை நடப்பதை எண்ணி நிகழ்காலம் என்கிற பொக்கிஷத்தை அனுபவிக்காமல் நிகழ்காலம் கவலை காலமாக நம்மை நம் மனம் பாடு படுத்துகிறது ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் ஒரு உணர்வானது குட்டிபோடும் நம்மில் யாருக்காவது தெரியுமா
நாம் எந்த உணர்வில் அதிகமாக இருக்கிறோமோ அந்த உணர்வானது குட்டி போட்டு நம்மை அதன்கீழ் ஆழ்படுத்திவிடும். ஆகையால்தான் எவ்வித உணர்வாக இருந்தாலும் அதிலிருந்து வெளியே வர வேண்டும் ஆனால் ஒரே ஒரு உணர்வைத் தவிர அது தான் நம்முடைய சந்தோஷ உணர்வு அந்த உணர்வு போடுகின்ற குட்டிதான் தெய்வீக உணர்வு. அந்த உணர்வில் நாம் வாழும் போதுதான் நாம் யாரென்று ஒரு காலத்திற்கு மேல் தெரியவரும். ஆகவே அந்த உணர்வைத்தான் நம் மனம் நம்மை அடைய விடாமல் எப்போதாவது கொடுத்துவிட்டுப் போகிறது உணர்விலேயே நாம் வாழ்ந்தால் நாம் யார் என்று தெரிந்து விடும் அது தெரியக்கூடாது என்பதற்காக தான் நம்முடைய மனம் அதை எப்போதாவது கொடுத்துவிட்டு சென்று விடுகிறது சரி கவலை என்கிற உணர்வை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஏன் கவலை வருகிறது இதனால் கவலை உருவாகிறது என்கிற கேள்வியை மட்டும் கவலை வரும்போது கேட்டால் கவலைக்கு பயம் வந்துவிடும் இவன் நம்மை நோண்ட ஆரம்பிக்கிறான் என்று அந்த கேள்வியை கேட்டு காரணத்தை கண்டு பிடியுங்கள் காரணம் கிடைக்கும் அதற்குத் தீர்வு அதிகபட்சம் 24 மணி நேரம் எடுத்துக் கொண்டு அதை முடித்து விடுங்கள் யாரிடத்திலும் போகாதீர்கள் யாரிடமாவது போய் கேட்கலாம் என்று நினைத்தால் நம்முடைய கவலை வளர ஆரம்பித்துவிடும் ஏனெனில் நமக்கான தீர்வு நம்மிடத்தில் தான் உள்ளது வெளியே ஒரு போதும் இல்லை புரிந்து கொள்வோம் நம் மேல் கல் பட்டவுடன் அதற்கான வைத்தியம் என்ன என்று அறிந்து அதை சரிப்படுத்த மருந்து போட்டால் காயம் வலி குறைந்து ஆற ஆரம்பித்துவிடும்.
அதுபோன்று கவலையும் ஒரு குளத்தில் கல்லெறிந்தால் அதன் அதிர்வுகள் ஏற்படும் அலைவரிசை குளம் முழுவதும் பரவும் அதுபோன்றுதான் நம்மை பாதிக்கும் உணர்வுகளும் அவ்வித உணர்வுகளை நாம் ஆட்கொள்ள படும்போது அதை ஏன் வருகிறது அதன் காரணம் என்னவென்று கண்டுபிடித்து அதை அப்போவே நாம் அழித்துவிடவேண்டும் நம்மை பாதிக்கும் சில உணர்வுகள் கோபம் கவலை ஏக்கம் ஆசை அறியாமை தாழ்வுமனப்பான்மை பயம் அகங்காரம் ஆணவம்போன்ற உணர்வுகள் நம் மனதையும் நம் உடலையும் பாதிக்கிறது இவ்வித உணர்வுகள் சந்தோஷத்தை அடைய தடைக் கற்களாக உள்ள உணர்வுகள். இதை நாம் புரிந்து கொண்டால் போதும் இதிலிருந்து நாம் விடுபடலாம் எதை எதையோ புரிந்துகொள்கிறோம் வெளியில் உள்ளதை ஆனால் நமக்கு உள்ளே நடக்கும் இந்த நாடகத்தை தான் புரிந்துகொள்ள மாட்டிகிறோம். சரி இவ்வித உணர்வுகளில் நமக்கு எழும் பிரச்சனைகள் வித விதமாக இருக்கிறது அதற்கு நாம் எப்படி தீர்வினை கண்டுபிடிப்பது இதற்கு நல்ல ஆலோசகரிடம் சென்று தீர்வினை கேட்கலாம் என்று நாம் நினைப்போம் சரிதான் ஆனால் நமக்கு ஏற்பட்ட பிரச்சனைக்கு தீர்வு நம்மிடத்தில் தான் உள்ளது என்னதான் ஆலோசகர் சொன்னாலும் நாம் அதை செய்வோம் ஆனால் அதில் திருப்தி இருக்காது பாதி அளவே இருக்கும். ஏனென்றால் நம்முடைய பிரச்சனைக்கு நாம் தீர்வினைக் கண்டு பிடித்தால் கிடைப்பது முழுமையான திருப்தி கொண்ட சந்தோஷம் நமக்கு கிடைக்கும். சரி அதுதான் எப்படி உண்மையை சொல்கிறேன் இப்போதுதான் சந்தோஷத்தின் நுழைவாயிலில் நாம் நுழைகிறோம் அதுதான் நம்மிடத்தில் உள்ள அலாவுதீன் பூதம் விளக்கு என்பது நீங்கள் என்பது நம்முடைய ஆழ்மனதை கடந்து உள்ளுணர்வு நிலை (super conscious 🤩🌟).https://www.youtube.com/results?search_query=vinodhan
இதுதான் நம்முடைய மிக அற்புதமான புனிதமான மனம் ஆழ்மனம் நமக்கு பிரச்சனையை ஈட்டித்தரும் ஆனால் நம்முடைய உள்மனம் நம் பிரச்சனையை சரிசெய்து நமக்கு அமைதியான சந்தோஷத்தை தரும் சரி உள்ளுணர்வு பிரச்சனையை தீர்க்கும் என்றால் அது எந்த முறையில் தீர்க்கும் அது எப்படி தீர்க்கும் என்றால் பிரச்சினையை தீர்ப்பதற்கான வழியை நம்மிடம் பரிபாஷைகள் என்ற உணர்வினால் நம்மிடம் அது உணர்த்தும் அல்லது பேசும் சரி அது எப்படி என்றால் நம்முடைய மேல் மனதையும் நம்முடைய ஆழ்மனதில் சரியாக ஒருநிலைப்படுத்தி அமைதியாக வைத்திருந்தால் இந்த உணர்வு பேசுவது நமக்கு நன்றாக கேட்கும் அதன் பேச்சை நாம் கேட்டு அதை செயல்படுத்தினால் எப்பேர்பட்ட பிரச்சனையாக இருந்தாலும் 100% சரியாகி நமக்கு வெற்றியைக் கொடுக்கும். மேல் உள்ள இரண்டு மனங்கள் அவ்வளவு சீக்கிரத்தில் நம்மை அது பேச்சைக் கேட்கவே விடாது அது மட்டும் நாம் கவனமாக இருக்க வேண்டும் சரி உணர்வுகளை புரிந்து அதனால் ஏற்படும் பிரச்சனைகளுக்கு காரணத்தை அறிந்து அதை நாமே நம் உள்ளுணர்வின் மூலம் எப்படி தீர்வு காண்பது என்பதை தெளிவாகப் பார்த்தோம் சரி இப்படி சந்தோஷம் உணர்விலேயே இருப்பது என்பதை பார்த்தல் நம் இறைவனையும் பார்க்கலாம் அல்லவா எப்படி என்று பார்ப்போம் நம்முடைய சந்தோஷம் உணர்வின் இருப்பிடமே நம்முடைய உள்ளுணர்வு தான் அதுதான் நம்முடைய இறைவன் நம்முடைய குரு இங்குதான் மனமே குரு என்பது கூடுகிறார்கள் நீங்கள் நிறைய கேள்விப்பட்டு இருப்பீர்கள் மனமே குரு என்பதற்கு இதுதான் உண்மையான அர்த்தம்.
சரி அதற்கு என்ன செய்ய வேண்டும் அந்த உள்ளுணர்வின் மேல் நாம் முழு கவனம் செலுத்த வேண்டும் தினமும் அதற்கென்று நேரம் ஒதுக்கிக் கொள்ளவேண்டும் அதை கவனிக்க வேண்டும் அதை கவனித்தால் என்ன தான் ஆகும் ஒன்றும் ஆகாது சந்தோஷம் தானாக வரும் மனம் இல்லாத நிலைக்கு நீங்கள் சென்று சந்தோஷத்தை பெறுவீர்கள் மனம் ஒருநிலைப்படும் சந்தோஷம் பொங்கி வழியும் எப்படி என்றால் நாம் யாரிடமும் பேசாமல் தனியாக அமர்ந்து இதை கவனிக்கவேண்டும் நமக்கு தெரிந்த சந்தோஷம் என்பது போலியான வெளியே மனிதர்களிடம் அனுபவிக்கும் சந்தோஷம். ஆனால் இந்த சந்தோஷம் என்பது நமக்குள்ளேயே இருக்கும் நம்மிடத்தில் உண்மையாக நிரந்தரமாக சந்தோசத்தை இது கொடுக்கும். இவ்விதம் சந்தோஷம் இருந்தால் என்ன ஆகும் தெரியுமா அதுவும் நம்முடைய அடிப்படை வாழ்க்கை நன்றாக இருக்கும் இதற்குத்தான் இயேசு கூறுகிறார் உங்களையே நீங்கள் நேசியுங்கள் அதாவது நம்மை நாமே நேசிக்க வேண்டும் இதற்கு அர்த்தம் இதுதான் நம்மிடத்தில் நாம் எவ்வளவு அளவிற்கு நம்மை நமக்குள் பின்னோக்கி செல்கிறோம் மற்ற உணர்வுகள் எல்லாம் மறைந்து விடும் போலியான வெளி உலகத்திற்கு நாம் உணர்வுகளை அடமானம் வைத்து விட்டு கஷ்டப்பட மாட்டோம் இவ்வித தன்னுணர்வு நிலையிலேயே நாம் இருக்கும்போது நம்மளின்மேல் நமக்குஅபரிமிதமான அன்பு கூட ஆரம்பித்து விடும் நம்முடைய அன்பின் அதிர்வலைகள் மற்றவர்களை காந்தம் போல் இருக்கும் சந்தோஷம் உணர்வு அன்பாகவும் அமைதியாகவும் மாறும் பிறகு அந்த உணர்வு மட்டும்தான் நமக்குள் இருக்கும் அதுதான் நான் கூறும் தெய்வீக உணர்வு அதாவது இறை உணர்வு நிலை.
https://www.youtube.com/results?search_query=vinodhan
1. நம்முடைய உள்ளுணர்வை கவனித்தல்
2. நம்முடைய நகைச்சுவை உணர்வை அதிகரித்து அழகாக பிறர் மனம் புண்படாதவாறு நகைச்சுவை உணர்வை பகிர வேண்டும்
3. நமக்கு பிடித்த விஷயங்களில் ஈடுபட வேண்டும் பிறரை பாதிக்காமல்.
4. பிறருடன் நம்மை ஒப்பிட்டுப் பார்க்க கூடாது
5. போதுமான தேவைக்கு மட்டும் நம்மை நாம் செயல்படுத்த வேண்டும் தேவையில்லாமல் கண்ட கண்ட ஆசைகளை வளர்த்துக் கொள்ளக் கூடாது.
6 மெல்லிய இசை பாடல்களை கேட்க வேண்டும் அது நம்முடைய அமைதி நிலையை அதிகப்படுத்தும்.
7. அழகிய நினைவலைகளை கொண்டு நாம் நம்மை சந்தோஷப்படுத்தி கொள்ளவும் அதுவும் நிகழ்காலத்தில் ஏனெனில் நாம் எல்லோரும் நினைவலைகளை இணைத்து நிகழ்காலத்தில் வருத்தமும் கவலையும் படுகிறோம் அதை நிகழ்காலத்தில் நினைத்து நிகழ் காலத்திலேயே சந்தோஷப்பட வேண்டும்.
8. கற்பனை ஆற்றல்களை வளர்த்துக் கொள்ளுங்கள் நாம் ஒரு சில விஷயங்களை ஆசைப்படலாம் அதனை நிகழ்காலத்தில் இருந்து கொண்டு அதனை கற்பனை படுத்தி வாழ வேண்டும் அந்த உணர்வை மிக அற்புதமாக அனுபவித்து பாருங்கள் நாம் கற்பனையில் செய்கிறேன் விஷயத்தை விட நம் ஆசையே நிஜத்தில் நடந்தால் கூட நமக்கு அவ்வளவு சந்தோஷம் இருக்காது எனவே கற்பனை திறன் மிக அழகானது நாம் அதை செயல்படுத்த தொடங்க வேண்டும்.
9. கவலை என்பது ஒருவித சோகமான உணர்வு எப்படி என்றால் நமக்கு கவலை இருக்கிறது என்றால் ஏதோ கடந்தகாலம் நினைவலைகள் நம்மை துன்பப்படுத்தி நமக்கு ஞாபகத்தை கொடுத்து நாம நினைக்கிறோம் அதனால் கவலை ஏற்படுகிறது பிறகு நடக்காத எதிர்காலத்தை நினைத்து கவலை படுகிறோம் அப்படி வரும்பொழுது துன்ப நினைவலைகளை மறந்து விடுங்கள் நம்முடைய கடந்த காலத்தில் இந்த மை சந்தோஷம் ஏற்படுத்திய நினைவலைகளில் ஞாபகப்படுத்தி அதனை கவலை வரும்போது மடை மாற்றம் செய்து பாருங்கள் கவலையை கையாளக் கற்றுக் கொள்வீர்கள்.
10. நமது மனதைப் பற்றி ஒரு விஷயத்தைத் தெரிந்து கொள்ளுங்கள் எவன் மனதை அடக்க நினைக்கிறானோஅவன் உள் மனதை அடைய முடியாது அதுவே மனதை எவன் புரிந்து கொள்கிறானோ அவன் மனதில் உள் மனதிற்கு செல்கிறான் இதில் புலிகள் தான் சூட்சமம் அடக்குதல் கிடையாது.
11. மனம் என்பது ஒரு மகிழ்ச்சியை உருவாக்கும் இயந்திரம் என்ன நிலையாக இருந்தாலும் மனம் மகிழ்ச்சியற்ற இருக்க ஏதோ ஒன்றை கண்டுபிடித்து வைத்திருக்கும் அதனுடைய முழு தொழிலே மகிழ்ச்சியை உருவாக்குவதுதான்.
12. மனதை புரிந்து கொள்ளுங்கள் ஆழ்மனதை கடந்து உள்ளுணர்வில்தான் பொக்கிஷம் நிறைந்த சந்தோஷம் உள்ளது. அதில்தான் அன்பு உள்ளது அதுதான் நம்முடைய இறை உணர்வு ஆகவே இவ்வித மாயை நாம் புரிந்து கொண்டு நம் உள்ளுணர்வு இடம் சென்றால் நமக்கு சந்தோஷம் பொங்கும் அந்த சந்தோஷத்திற்கு முன்பே எவ்வித மனிதர்களாலும் நமக்கு தர முடியாது.
13. எனவே எல்லா வித உணர்வையும் கவனிக்க வேண்டும் எல்லாம் நாம் உருவாக்கியதாக தான் இருக்கும் அதன்மூலம் நினைவலைகளை மனம் உருவாக்கி அவ்வித நிலை வலிகளுக்கு ஏற்றமாதிரி நமக்கு உணர்வுகளை மனம் கொடுக்கிறது ஆகவே அனைத்தும் கவனித்து அதிலிருந்து வெளியே வந்து சந்தோஷமான வாழ்வை வாழ்வோம்
14. யார் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் எதற்காக இப்படி செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதைப்பற்றி எல்லாம் எவ்வளவுக்கு எவ்வளவு தூரமாக இருக்கிறீர்களோ அவ்வளவு அளவுக்கு மகிழ்ச்சியாக நாம் இருப்போம் பிறரது விஷயங்களை தெரிந்து கொள்ளாமல் இருப்பது நமக்கு மகிழ்ச்சியை அளிக்கும்.
15. இதன் மூலம் நம் பிறரின் சந்தோசத்திற்காக அன்புக்காக அரவணைப்பு காக ஏங்கமாட்டோம் ஏனெனில் அதை அணைத்தும் நமக்குள் தான் இருக்கிறது அதை நாம் அடைந்து விட்டோம் என்றால் இறையுணர்வும் பிரபஞ்ச உணர்வுடன் நாம் தொடர்பு கொண்டு விடுவோம் இதன் மூலம் நாம் பிறரின் உணர்வுகள் சிக்க மாட்டோம்.
16. எனவே மனிதர்கள் என்பது பொய்யான வேடிக்கையான ஒரு நாடகம் அவர்கள் வருவார்கள் அவர்களே சென்றுவிடுவார்கள் யாரும் நிரந்தரம் இல்லை ஆகவே நம்முடைய உணர்வுகளை மற்றவர்களிடம் கொடுக்க வேண்டாம் அவர்கள் இல்லை என்றால் அதன் நினைவுகள் நம்மை பாதிக்கும் உணர்வுகளை மற்றவர்கள் மேல் வைக்க வேண்டாம் எதற்காக என்றால் நாம் நாம் சந்தோஷமாக இருக்கிறோம் அதனால் திடீரென அவர்கள் இல்லாமல் போகும் போது துன்பத்தின் வலி மிகவும் கொடுமையாக இருக்கும் எனவே நாம் சந்தோஷம் நம்மிடத்தில் தான் உள்ளது வெளியே இல்லை ஆகவே அனைவரும் சந்தோஷம் கொண்ட அமைதியை பெற்றால்ஒழிய உண்மையான பரிபாஷைகளற்ற ஆன்மீகத்தை நம்மால் உணரமுடியும் இதுவே உண்மையான ஆன்மீகம்.
17. நம்முடைய உடலில் உள்ள உணர்வுகளை மாற்றாமல் நம்முடைய வாழ்க்கை எப்போதுமே மாறாது ஆகவே அனைத்தையும் கையாளத் தெரியவேண்டும். பிறகு குற்ற உணர்ச்சி ஏற்று வாழ பழகவேண்டும் ஏனென்றால் நாம் தெரிந்தும் தெரியாமலும் ஒரு செயலை செய்திருப்போம் ஆனால் அது தவறு என்று சமூகம் நமக்கு கற்றுக் கொடுத்திருக்கிறது அதனால் நமக்கு குற்ற உணர்வு ஏற்படுகிறது இதன்மூலமும் நமக்கு கவலை ஏற்படுகிறது. நாம் தவறு செய்யும் போது தான் நாம் அதில் என்ன உள்ளது என்று கற்றுக் கொள்வோம் எனவே குற்ற உணர்வை தவிர்த்துவிடுங்கள் அவ்வுணர்வு நிம்மதியையும் சந்தோஷத்தையும் கெடுக்கும். என்னை பொருத்தவரை தவறு என்பது பிறரை இடையூறு செய்யாமல் வாழ்வது தான். பிறரை கஷ்டப்படுத்தி யோ அவர்களை துன்பப்படுத்திய வாழும்போது நமக்கு வருகின்ற குற்ற உணர்வுக்கு மட்டும் நமக்கு உள்ளே இருக்கும் கடவுளிடம் மன்னிப்பு கேட்டு அதை அப்பொழுதே மறந்து விட வேண்டும் அதுவே குற்றவுணர்வை ஒழிக்கும் சிறந்த ஆயுதம்.
18. நாம் உடலையும் மனதையும் மேலே சொன்னவற்றை புரிந்துகொண்டு நடந்தால் ஒழிய நம் வாழ்க்கை வாழ்ந்ததற்கான ஒரு அர்த்தம் இருக்கும் நமக்கு வாழ்க்கையின் மீது முழுமையான திருப்தி ஏற்படும் நமக்குள்ளேயே அனுபவிக்கும் அமைதி சந்தோஷம் என்பது விலைமதிப்பற்ற ஒரு பொக்கிஷம் ஆகும்.
19. புத்தகம் படிக்கும் பழக்கம் நாம் அனைவருக்கும் வரவேண்டும். பல புது விஷயங்களை புத்தகம் படிப்பதன் மூலம் தெரிந்து கொள்ளலாம் அதன் மூலம் நமக்கு புரிதல்கள் உண்டாகும் வாழ்க்கை மிகவும் சுவாரஸ்யப்படும்.
20. ஒரு விஷயத்தை நாம் அனைவரும் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும் இந்த உலகத்தில் தற்செயல்விதி என்கிற ஒரு விதி செயல்படுகிறது. விதியின் மூலம்தான் நாம் அனைவரும் இயங்குகிறோம். அதன் மூலம் தான் நமக்கு உணர்வு நிலைகள் இடத்திற்கேற்ப சூழ்நிலைக்கேற்ப மாறுபடுகிறது நாம் நம்முடைய தற்செயலாக நடக்கும் உணர்வு நிலையை அப்படியே விடாமல் அதையே பிடித்துக் கொள்வதால் நம் எண்ணத்திற்கேற்ப மாறி நமக்கு அனைத்திலும் நடக்கிறது. ஏனெனில் ஒவ்வொரு உணர்வு நிலைக்கும் ஏற்படும் நம் எண்ண அலைகளை நாம் நம்முடைய மனதில் பதிவு செய்வதால் நமக்கு நடக்கும் தற்செயல் விதியை நாம் எண்ணங்களால் அதை நாமே பழகிக் கொள்கிறோம். ஏன் பாழாக்கிக் கொள்கிறோம் என்றால் நமக்கு நடக்கும் சந்தோஷத்தை தவிர கவலை பதட்டம் இது போன்ற உணர்வையே நம் ஆழ்மனம் மிக வேகமாக விரித்து வைத்து நம்மை அடுத்த கட்டத்திற்கு செல்ல விடாமல் தடுக்கிறது ஆகவே நம்முடைய வாழ்க்கை நதிமாதிரி அதுதான் தற்செயல் விதி தற்செயல் விதி என்பது (நதி) நாம் அதில் நீந்த வேண்டாம் அதனைப் புரிந்து கொண்டு நமக்கு வரும் உணர்வு நிலைகளை அப்படியே ஏற்று அதற்கு எவ்வித எதிர்வினையும் காட்டாமல் அப்படியே இருந்தால் போதும் அந்த வாழ்க்கை என்கிற நதி இறைநிலை என்கிற கடலுக்கு நம்மை கொண்டு சென்றுவிடும் ஆகவே தற்செயல் விதி ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக் கொள்வோம் மற்ற விதி அனைத்தும் நம்மை எவ்வளவு பாதிக்கிறது என்று நாமே இப்போது அனுபவித்துக் கொண்டுதான் இருக்கிறோம். எனவே தற்செயல் விதி என்பது அனைத்தும் நிகழ்வும் தற்செயலே அதனை நாம் புரிந்து கொண்டு எதிர்க்காமலும் அதை மனதில் பதிய வைக்காமலும் இருக்கவேண்டும். மனதில் பதிய வைத்த பிறகு அதனை நாம் நம்பினால் பிறர் சொல்லும் அனைத்தையும் உண்மை என்று நாம் நம்பி அதிலேயே மாற்றிக் கொள்வோம் அப்புறம் வாழ்க்கை என்கிற நதியில் நாம் ஒருபோதும் மிதக்கமாட்டோம் சிக்கிக் கொள்வோம் கடலிடம் ஒருபோதும் செல்லமாட்டோம்.எனவே மேலே சொன்னதைபுரிந்து கொண்டால் சந்தோஷ உணர்வு மட்டும்தான் நமக்கு மிஞ்சும் அதுவே நம்மை இறைவனிடம் கொண்டு செல்லும் அதுதான் நம்முடைய உள்மனம் அதாவது உள்ளுணர்வு.
21. இவ்வுலகில் இருந்தால் ஒரு மாயாஜாலம் நமக்கு நடந்துகொண்டே இருக்கும் அது என்னவென்றால் நம்முடைய தேவையை நமக்கு நடக்கும் எது நடக்க இருக்கிறதோ அதுவும் மிகச் சிறப்பாக நடக்கும். அதை சந்தோஷமாக ஏற்றுக்கொண்டால் போதும் அவ்வளவுதான் வாழ்க்கையில் நம்முடைய மிகப் பெரிய சொத்து என்பது நாம் இல்லாவிட்டாலும் நாம் யாரென்று சொல்ல வைப்பது பணமோ பொருளோ அல்ல நம்முடைய குணாதிசயமும் உடல் ஆரோக்கியமும் ஒழுக்கமும் தான் நாம் யார் என்று சொல்ல வைக்கும்.
22. மற்றவர்களை கஷ்டப்படுத்தாமல் கிடைக்கின்ற சந்தோஷம்தான் தம்முடைய அது நம் வாழ்க்கை நமக்கு பிடித்த மாதிரி வாழ வேண்டும் பிறர் விமர்சனங்களை காதில் போட்டுக்கொள்ள வேண்டாம். அது நம் உணர்வு நிலையை பாதிக்கும் ஒரே நிபந்தனை எப்பேர்பட்ட விஷயங்களை நாம் செய்தாலும் சரி ஆன்மீகத்திலும் இறை நிலையை அடைய நினைத்தாலும் சரி மிக முக்கியமான ஒரு குணாதிசயம் வேண்டும் அதுதான் நம்முடைய சுய ஒழுக்கம் (self Discipline)…நம் குணாதிசயத்தை அழகுப்படுத்த ஒரு மூன்று உணர்வு நிலைகளை அதிகப்படுத்தவேண்டும்அவை Love..Self Discipline.. Happiness. இம்மூன்று குணாதிசயத்தை அதிகப்படுத்தினால் நம்முடைய குணாதிசயமானது தெய்வீக உணர்வாக மாறும் வாழ்க்கை மிக அற்புதமாக இருக்கும்… நன்றி… மகிழ்ச்சி 🤩..(Learn To Let go..This Is The Secret Of Happiness)🌟
Writer K.SivaGanesh…………..