குருவிடம் சென்று எப்படி சீடன் ஆவது?
part 2
இது என் இரண்டாவது கட்டுரை சமனுருடன் இன்னொரு நாள் தொடங்கியது ஏன் இவருக்கு சாமி கண்ணு என்று அழைக்கிறார்கள் என்று எனக்கு புரியவில்லை தேடினேன் ஆராய்ந்தேன் அவருடன் மொத்தம் 16 சீடர்கள் இருந்தார்கள் அந்த சீடர்கள் அற்புதமானவர்கள் அதிலும் நானும் ஒருவன் ஆவேனா என்ற ஆவல் வந்தது அவர்களிடம் கேட்டேன் அவருடைய பெயர் சமன் என்று சொல்கிறீர்கள் ஆனால் ஐயா சாமி கண்ணு என்று ஏன் அழைக்கிறீர்கள் என்று கேட்டேன் அப்போதுதான் புரிந்தது சாமி கண்ணே என்பது அவர் கற்றுக் கொண்ட வித்தையினால் வந்தது என்று புரிந்தது அவர் வர்மத்தில் சிறந்த ஆசான் சரக்ககலையில் உயர்நிலை ஆசான் சித்தர்களைப் போல சித்த நிலையை அடைந்தவர் எல்லா கலையும் அவருக்கு தெரியும் 65 ஆவது கலையாம் இருக்க கூடிய சாகாக்களையும் அறிந்தவர் என்று எனக்கு புரிந்தது அவருடன் மனம் இளமை தோற்றத்துடன் இருப்பார் சித்தர்கள் இவரை சித்தர் என்று அழைப்பர்
குருவின் உடல் தேஜஸ்
உடல் ஒரு அசாதாரணமான உடல் தோற்றம் இருக்கும் அவருக்கு வயது எனக்கே தெரியாது ஆனால் சக்தி படைத்தவர் போல் இருப்பார் ஏன் சாமி கண்ணு என்று பெயர் வந்தது அவர் அவரை யார் பார்த்தாலும் அவருடைய கண்ணை கொண்டு தான் எல்லோரையும் பார்ப்பார் கண்ணை ஒரு முறை பார்த்தார் ஆனால் எதிரில் இருப்பவர்கள் நிலைகுலைந்து போவார்கள் உண்மையை மட்டும் பேசுவார் தன்னையே மறந்து விடுவார் அவர் ஏதோ ஒன்று மாயம் செய்வார் என்று எல்லோருக்கும் தெரியும் ஆனால் அவர் ஒன்றும் செய்ய மாட்டார் என்று அவருக்கு தெரியும் அவருடைய கண்கள் இருந்து ஏதோ ஒரு சக்தி ஒளி எப்போதும் பாய்ந்து கொண்டே இருக்கும் அது எப்படி என்று யாருக்கும் புரியாது இந்த சக்தி சாமிக்கு தான் இருக்கும் என்று நாம் எல்லாம் சொல்வோம் அதேபோல் இந்த சமணன் சாமி கண்ணாக மாறினார் எல்லோரும் அவரை சமணன் என்று அழைக்காமல் சாமிக்கண்ணு என்று அழைக்க ஆரம்பித்தார்கள்.
பல கலைகள் அறிந்த வித்தகர்
நானும் அவரை பார்த்த பொழுது அவரை சமணன் என்று ஏற்றுக் கொள்ள முடியாது சாமி கண்ணு தான் ஏற்றுக் கொள்ள முடியும் எல்லா கலைகளிலும் அற்புதம் வில் வித்தை தெரியும் அவருக்கு பல கலைகள் இருந்தவர் எப்படி இதெல்லாம் அறிந்தார் பெரியார் அவர்களுடைய குருவை குறித்து எப்போதும் அவர் பேசிக் கொண்டே இருப்பார் யார் அவர் தான் ராஜங்கி சித்தர் இதுவரை யாரும் கேள்வி படாத ஒரு பெயர் நானும் ஒன்று தான் கேள்விப்பட்டேன் அவர் அதிகமாக தன்குருவை குறித்து பேசிக்கொண்டே இருப்பார் பேச பேச எல்லோரும் தன்னையே மறந்து விடுவார்கள் நான் அவரோடு பசி உணர்வை அற்று இரண்டு நாள் நான் என்னையே மறந்திருந்த காலம் இருந்தது அவர் பேச்சை கேட்கும் பொழுது என்னையே மறந்து விடுவேன் அவரிடம் ஏதோ இருக்கிறது என்று உணர்ந்தேன் ஆனால் என் மனம் சொன்னது அவரிடம் எதையும் கற்றுக் கொள்ள வேண்டிய அவசியமில்லை அவருடைய அன்புக்காக ஏங்கிக் கொண்டிருந்தேன் இனிமேல் தவித்தேன் ஆனால் அவர் என்னிடம் எதுவும் சொல்லவில்லை எனக்கு எதுவும் கற்றுத் தந்தான் அவருடைய அன்புக்காக காத்துக் கொண்டிருந்தேன் காத்துக் கொண்டிருக்கிறேன் மூன்று மாதம் ஆனது பிறகு அவர் என்னிடம் பேசினார் என்னை அவர் வினோதா என்று அழைத்தார்.
குருவை முதல் முறையாக தொட்டால் என்னவாகும்
நீ ஒரு வினோதமானவன் தான் என்று என்னை அழைத்தது அவருடைய சுண்டி வரலை என்னிடம் கொடுத்தார் நான் அதைப் பிடித்துக் கொண்டேன் என்ற ஒரு பேரானந்தம் குரு தான் அவர் என்று புரிந்து மாதா பிதா குரு தெய்வம் இதில் எல்லோருக்கும் மாதா பிதா கிடைக்கலாம் ஆனால் குரு கிடைப்பாரா இல்லையா என்று தெரியாது ஆனால் ஒரு மனிதனுக்கு குரு கிடைத்தால் கோடி நன்மை இதையெல்லாம் வார்த்தையாக இருக்கிறது அனுபவித்தால்தான் தெரியும் அந்த வார்த்தை என் வாழ்க்கையில் நான் அனுபவித்தேன் அந்த சுண்டி விரலை படித்தேன் பிடித்த பிறகு தான் தெரிந்தது கோடி நன்மை என்னவென்று இது எல்லாம் அனுபவம் ஒவ்வொரு மனிதனுக்கும் ஏற்பட்ட ஒரு அழகு என் வாழ்க்கையில் சென்னையில் இருந்தது ஆனால் அவருடைய ஊர் சென்னை அல்ல அவர் பிறந்தது கன்னியாகுமரி மாவட்டம் வளர்ந்தது கேரளா அவருக்கு பல மொழிகள் தெரியும் தன்னுடைய குருவை குறித்த தேடுதலை நோக்கியே இருப்பார் ஒரு இட்ட கட்டளை நிறைவேற்ற தான் இந்த பூமியில் வந்தாரா அவர் சொன்னதை செய்து கொண்டே இருப்பார் உங்களிடம் அதை சொல்லிக் கொண்டே இருப்பார் நான் முதல்முறையாக அவரை தொட்டுப் பார்த்து உணர்ந்தேன் பிறகு அவர் என்னை விட்டு தூரமாக சென்றார் மறுபடியும் அவர் கன்னியாகுமரிக்கு போய்விட்டார்
குருவின் மிகச்சிறந்த அக்கறை
ஆனால் போகும் முன்பின் இடம் சொன்னார் உன் வீட்டில் என்னை பார்த்ததாகவும் என்னை நீ உன்னுள்ள அனுபவித்த அனுபவத்தை யாரிடமும் சொல்லாமல் உனக்குள்ளே ரகசியமாக வைத்து நான் உன்னோடு உறவாடுவேன் என்று சொன்னால் நான் சொன்னேன் எனக்கு எதுவும் தெரியாது ஐயா நீங்கள் எது சொன்னாலும் கேட்கிறேன் இதுதான் என் பதில் அவர் சென்ற பிறகு எனக்குள் ஏற்பட்ட ஏக்கம் தவிப்பு என்னென்னமோ நடந்தது அதாவது ஒரு காதலியை நம்மை விட்டு சென்று விட்டால் எப்படி தோன்றும் அதைவிட ஆயிரம் மடங்கு தோன்றினது ஏதோ ஒரு தோல்வி வந்தது போல் நடந்தேன் வீட்டில் நான் யாரிடம் பேசவில்லை பள்ளிக்கூடத்திற்கு செல்கிறேன் வருகிறேன் சாப்பிடுகிறேன் போகிறேன் ஆனால் என் மனதில் அவரைப் பற்றிய நினைப்பு நீங்கா வண்ணம் இருந்தது எல்லோரும் என்னிடம் கேட்கிறார்கள் ஏன் நீ கவலையாக உள்ளாய் என்று கேட்பார்கள் நான் சொல்வேன் எனக்கு எதுவும் தெரியாது ஆனால் கவலையாக இருப்பேன் அந்த கவலை எப்போது போகும் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன் அதனால் அவர் இருக்கும் இடத்தில் பக்கத்தில் ஒரு வீட்டில் வளர்ப்பு மீன் கடை இருந்தது அந்த கடைக்கு போவதாக வீட்டில் பொய் சொல்லி இரண்டு நாளைக்கு ஒரு முறை எப்படியாவது அங்கே போய்விட்டு போய்விட்டு வருவேன் வந்து விடுவார்களோ வந்துவிடுவார் என்று அந்த வீடு அவருடைய தம்பி உடைய வீடு சரி காத்துக் கொண்டு இருந்தேன் வரவே இல்லை
குரு மறைந்தார் ஒரு நொடி விளையாட்டாக
ஒவ்வொரு நாளும் இரவும் எமக்கு அழுகைதான் என் தலையணை இணைந்தது அழுது கொண்டே இருப்பேன் அவரைப் பார்க்க வேண்டும் என்று இயங்கிக் கொண்டே இருக்கும் இருக்கும் தேம்பித் தேம்பி அழுது கொண்டே இருப்பேன் என்னுடைய தலையணை முழுவதும் உப்பாக மாறினது இப்படியே நான்கு மாதங்கள் சென்றது இரண்டு நாளைக்கு ஒருமுறை போய்க்கொண்டிருந்த நான் என் மனம் சொன்னது எப்போது நான் சென்றேனோ அந்த நாள் அப்போது சொல்லென்று சொன்னது அதேபோல் வாரத்திற்கு ஒரு முறை சனிக்கிழமை சென்று விடுவேன் திடீரென்று போய் பார்த்தேன் வியந்தே போனேன் என் குரு அங்கே மர பளகையில் சாய்ந்து கொண்டிருந்தார் என்னை ஒரு முறை திரும்பி பார்த்து வினோதா வந்து விட்டாயா வா உன் வருகைக்காக காத்துக் கொண்டிருந்தேன் என்று சொன்னார் உள்ளே சென்றேன் பவ்யமாக மரியாதையாக பயத்துடன் அவர் அருகில் போய் உட்கார்ந்து அவர்களுக்கு பல உபதேசங்களை சொன்னார் அன்றுதான் ஆன்மீக உபதேசம் என் உள்ளுணர்வை தொட்டது சிறுவயதில் இருந்து இறைவனை தேடின நான் இதற்கு ஒரு விடை கிடைத்தது குரு இருந்தால் மட்டுமே இறைவனிடம் செல்ல முடியவில்லை என்னிடம் ஆறு மணி நேரம் பேசிக் கொண்டிருந்தார் ஆறு மணி நேரம் எப்படி போனது என்று தெரியவில்லை அதில் பேசி ஐந்து மணி நேரம் அவருடைய ராஜாங்கி குறித்து மட்டுமே அவர் உரிமை எவ்வளவு பக்தி கொண்டிருந்தார் என்று புரிந்தது குரு பக்தி என்றால் எப்படி இருக்க வேண்டும் என்று புரிந்தது குருபக்தியை தயவு செய்து கற்றுக் கொள்ளக் கூடாது பார்க்க வேண்டும் உணர வேண்டும் அனுபவிக்க வேண்டும் அப்போதுதான் புரியும் ஒரு குரு பக்தியை தனக்குள் தவறாக புரிந்து கொண்டு நடிக்கிறார் பல பேர்கள் ஆனால் நானும் எனக்கு எதுவும் தெரியாத வயதில் இருந்ததால் என் குரு எப்படி இருந்தார் என்கிற உணர்வை நான் உணர்ந்தேன் அவரைப் போன்ற ஒரு பக்திகள் சிறந்தவனாக மாற வேண்டும் என்று உணர்ந்தேன் அவரைப் போன்றவை குருபக்தியில் நிறைந்து என் வாழ்க்கை.
உண்மையான குரு பக்தி எப்படி உள்ளுக்குள் வரும்
என் வாழ்க்கையில் முதல் நாள் முதல் தருணம் ஒரு குரு பக்தியாய் இருந்தது அன்றிலிருந்து இன்று வரை அதே பக்தியில் இருக்கின்றேன் ஒரு சின்ன அணு அளவு கூட மாற்றம் ஏற்படவில்லை குரு பக்தி ஒருபோதும் மாறாது குரு பக்தி இருந்தால் தான் அவருடைய இணைந்து வாழ முடியும் அவருடைய சொல்லை கேட்க முடியும் இல்லை என்றால் கேட்க முடியாது அந்த குரு பக்தியை என் குருநாதர் எனக்கு உபதேசமாக புகட்டவில்லை அவருடைய குருவை குறித்து என்னிடம் பேசுவதை பார்த்து ரசித்து அவர் என்ன நினைத்தாரோ அதேபோல் அதேபோல் ஏன் அவரைப் போலவே நானும் மாறினேன் சாமிக்கண்ணு எப்படி உருபத்தியில் சிறந்ததாயிருந்தாரோ அதேபோன்று நானும் மாறினேன்.
அந்த நொடி குருவுக்கு சீடன் ஆனேன் முதல் நாள் இது ஒரு அனுபவம் வார்த்தை அல்ல பல பேர் குருவுக்கு சீடன் என்று சொல்லிக் கொள்ளலாம் பார்ப்பவர்கள் எல்லாரும் நான் அவருடைய சீடன் என்று சொல்லலாம் பார்ப்பவர்கள் எல்லோரையும் கூறி என்றும் சொல்லலாம் அது உங்களுடைய அறிவீனம். ஆனால் இது ஒரு அனுபவம் அவருடைய 17ஆவது குட்டி சீடன் ஆனேன்
தொடரும் மறுபடியும் சமணனுடன்
#guru #bakthi #vinodhan #seedan #gurubakthi